கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி - 6

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 16 May, 2019 01:41 pm
kamal-haasan-a-hindu-extremist-6

பசுவைக் கொன்றவனைக் கொல்வது தர்மம். அது ஒரு CIVIL WAR என்று அழுத்தமாகச் சொல்லும் கமல்ஹாசனைப் பார்த்திருக்கிறீர்களா? 

ஹேராம் படம் பார்த்த எல்லாருக்கும் தெரியும், கொல்கத்தா கலவரத்தில் பாதிக்கப்பட்ட சூழல் காட்சியில் ஸ்ரீராம் அப்யங்கர் என்ற பாத்திரம் தான் ஹீரோவாகத் தெரிவார். முதன்முதலாக ராமும், அப்யங்கரும் சந்திக்கும்போது “ People wont know what you are” என்று திலகமிட்டு அனுப்பி வைப்பார் அப்யங்கர். அவர் யார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸின் குருஜி என்று அழைக்கப்படும் திரு.மாதவ சதாசிவ கோல்வால்கர் தான்.


அடுத்த காட்சியில், பலரைக் கொலை செய்துவிட்டு கோபமும் குழப்பமுமாக ராம் அலைந்து கொண்டிருப்பார். அப்பொழுது யானை தன் பாகனை இழந்துவிட்ட நிலையில் செய்வதறியாது நின்று கொண்டிருக்கும். (ஆம்! நாம் நான்காவது கட்டுரையில் விவாதித்த அந்த பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை
மாவுத்தன் அவனும் இன்றி” அந்த யானையே தான்).

இப்படி செய்வதறியாது குழம்பி நிற்கும் ஹிந்துக்களின் பிரதிநிதியாக சாக்கேத் ராம் நின்று கொண்டிருக்கும்போது தான் ஸ்ரீராம் அப்யங்கர் வந்து ராமிடம் கேட்பார்..Are you looking for me? குழப்பத்திற்கு என்னிடம் விடை தேடுகிறாயா என்ற அர்த்தத்தில் கேட்பார் அப்யங்கர் என்ற கோல்வால்கர்.. 

இப்பொழுது அப்புராணி ஹிந்துக்களின் பிரதிநிதியான ராமும், ஹிந்துக்களின் வழிகாட்டியான கோல்வால்கர் எனும் ஸ்ரீராம் அப்யங்கருக்குமான விவாதமாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

.

அப்யங்கர் : என்னப்பா நேற்று நல்ல வேட்டையா?
ராம் : இல்லை. நீங்களெல்லாம் ஏதாவது கொள்கை, கடவுள்னு  காரணம் சொல்லிக்குவீங்க...நான் அப்படி இல்ல சார். கோபத்தில் கொலை செய்த சாதாரண உணர்ச்சிவயப்பட்ட கொலைக்காரன். என் அபர்ணாவை அவங்களெல்லாம்….
அப்யங்கர் :  நம்ம மாதிரி நிறைய பேர்கள்… தங்கள் அக்காமார்கள், தாய்மார்கள்…. ( இதைச் சொல்வதற்கு முன்னால், உண்மையைச் சந்திக்கக் கூசி விலகும் முகத்தைப் பிடித்து நேராக வைத்து சொல்வார் அப்யங்கர் என்ற கோல்வால்கர்.) இன்றைக்கும் உண்மையை நேரில் சந்திக்க, சிந்திக்க மறுக்கும் ஹிந்துக்களுக்கான காட்சி அது!

அதைத்தொடர்ந்து நான் போலீஸ்ல போய் உண்மையைச் சொல்லி தண்டனை பெற்றுக்கப் போறேன்னு ராம் சொல்லும் போது, அப்யங்கர் மூலமாக கமல் சொல்லும் காட்சியும் வசனமும், அவர் ஒரு தீவிர ஹிந்துத்துவவாதி என்பதை துல்லியமாக விளக்கும்.

அப்யங்கர் : யார்? யாருக்கு தண்டனை கொடுப்பது? சட்டம் லீவ்ல போயிருக்கு… நாம தான் இருக்கோம். குற்றம் செஞ்சா தான் தண்டனை. கடமையைச் செஞ்சா இல்லை. கொலை குத்தம்னா, யுத்தமும் குத்தம். இல்லையா?
அப்படியே ஒரு ட்ராம்ல ஏறி உட்கார்ந்து சம்பாஷனை தொடரும்.
அப்யங்கர் : பட்டாளத்தில் சேர்ந்து சண்டை போடும்போது கொலை எப்படி குற்றமாகும்? 
ராம் : (சற்றே கோபத்துடன்) நான் பட்டாளத்துக்காரன் இல்லையே நான் வெறும் சிவிலியன்.



அப்யங்கர் : இது CIVIL WAR BROTHER. நாடு இருக்கும் சூழலில் நாம் எல்லாரும் SOLDIERS தான்.

