சந்தியாவின் மரணத்தில் உள்ள மர்மம்- தமிழக அரசுக்கு சந்தியாவின் தந்தை கோரிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Feb, 2019 04:46 pm
sandhya

சந்தியாவின் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தியாவின் கொலையில் உடந்தையாக உள்ளவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தை உறைய வைத்த சந்தியா கொலை வழக்கில் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சந்தியாவின் குடும்ப பின்னணி நிலவரங்களும் வெளியாகி வருகின்றன.
சென்னையில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் துண்டிக்கப்பட்ட கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கடந்த 6ம் ‌தேதி துப்பு துலங்கியது.

கொலை செய்யப்பட்ட பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பது தெரிய வந்தது. அவரை கொலை செய்ததாக சந்தியாவின் கணவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு காதல் இலவசம் என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டவர்.

கொலை செய்யப்பட்ட சந்தியா குறித்து பின்னணி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் சந்தியாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்து சந்தியா சென்னை சென்று விட்டதாக அவரது பெற்றேரர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதன்படி பார்த்தால் அடுத்த 15 நாட்கள் சந்தியா எங்கிருந்தார்?

அவரது செல்போன் என்னவானது? அவரது நண்பர்கள் வட்டாரத்தில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? சம்பவம் நடந்த அன்று இரவில் சந்தியா யாரை பார்க்க செல்வதாக இருந்தார். பாலகிருஷ்ணன் சந்தியாவை கொலை செய்த பிறகு பிரேதத்தை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் துண்டுகளாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது  அந்த இயந்திரத்திலிருந்து சத்தம் வெளியில் கேட்காமலா இருந்துள்ளது? 

இந்த சத்தம் வீட்டு உரிமையாளர்களுக்கு கேட்காமல் போனது எ‌ப்படி என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன என்று நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் சந்தியாவின் தந்தை ராமசந்திரன், சகோதரி சஜிதா ஆகியேரர் அருமனைநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் சந்தியாவின் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தியாவின் கொலையில் உடந்தையாக உள்ளவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

https://www.newstm.in/news/tamilnadu/special-article/55796-sandhya-murder-case.html

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close