வைகோ, திருமாவை கதறவிடும் தி.மு.க.,!

  பாரதி பித்தன்   | Last Modified : 28 Feb, 2019 05:09 pm
special-article-about-dmk-alliance

லோக்சபா தேர்தலுக்காக ,அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க., - பாஜகவுடனும்;  தி.மு.க., - காங்கிஸ் கட்சியுடன் கூட்டணியை அமைத்து முடித்துவிட்டன. அடுத்த கட்டமாக, இரண்டு கட்சிகளும் தே.மு.தி.க., உடன் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தி வருகின்றன. இதே காலகட்டத்தில், 3 வது கட்டமாக சிறிய, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சிறிய கட்சிகள் அங்கீகாரம் பெற வேண்டிய நிலையில் உள்ளவை. அவை, அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் தான், அந்த கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதைப் பற்றி கவலைப்படாமல், தற்போது தி.மு.க., சின்னத்தில் போட்டியிடுகிறோம்; அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று ஒட்டுமொத்தமாக அந்த கட்சிகளை அடகு வைக்கிறார்கள். 

இதற்காக அவர்கள் பெறும் சீட்டு வெறும் ஒன்று தான். அதிகபட்சமாக இரண்டு கிடைக்கலாம். உதாரணமாக, 1948 மார்ச் 10ம் தேதி தொடங்கப்பட்ட கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக். மாபெரும் தலைவர்களான, முகமது அலி ஜின்னா, கருணாநிதியால் போற்றப்பட்ட காயிதே மில்லத் போன்றவர்கள் இதன் தலைவர்களாக இருந்தனர்.  

இதற்கு பின்னர் தான், பாரதிய ஜனதாவின் தாய் கட்சியான, ஜனசங்கம் தோன்றியது. பெரும்பாலன இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஆதரவளராக இருந்தும் கூட, இந்திய யூனியன் முஸ்லீம் லீ்க் பெற்ற வளர்ச்சியையும், பா.ஜ.க., வளர்ச்சியையும் ஒப்பிட்டால் நிலைமை எளிதில் புரியும். 

இவ்வளவு பெருமை வாய்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஒரு இடம் பெற்று, அதில் மகிழ்ச்சி என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் காதர்மொய்தீன் பேட்டி அளிக்கிறார். அந்த இடத்திலும், இந்த கட்சியின் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடாமல், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட அவர் சம்மதித்துள்ளார். 

இதனால், அவர் வேண்டுமானால் எம்.பி., ஆகலாமே தவிர்த்து, அந்த கட்சிக்கு எந்த விதத்திலும் பலன் கொடுக்கப் போவது இல்லை. அவர்கள் கேட்கும் ஒரு இடம் கட்டாயம் அவர்கள் கட்சியினர், ஆதரவாளர்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். அங்கு இவர்கள் தனித்து நின்று வேலை செய்தாலே வெற்றி பெறலாம். 

தோல்விக்கு மிகக்குறைவான வாய்ப்பே உள்ளது. அதை விடுத்து, இந்த அடகு கூட்டணியில் வெற்றி நிச்சயம் என்பதை தவிர வேறு எதுவும் பலன் கிடையாது. 

இந்த கட்சியாவது, நாமும் நிற்காவிட்டால், இஸ்லாமியர்களுக்கு பிரதிநித்துவம் கிடைக்காமல் போகலாம்; தி.மு.க., - அ.தி.மு.க., போன்றவை இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மறைமுக கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, இஸ்லாமியர்களை கழட்டிவிடலாம் என்ற அச்சத்தில் கட்சியை அடகு வைத்திருக்கலாம். 

ஆனால், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும், இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கொங்கு நாடு எப்போதும் அ.தி.மு.க.,விற்கு சாதகமான தொகுதிகளை கொண்டது. அந்த பகுதி மக்களுக்கு, தேவைகள் என்றால் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். 

கொங்கு நாடு மக்கள் கட்சி தேர்தெடுக்கும் தொகுதியை தவிர்த்து, மற்ற இடங்களிலும், தி.மு.க., அதே இன மக்களையே நிறுத்தும். இதனால், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சியில் யார் வெற்றி பெற்றாலும், அந்த மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை செய்வார்கள். 

இதில், கொங்குநாடு மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. இந்த இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும், வெளிப்படையாக தெரிந்துவிட்டதால் தான் இவை குறிப்பிடப்படுகின்றன. 
இதே நிலைப்பாட்டில் தான், ஐ.ஜே.கே., - மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல கட்சிகளும் உள்ளன. விடுதலை சிறுத்தைகள் இந்த கருத்தை ஏற்குமா என்று வெளியிப்படையாக தெரியவில்லை. 

