இசைப்பயணம்-10... நரம்புக் கருவி வயலின் !

  டேவிட்   | Last Modified : 18 Feb, 2019 07:00 pm
about-music-10-violin-special-story

இன்றைய இசைப்பயணத்தில் நாம் தெரிந்துகொள்ளப்போவது நரம்புக் கருவியான வயலின் குறித்து தான்.  

வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் ஃபிடில் என்றும் அழைக்கப்பட்டது. வயலின் பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் இசைக்கப்படுகின்றது. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. 

நான்கு தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலமும், விரல்களால் அழுத்தப்பட்டும் வயலின் வாசிக்கப்படுகின்றது. 

இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் ஸ்ட்ராடிவேரியஸ் என்னும் இத்தாலியரால் உருவாக்கப்பட்டது. வயலின், ரெபெக்  எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் "Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் புகழ் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி இருந்தது. ரோட்டில் வசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. 

பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. வயலினின் கழுத்துப்பகுதி நீளமாகவும், அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன. நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .

கர்நாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். 

கர்நாடக இசைக்கருவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணிசைக் கருவிகள். மற்றொன்று தாளக் கருவிகள். குரலுக்கு இணையாக ராகங்களையும், மெட்டுகளையும்  இசைக்கக்கூடிய கருவிகள் பண்ணிசைக் கருவிகள். புல்லாங்குழல், நாகசுரம், வீணை, வயலின் ஆகியவை பண்ணிசைக் கருவிகள். மண்டலின், கிளாரினெட், சக்ஸோபோன் ஆகிய மேலைநாட்டுக் கருவிகளும் தற்காலத்தில் கர்நாடக இசையைத் தருகின்றன. 

நாம் ஏற்கனவே பார்த்தது போல், தாளத்தின் நுட்பங்களை இசை, லய நயத்துடன் வாசிக்கும் கருவிகள் தாளக்கருவிகள். கர்நாடக இசையில் முதன்மையான தாளக் கருவி மிருதங்கம். தவில் என்னும் கருவி நாகசுர இசையோடு இணைந்த ஒரு தாளக் கருவியாகும். வயலின் ஒரு நரம்புக் கருவி. கி.பி. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கர்நாடக இசையில் வயலின் ஒரு இன்றியமையாத கருவியாக உள்ளது. குரலிசைக்கு ஒப்ப எல்லா இசை நுணுக்கங்களையும் வயலினில் வாசிக்கலாம். கர்நாடக இசையில் தனி நிகழ்ச்சி நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பக்க இசை நிலையிலும் இன்றியமையாத இடத்தை தக்க வைத்துள்ளது. 

தற்காலத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வயலின்களும் உள்ளன . இதன் மூலம் வாசிக்கும் பொழுது , இசையின் ஒலியை பெருக்குவதற்கு ஆம்ப்ளிபயர்ஸ் எனும் கருவி பொருத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம் வயலின் ஒலியை கூட்டவோ குறைக்கவோ முடியும். இது இசை கச்சேரிகளில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. 

(தொடரும்....)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close