தறிகெட்ட காதலனா தம்பித்துரை...?

  பாரதி பித்தன்   | Last Modified : 15 Feb, 2019 08:34 am
thambidurai-s-present-situation-special-story

காதல்... உயிர்களின் இயல்பான குணம். காமம் தீரும் வரை, குட்டிகள் வளரும் வரை என மற்ற உயிர்களில் காதல் குறிப்பிட்ட காலம் மட்டும் தான். மனிதனுக்கு காதல் கைகூடிவிட்டால் அது கடைசிவரை என்பது தான் வேறுபாடு. 

ஏதோ சில காரணங்களால் காதல் கைகூடாவிட்டால் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி வழியனுப்பவன் உண்மைக் காதலன். ஆனால் தறிகெட்டுப் போய் தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்க கூடாது என நினைக்கும் காதலர்களும் இருக்கிறார்கள். அது போன்ற காதலன் அந்த பெண்ணின் முகத்தில் ஆசீட் வீசுவான், சுவாதியை கொன்றது போல உயிரைப் பறிப்பான். லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரையின் சமீபத்திய பேச்சும், நடவடிக்கைகளும் அவர் தறி கெட்ட காதலனாக மாறிவிட்டாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
 
லோக்சபா தேர்தல் முடிந்ததும் அதிமுக சார்பில் எப்படியும் மத்திய அமைச்சராகிவிடலாம் என்று நினைத்தார் தம்பித்துரை. அனைவரும் எதிர்பார்த்தபடி பாஜ ஆட்சி அமைக்க அதிமுகவின் ஆதரவு அவசியம் இல்லாமல் போய்விட்டது. இதனால் தம்பிதுரைக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் லோக்சபா துணை சபாநாயகர் வாய்ப்பு கிடைத்த போது தம்பித்துரை அந்த இடத்தில் வந்து அமர்ந்தார்.  இது அமைச்சருக்கு இணையான பதவி என்றால் கூட அமைச்சர் அளவிற்கு எல்லாம் கிடைக்காத பதவி என்பதால் தம்பித்துரை சிறிது வருத்தத்துடன் தான் இருந்தார். 

எதிர்பாராமல் ஜெயலலிதா மறைந்ததும், பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை விட்டு அகற்றப்பட்ட நேரத்தில் தம்பித்துரை தனக்கு அந்த பதவி கிடைக்கும் என்று இருந்தார். அதற்கு பாஜக உதவி செய்யும் என்றும் நினைத்தார். ஆனால் இடையில் பழனிசாமி புகுந்து சசிகலா, தினகரனுடன் பேரம் படிய வைத்து அந்த ஆசனத்தில் அமர்ந்தார். அதிமுகவில் அடித்துக் கொண்டார்கள், பின்னர் சேர்ந்தார்கள். தமிழகத்திற்கு நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இருதரப்பினரையும் சமாதனப்படுத்தி இருக்கலாம். அல்லது அவர்கள் பன்னீர் செல்வமும், பழனிசாமியும் சேர வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கலாம். 

ஆனால் தம்பிதுரை அல்லது அண்ணாதுரை என்று தனிப்பட்ட நபரை முதல்வர் ஆக்குவது என்பது மத்திய அரசின் அல்லது, மற்றொரு அரசியல் கட்சியின் வேலையில்லை. அப்படி செய்தால் அதிமுகவின் நடவடிக்கைகளில் பாஜக தலையிடுவதாக மாறிவிடும். இது அரசியல் கட்சிகளுக்கு நல்லது அல்ல.  இப்படி எல்லாவிதத்திலும் தம்பித்துரை எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போய்விட்டது. 

இந்த சூழ்நிலையில் தேர்தலும் நெருங்கிவிட்டது. தன் பதவிக்கான காலம் நாள் கணக்கில் மாறிவிட்டது. இந்த நிலையில் தான் தம்பித்துரையின் சமீபத்திய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  அதே நேரத்தில் சசிகலா, பழனிசாமி இடையே மோதல் நடந்ததும். தினகரன் இன்னமும் எங்கள் சிலீப்பர் செல்  அதிமுகவில் இருக்கிறார்கள் என்று கூறினார். அது உண்மைதானோ, அவர்கள் தலைவர் தம்பித்துரை தானோ என்று நினைக்கும் நிலையில் தான் அவர் நிலை உள்ளது.
 
தம்பிதுரை தவிர்த்து மற்ற அதிமுக தலைவர்கள் குறிப்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் பாஜக ஆதரவு பெற பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். தம்பித்துரை மட்டும் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார்.  இதில், தம்பித்துரை எதிர்பார்க்கும் லாபம் கிடைக்குமா என்றால் கட்டாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

தம்பிதுரை ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும் பாஜகஸ்ரீஅதிமுக கூட்டணி ஏற்படுகிறது என்றால், அப்போது அவர் கழட்டிவிடப்படுவார். அதன் பிறகு அவர் அரசியல் கட்சி தொடங்கி நடத்த முடியாது. கடைசி நேரத்தில் திமுக அல்லது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சீட்டு பெற்றால் அதுவும் கூட பதவிக்காக கட்சி மாறிவிட்டார் என்று அவப்பெயர்தான் ஏற்படுமே தவிர்த்து, அவருக்கு லாபம் தராது. சீலீப்பர் செல்லாக உழைத்தால் கூட அவர்கள் பாடே அந்தரத்தில் தொங்கும் நிலையில்  தம்பிதுரையை அவர்கள் தாங்கி பிடிப்பார்கள்  என்று எதிர்பார்ப்பது தவறான முன்னுதாரம். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் தம்பித்துரையின் அரசியல் அத்தியாயம் சுபமாக முடிவுதற்கு பதிலாக சோகமாகத்தான் முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close