பட்டவர்த்தனமாக சொல்ல வேண்டும் என்றால், இது போன்ற கூட்டணி கட்சித் தலைவரின் பதவி வெறிதான் காரணம். கிடைக்கப் போவது ஒரு இடம். அதில் அவர் தான் போட்டியிடுவார். அதே தலைவர், தி.மு.க., - அ.தி.மு.க.,வில் இருந்தால் சீண்டக் கூடமாட்டார்கள். 

அதற்காக தான் கட்சி, அந்த பதவிக்காத்தான் கட்சி அடகு வைக்கப்படுகிறது. இந்த அடகு அரசியலில் பாதிக்கப் போவது வைகோ தான். கடந்த சில தேர்தல்களில், இப்போதுள்ள நிலையே விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., ஆகியவற்றிக்கு  இருந்தது. ஆனால், இதர கட்சிகளுடன் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

இதனால் வைகோ முறுக்கி கொண்டு வெளியேறியதும், பல கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்து களம் காண முடிந்தது. அது முடியாத நிலையில், ஒரு முறை தேர்தலையே வைகோ  புறக்கணித்தார். 
தற்போதும் அதே நிலைதான் உருவாகப் போகிறது. 

வைகோ, விடுதலை சிறுத்தைகளை வெளியே நிறுத்தி விட்டு, தி.மு.க., அவர்களுடன் யார் கூட்டணி சேருவார்கள் என்று நினைக்கிறதோ அவர்களுடன் கூட்டணி பேசி, ஒரு சீட்டு கொடுத்து இழுத்துப் போட்டுக் கொள்கிறது. 

அவர்ளுக்கு ஒதுக்கபடும் தொகுதியில், கூட்டணி கட்சி தனி்த்து நின்று ஓட்டை பிரித்தால் அது திமுகவிற்கு பாதகமாக முடியும். தற்போது அந்த இடத்தில் அந்த கட்சி வெற்றி பெற்றாலும் திமுகவிற்கு இழப்பு ஏதும் இல்லை. 

இந்த நிலைப்பாட்டின் படி தான் இந்த அடகு பிடிக்கும் கூட்டணி பேச்சுவார்தை நடக்கிறது. இன்னும் சில நாட்களில் அதனைத்து கட்சிளையும், திமுக -  அதிமுக அடகு பிடித்து முடித்து விடும். அதன் பின்னர், ம.தி.மு.க., எங்கு செல்ல முடியும். 

அ.தி.மு.க., பக்கம் சேர்க்கவே மாட்டார்கள். அப்படியே சேர்த்தாலும், பா.ஜ.,வுக்கே, 5 இடம் தான், உங்களுக்கு 2 சீட் தருகிறோம் என்பார்கள். தி.மு.க.,வும், 2 இடங்களுக்கு மேல் ஒதுக்காது என்றே தெரிகிறது. அப்படி 2 சீட் ஒதுக்கினால் அதுவே பெரிய விஷயம். அதுவும், திமுக சின்னத்தில் தான் நிற்க வேண்டி வரும்.

அப்படி இரண்டு சீட்டும் கிடைக்காவிட்டால், நான் ரோஷக்காரன் எனக் கூறி, கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக கூறுவார். ஆனால், கடந்த தேர்தலைப் போல, சிறிய கட்சிகளை கூட்டி, மெகா கூட்டணியை இவரால் அமைக்க முடியாது. 

ஏனென்றால், அதற்குள், அனைத்து கட்சிகளும், அடகு வைத்து முடிந்தாகியிருக்கும். வீர வசனம் பேசும் வைகோ
 வழக்கம் போல் தேர்தலை புறக்கணிப்பார், அவ்வளவு தான். போகிற போக்கை பார்த்தால், திருமாவுக்கும் இதே நிலை தான் என தோன்றுகிறது. 

சிதம்பரத்தில் நான் நிற்பேன், சிதம்பரத்தில் நான் நிற்பேன் என்கிறாரே தவிர, திருமா கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்பதை தி.மு.க., ஒரு முறை கூட வாய் திறந்து சொல்லவில்லை.

இதெல்லாம் நடப்பதற்கு முன், வைகோவும், திருமாவும் விழித்தெழுவரா... அப்படியே அவர்கள் விழித்தெழாவிட்டாலும், தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. 

நாம் கணித்த ஜோதிடம் பலிக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெற்ற கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close