கமல் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி - பகுதி 5

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 15 May, 2019 08:52 pm
article-on-kamalhassan

‛ஒரு நல்ல டைரக்டர், தான் சொல்லும் கதையில் பாரபட்சம் இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் சூழலைக் காட்சி படுத்தியிருக்கிறார். அதைப் போய் ஹிந்துத்துவா என்றும், முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்றும் சிண்டு முடித்து விடுவது முறையல்ல’ என்று சிலர் கேள்வி கேட்கலாம். 

அப்படியான கேள்வியில் எனக்கும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. கமல்ஹாசன் என்றொரு முதிர்ந்த இயக்குநர், அத்தனை சாதாரணமாக காட்சிகளை வைத்து விடுபவர் அல்ல. அதுவும், மருதநாயகத்தில் தீராத மோகத்தை எல்லாம் சேர்த்து வைத்து, ஹேராமில் செதுக்கிச் செதுக்கிக் காட்சிபடுத்தியிருப்பார். 

கமல்ஹாசன் அவர்கள், தன் மொத்த வித்தையையும் அத்தனை கவனமாக இறக்கி வைத்த படம் என்பது அவரும் சரி, அவரது ரசிகர்களும் சரி மறுக்கவே முடியாது; மறுக்கவும் மாட்டார்கள். 

அப்படியான படத்தை தான், அவரது சிந்தனையாக நாம் எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் எதையும் மிகைப்படுத்தி, நம் கருத்துகளை திணிக்கவில்லை. பெரும்பாலான பார்வையாளர்கள் மனதில் எழும் எண்ணங்கள் தான் இங்கு எடுத்துரைக்கப்படுகின்றன. 

ஹேராம் படத்தைப் பொருத்தவரை, அவரின் நோக்கம் மத நல்லிணக்கம் என்பதாகத் தோன்றினாலும், அவரின் அத்தனை காட்சியிலும்,, அவரின் பார்வையின்படி  இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது இஸ்லாமியர்களின் காமம் மற்றும் வன்முறை குணங்கள் அல்லது ஹிந்துத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இருப்பதாகவே தோன்றுகிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 இப்பொழுது, கமல் அவர்கள், முஸ்லிம்களின் குணமாக காட்டும் முதல் காட்சியை சற்றே கவனிப்போம்.. அவர்கள், ஐந்து விதமான குணங்கள் உடையவர்கள் என்று காட்சிபடுத்தியிருப்பதாவே தோன்றுகிறது. 

அவை, 
1. இயல்பாகவே வன்முறையாளர்கள்.
2. தன்னை விட வலிமை(பொருள்/பலம்/அதிகாரம்) வாய்ந்தவர்களிடம் கூழைக் கும்பிடு போட்டுப் பிழைப்பார்கள்.
3. முன்னாடி கூழை கும்பிடு போட்டுவிட்டு பின்னாடி தாக்கும் கோழைகள்.
4. தங்கள் பலம் பெருகியிருந்தால், என்ன தான் பழகியிருந்தாலும், பிறர்மனை புகுந்து பெண்களை வன்புணர்வு செய்யவும், கொடூரமாகக் கொலைகள் செய்யவும் தயங்காதவர்கள்.
5. அவர்களில் கணிசமானவர்கள் ஓரினச் சேர்க்கை விரும்பிகள்.

என்பதாவே அவர் சித்தரிக்கும் வகையில், அந்த படத்தின் காட்சி அமைந்திருக்கும். 

எரிச்சலோ, கோபமோ படாமல், தொடர்ந்து படித்து விட்டு, இறுதியில் முடிவுக்கு வரலாம். இப்ப காட்சியையும் கமல்ஹாசன் காட்டும் குண வர்ணனையையும் விரிவாக பார்க்கலாம்.

