இசைப்பயணம்-6... தபேலாவும், மிருதங்கமும்..!

  டேவிட்   | Last Modified : 13 Feb, 2019 04:40 pm
about-music-6-tabla-and-mridangam

இசைப்பயணத்தில் நாம், ஆர்மோனியம், தம்புரா பற்றி பார்த்தோம். இன்றைய இசைப் பயணத்தில் நாம் தபேலா மற்றும் மிருதங்கம் பற்றி காண்போம். 

தபேலா என்னும் தோலிலான தாளக் கருவி இரண்டு பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது பயான் என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது தயான் என்றும் அழைக்கப்படுகிறது. 

பயான் மண் அல்லது செம்பினால் தயாரிக்கப்படுகிறது.  தயான் மரத்தினால் செய்யப்படுகிறது. இரண்டினதும் மேற்பாகம் தோலினால் மூடப்பட்டு, தோல் வாரினால் இழுத்து கட்டப்பட்டிருக்கும். 

உருளை வடிவான மரத்துண்டுகள் தபேலாவில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும் இழுத்து நகர்த்துவதன் மூலம் ஸ்ருதியைக் கூட்டவும், குறைக்கவும் செய்யலாம்.. தபேலா ஒரு அடி முதல் 15 அங்குலம் வரை நீளம் உள்ளது. பயான் 1 அங்குலம் அல்லது 2 அங்குலம் தயானை விடக் குறைவானது ஆகும். மிருதங்கத்தைப் போன்று மாவும், தண்ணீரும் கலந்த மை நடுவில் பூசப்படுகிறது. இது நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும்.

தபேலா அல்லது தப்லா (Tabla), (தமிழில் இருமுக முழவு) இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியமாகும். கடந்த 200 ஆண்டுகளிலேயே தபேலா பிரபலமடைந்துள்ளது. கச்சேரியின் பிரதான பாடகர் அல்லது வாத்தியக்கருவியை இசைப்பவர் தபேலா ஜதிகளை அனுசரித்தே பாட அல்லது வாத்தியத்தை இசைக்க வேண்டும்.

தபேலாவை ஆடவர் மட்டும் இன்றி, மகளிரும் குழந்தைகளும் கூட தற்போது கற்று வருகின்றனர். 

தபேலாவைப் போலவே, மிருதங்கமும் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கர்நாடக இசை நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி. இதையொத்த இசைக்கருவி சிந்து சமவெளி நாகரிக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 

பெரும்பாலும் பலாமரக் கட்டையைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை சிறியதாகவும், மற்றமுனை சற்றுப் பெரியதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் உருளை வடிவில் அமைந்துள்ளது.

திறந்த இரண்டு முனைகளும் தபேலாவைப் போலவே தோலினால் மூடப்பட்டு, தோல் வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படுகிறது. 

(தொடரும்...)
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close