மிகவும் கவனமாகக் கவனிங்க! இந்த உபதேசம் நடப்பது ஒரு ட்ராம்-ல்... பத்து வினாடிகள் உள்ள இந்த காட்சிக்கு, அதிகபட்சம் எவ்வளவு மெனக்கெடலாம்? எவ்வளவு செலவு பண்ணலாம்? கமல்ஹாசனைப் புரியாதவர்களுக்காக…
காட்சியை மீண்டும் பாருங்கள்….

காட்சியின் பின்புலத்தில் ஒரு பசு கொல்லப்பட்டுக் கிடக்கும். “இது சிவில் வார் ப்ரதர்” எனும் சொல்லும்போது நாற்றம் தாளாது மூக்கினைப் பிடித்துக் கொண்டே, இறந்து கிடக்கும் பசுவைப் பாருங்க மக்களே என்பதற்காக அவரே திரும்பிப் பார்ப்பார். அதாவது நாயகன் பார்க்கும் திசையில் ரசிகனும் பார்ப்பான் இல்லையா? ஒருவேளை, பார்க்கத் தவறும் எதார்த்த ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க, அந்தப் பசுவின் வயிற்றிற்குள்ளிருந்து ஒரு நாய்யைக் குரைக்கச் செய்திருப்பார். 

அடேய்ய்ய் நம் பசுவை / நம் கலாச்சாரத்தைக் கொன்றவனைக் கொல்வது குற்றம் அல்ல, அது நம் கடமை. நாடு இருக்கும் நிலைமையில் நாம் எல்லாரும் சோல்ஜர்கள் தான். – இதுதான் திரு.கமல்ஹாசன் நமக்குக் காட்டிய படம். நமக்குச் சொன்ன பாடம். 
 

.


இன்னும் நம்பாதவர்களுக்கு, ஒருவேளை கமல் என்ற நடுநிலையாளர், குருஜி கோல்வால்கர் எனும் ஹிந்துமதவாதியை உயர்த்தியோ, பசுவதையை ஒரு பொருட்டாகவோ நினைக்காதவர் என்றால், பத்து வினாடி காட்சிக்கு, அதுவும் பின்புலத்தில் காட்டப்படக்கூடிய ஒரு காட்சிக்கு, இத்தனை செலவு செய்து ஒரு பசு கொல்லப்பட்டு, அதன் வயிற்றிலிருக்கும் இறைச்சியைத் தின்றுவிட்டதும் இல்லாமல் குரைக்க வேறு செய்யுமாறு ஒரு செட் போட்டு காட்சியை வைக்க வேண்டிய அவசியம் என்ன? 

ஐய்ய்ய்ய்யா அது சினிமா…. என்று பதறுபவர்களுக்காக…

நிஜத்தில் கமல்ஹாசன் எப்பொழுதாவது பசுவைக் கொல்வது குற்றமில்லை என்று சொல்லியிருக்கிறாரா?

மாறாக, எந்த விலங்கையும் கொல்லக் கூடாது, மீன்கள் உட்பட. காரணம் மகாவிஷ்ணுவே மீன் தான் என்று சொல்லியிருக்கிறார். சினிமாவில் இல்லை
2015ம் வருடத்தில் சி.என்.என் –க்கு கொடுத்த பேட்டியில் “No Animal should be kill. Fish too. And again Maha Vishnu was used be fish once” I don’t eat Beef anymore. இப்படி தான் சொல்லியிருக்கார். சரி ஏதோ வடநாட்டு பத்திரிக்கை என்பதால் அப்படி சொல்லியிருக்கலாம். தமிழகத்தில்…? 

2015 ஏப்ரல் மாதம் சிஎன்என் க்கு கொடுத்தது போல் தமிழ்நாட்டிலும் அதே வருடம் நவம்பர் மாதம் தன் நற்பணி மன்றக் கூட்டத்திலும், யார் என்ன சாப்பிட வேண்டும் என்பது அவரவர் விருப்பம் ஆனால், நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்று சொன்னார்.

அதே வருடம் அக்டோபர் மாதம் பொதுப் பேட்டியிலும் சாப்பாடு தனிநபர் சுதந்திரம் என்று சொல்லிவிட்டு, நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்று அழுத்தமாகச் சொன்னார். 
ஒவ்வொரு முறையும் தான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்.

அவ்வளவு ஏன் சமீபத்தில் ரிபப்ளிக் டிவியில் அர்னாப் திரும்பத் திரும்ப பசுவை வைத்து செய்யும் அரசியலை எடுத்துக் கொடுத்தும், கவனமாக அது பற்றிப் பேசுவதைத் தவிர்த்தார்.

இப்பொழுது ஏன் பசுவதை என்பது சிவில் வார் என்று அவர் சொல்லவில்லை என்பதனை, இந்தத் தொடர் முடிவில் விவரிப்போம்...

இந்த கட்டுரையில் இடம் பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே...

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close