கமல்ஹாசன், தன் மனைவியைப் பார்க்க, கொல்கட்டாவிற்கு வருகிறார். அன்றைக்கு முகமது அலி ஜின்னா, ‛டைரக்ட் ஆக்‌ஷன் டே’ என்று பந்த்-க்கு அழைப்பு விடுத்திருப்பார்...ஒட்டு மொத்த முஸ்லீம் ஆண்களும் சாலையில் இறங்கி கலவரம் செய்து கொண்டிருப்பார்கள். 
இதன் மூலம், அவர்கள் இயல்பாகவே வன்முறையில் ஈடுபாடு கொண்டவர்கள் என காட்டியிருப்பார். இது பாயின்ட் 1.

பாயின்ட் 2... அதே காட்சியில்,  வன்முறை கும்பலில் வன்முறை செய்து வரும் அல்டாஃப் எனும் ஒருவன், காரினுள் ராம்-ஐ பார்த்ததும், ‛சலாம் சாப்… உன் மனைவி இப்பெல்லாம் வேற டெய்லரிடம் போயிடுறாங்க… நீங்க போங்க சாப்’ என்று மற்றவர்களைத் தடுத்து நல்லவன் போல வழியனுப்பி வைப்பான். 
அதாவது வன்முறைக்கு வந்த இடத்தில், இவனால், தனக்கு தொழில்ரீதியான லாபம் இருக்கு என்பதற்காக, சலாம் போட்டு கூழை கும்பிடு போட்டு அனுப்பி வைப்பான்.

பாய்ன்ட் 3 : வழியணுப்பி வைத்த அதே அல்டாஃப், காரின் பின்புறம் போய், காரின் மீது தாக்குதல் நடத்தி, வன்முறை செய்வான். கூழைக் கும்பிடு போட்ட அடுத்த வினாடியே, முதுகில் குத்துவார்கள் என்று சொல்கிறார் டைரக்டர் கமல்ஹாசன்.

பாய்ண்ட் 4 :  அதே அல்டாஃப் (டெய்லர்) வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதும்,  ராம் வீட்டினுள் கூட்டமாக நுழைந்து ராமைத் தாக்கி, ராம் மனைவி அபர்ணாவை பலர் சேர்ந்து கற்பழித்து, கொலையும் செய்து விடுவார்கள். தனியாக இருக்கும் போது, பொதுவில் அடையாளப் படுத்திக் கொள்ளும் போது மறைந்திருக்கும் காம வெறியாட்டம் மற்றும் கொலை செய்யும் வன்முறையாட்டமானது, தன் குழுவுடன் இருக்கும் போது வெகுண்டெழுந்து  பீறிட்டு வெளிப்படுகிறது.

பாயின்ட் 5: அபர்னாவை கற்பழித்து விட்டு வந்து, அடுத்தவனை கற்பழிக்க அழைக்கும் போது, ராமை கட்டிப் போட்டிருக்கும் ஆள்,  ராமைப் புணரப் போவதாகச் சொல்லி விட்டு அதற்காக முயல்வான். அவர்கள் ஓரினச் சேர்க்கை விரும்பிகள் என்ற வகையில் அந்த காட்சி அமைந்திருக்கும். 

முஸ்லிம்களைப் பற்றி இப்படி யாரேனும் காட்சிப் படுத்தி பார்த்திருக்கிறீர்களா? இது போன்ற காட்சியமைப்புகளை, படமாக்க கமலால் மட்டுமே முடியும் என்றால் அது மிகையாகாது. 

அடுத்ததாக,“ பசுக்களை கொல்பவர்களைக் கொலை செய்வது தவறில்லை” என்கிறார் கமல்ஹாசன். அது எந்த படத்தில், எந்த காட்சியில் என சரியாக சொல்ல முடியுமா?  யோசியுங்கள்... சரியாகச் சொன்னால் நிச்சியம் கமல்ஹாசனின் நிஜ ரசிகன் என்ற பெருமை உங்களுக்கு உண்டு.

விடையை அடுத்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
அதுவரை காத்திருங்கள்…..

இந்த கட்டுரையில் இடம் பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close