தியாகத்தின் உரு வைகோ..!

  பாரதி பித்தன்   | Last Modified : 06 Mar, 2019 04:04 pm
about-mdmk-vaiko-special-story

திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக சில அமைப்புகளை இழுத்து செல்லும் இன்ஜினாக இருப்பவர் வைகோ. அவர்தான் மக்கள் நல கூட்டணி அமைவதற்கும், இடதசாரிகள், விடுதலை சிறுத்தைகள் ஒன்றாக இணைந்து திமுக, அதிமுக ஆகிவற்றுடன் வர்த்தகம்... மன்னிக்கவும் கூட்டணி பேச, இணைந்து போராட முக்கிய துாணாக திகழ்ந்தார். 

இந்த முறை லோக்சபா தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கியதும், திமுக கூட்டணியில் சில ஆண்டுகளாக இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூனிட்ஸ்கள், விடுதலை சிறுத்தைகள்  இடையே சுமுகமான பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் உடனே பேச்சுவார்த்தை முடிந்தது. அதன் பின்னர் கூட்டணியில் அவ்வளவாக இடம் பெறாத கட்சிகள் ஒவ்வொன்றாக பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு தேவையான இடங்களை பெற்றுக் கொண்டன .

இதனால் மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலைசிறுத்தைகள் கதி என்ன ஆகும் என்று ஆங்கில படங்களில் திருப்பு முனை காட்சி போல எதிர்பார்ப்பை எகிற வைத்தது.  அதன்பின்னர் விடுதலை சிறுத்தைகள்,இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை தெரிந்தது. பின்னர் மாக்சிஸ்ட் கட்சி, மதிமுக நிலை மர்மமாகவே இருந்தது. கடைசியில் மதிமுக பேச்சுவார்த்தை நடத்தி முடித்து ஒரு இடத்திற்கு ஒப்புக் கொண்டது. மேலும் ஒரு ராஜ்யசபா இடம் என்று பேரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. 

அதாவது மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்கு தேச மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஒரே தரத்தில் தான் இருக்கிறோம் என்று வைகோவே ஒப்புக் கொண்டு விட்டார். 

திமுக கூட்டணியில் 7 இடங்கள் பிடிப்பார் என்று பேச்சு தொடங்கி யாரும் எதிர்பாராமல் ஒரு இடத்தில் முடித்துள்ளார். அதிலும் இவரின் விருப்பமான தொகுதியான துாத்துக்குடியும் கிடையாது, சில காலங்களுக்கு முன்பு  மூன்று மதங்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து களம் அமைத்த திருச்சி அதில் இடம் பெறுமா என்பதும் தெரியவில்லை. 

இது தான் முடிவு என்றால் பேச்சுவார்த்தை தொடங்கிய போதே ஏற்றுக் கொண்டிருக்கலாம். திமுகவிற்கு மதிமுகவிற்கே ஒரு இடம் தான் என்று கூறியே மற்ற கட்சிகளுக்கு இடங்களை குறைத்து இருக்கலாம். அந்த வழியையும் வைகோ அடைத்துவிட்டார். 

கடைசி வரை வைகோ ஏதோ செய்து விடுவார் என்ற பயத்திலேயே திமுக மற்ற கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டது. ஆனால் அவரோ புஸ்வாணமாகிவிட்டார். இந்த வகையில் இதர கட்சிகள் நன்றியோடு நினைக்க வேண்டியவர் தியாகத் தலைவர் வைகோவைத்தான். என்ன இனி பிரச்சார மேடைகளில் அவர் கொள்கை முழுக்கம் இடும் போது, ஸ்டாலின் தயாளகுணத்தை பாராட்டும் போது, அதைக் கேட்கும் மக்களுக்கு ஒத்தை சீட்டுக்கே இவ்வளவு கூவுறாரே இன்னும் 4 சீட்டு சேர்த்து கொண்டுத்திருந்தா...? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close