தமிழர்களை வழிநடத்துவதில் தவறிவிட்டதா தமிழ் ஊடகங்கள்? 

  பாரதி பித்தன்   | Last Modified : 27 Feb, 2019 06:12 pm
special-article-about-tamil-media

கடந்த, 14ம் தேதி, லவ் ஜிகாத் உட்பட, பல முறைகளில் நாம் காதல் வளர்த்து, காதலர் தினத்தை கொண்டாடிய வேளையில், கடந்த காலத்தில் காதலர்களின் சொர்க்க பூமியாக திகழ்ந்த காஷ்மீரில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  அதில், 40 சிஆர்பிஎஸ் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
அவர்கள், போரில் கொள்ளப்பட்டிருந்தால் கூட, மனம் ஆறுதல் அடைந்து இருக்கும்.  ஆனால், சில மணி நேரங்களுக்கு, சில நாட்களுக்கு முன்பு தான், குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதை கழித்த வீரர்கள், வேலைக்கு செல்லும் நிலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 

இந்த தகவல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றைக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறும் அறிவு ஜீவிகள் கூட, பாகிஸ்தானுடன் போர் நடத்த வேண்டும்; தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். 

ஆனால், அரசு மவுனம் காத்தது. புலி பதுங்குவது பாயத்தான் என்பதை புரியாமல் பலர் கருத்துக் கூறினர். ஆனால் பிரதமர் மோடி, அதன் பின்னர் நடந்த ஒவ்வொரு விழாவிலும், இந்தியாவின் பதிலடி குறித்து பேசிக் கொண்டுதான் இருந்தார். ‛‛ராணுவத்திற்கு முழு சுந்திரம் கொடுத்துவிட்டோம், இனி முடிவு அவர்கள் கையில் தான் உள்ளது. 

இந்தியாவை தலைகுனிய விடமாட்டோம்’’ என்று சூழுரைத்தார். அதே போல, ‛‛ராணுவ நடவடிக்கைகள் நடந்தால் அதனை பொறுப்பீர்களா? ஒத்துழைப்பு தருவீர்களா, ஆதரவு தருவீர்களா’’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு, மக்கள் அதற்கு நேர்மறையான பதில் சொன்ன பிறகுதான், 26ம் தேதி பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

கலைஞர் வார்த்தைகளில் சொன்னால், மோடி சொல்வதைத் தான் செய்தார், செய்வதைத்தான் சொன்னார். 
ஆனால், நமக்கு இது புரியாமல் போனதற்கு, அவர் பேசியது இந்தியில் இருந்தது தான் காரணமோ என்னவோ? நம் ஊடகங்களும் மோடியை பின்புலத்தில் காட்டி, தன் கருத்துக்களை கூறினாலும், அது பெரும்பாலும் தேர்தல் கூட்டணி என்று தான் இருந்தது. 

புல்வாமா தாக்குதலுக்குப் பின் மாேடி பங்கேற்ற அனைத்து கூட்டங்களிலும், பயங்கரவாதத்தை வேரறுப்பது, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது, நாட்டின் பாதுகாப்பு போன்ற அம்சங்களை தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருந்தார். 

எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படும், அதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த கூட்டத்தில், மாேடியின்  பிரதான பேச்சே இதுவாகத்தான் இருந்தது. 

ஆனால், அங்குள்ள மக்களுக்கு புரியும் வகையில் அவர் ஹிந்தியில் பேசினார். அது, தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநில மக்களையும் சென்றடைந்தது. அவரது பேச்சை, முழுமையாக ஒளிபரப்பாமல், தமிழ் ஊடகங்கள் மிகப் பெரிய தவறிழைத்தன. 

இதனால், தமிழர்களுக்கு, நடந்த சம்பவம் புதிது போலவே தெரிந்தது. இதற்காகத்தான், ஹிந்தி படிக்க வேண்டும் என்று பலர் தலையால் தண்ணீர் குடித்த போதும் கூட, திராவிடம் பேசி ஹிந்தியை விரட்டி விட்டோம். அதனால் வட இந்தியாவில், மத்தியில் என்ன நடக்கிறது என்பதே நமக்கு தெரியவில்லை. 

ஊடங்களில் பேசுபவர்கள் கூட பாகிஸ்தான் விளம்பர துாதர் போலவே தான் பேசுகின்றனர். 
இந்த நிலை மாற வேண்டும். உண்மையை வெளிப்படுத்தும் போதுதான், தமிழகத்தில் வாழ்பவர்களும் போர் தாக்குதலை சமாளிக்க தயாராக முடியும். 

அவ்வாறு இல்லாமல், இரண்டு விளம்பர இடைவேளைகளுக்கு இடையே ஒற்றை வரி செய்தியாக வெளியிட்டால், ஊடகங்கள் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தாக தான் முடியும். அதனை புரிந்து கொள்ள வேண்டும். 

தேசிய அளவில் நடக்கும் விஷயங்களை கட்சி பாகுபாடின்றியும், குறிப்பிட்ட தலைவர்களை ஆதரித்தும், புறக்கணித்தும் பணியாற்றாமல், தமிழ் ஊடகங்கள் நடுநிலைத் தன்மையுடன் செயலாற்ற வேண்டும். இதன் மூலம், தமிழ் ஊடகங்கள், தமிழர்களை தவறான பாதையில் வழிநடத்துவதை தவிர்க்கலாம். 

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்து கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close