களங்கத்தை சுமக்கப்போகிறதா அ.தி.மு.க.,?

  பாரதி பித்தன்   | Last Modified : 07 Mar, 2019 07:22 pm
political-article-about-dmdk-admk

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையிலேயே வருத்தம் தெரிவித்த ஒரு விஷயம். தே.மு.தி.க.,வை வளர்த்துவிட்டது தவறென்று. அவரின் வருத்தம் எவ்வளவு சரியானது என்பதை, 6ம் தேதி நடந்த சம்பவங்கள் தெளிவுபடுத்திவிட்டன. 

திமுக, அதிமுகவிற்கு மாற்று வேண்டும் என்று, அதன் தலைவர்கள் இருக்கும் காலத்திலேயே மக்கள் எண்ணிய நிலையில் விஜயகாந்த் களம் இறங்கியதால் ஆதரவு பெருகிறது. 

அதன் பின்வந்த தேர்தல்களில், தேமுதிக நம் அணியில் இருந்தால் நல்லது என்று திமுக, அதிமுக விரும்பியதால், சமமான மரியாதை கொடுத்து கூட்டணி அமைத்தனர். 

ஆனால், காலத்தின் கோலம் தேமுதிக கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது.  அந்த கட்சி தற்போது, 2 சதவீதம் மட்டுமே ஓட்டுக்களை கொண்டுள்ளது. 
இந்த சூழ்நிலையில் கேப்டன் உடல் நிலை, தேர்தலுக்கு ஈடுகொடுப்பதாக இல்லை. கடந்த காலங்களில், கலைஞர் தொண்டர்களை பார்த்தது போலவே தான், தற்போது விஜயகாந்த் நிலையும் உள்ளது. 

இந்த சூழ்நிலையில் விஜயகாந்த் குடும்பம் தான் கட்சி என்ற நிலை உள்ளது. இதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்களாக என்று தெரியவில்லை. 
தேர்தலில் கொள்கை கூட்டணி என்பதெல்லாம் கடந்துவிட்டது. உன் சுயநலம், என் சுய நலம் இணைந்து பொதுநலம் என்பது தான் கூட்டணி. அந்த அடிப்படையில் தான் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி வைத்தன.

 இந்த தேர்தலில் பாமக தலைமை,  திமுக, அதிமுக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், அது வெளிப்படையாக தெரியவில்லை. ஒரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, அதில் ஒத்துவராவிட்டால் மட்டுமே மற்றகட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். கூட்டணி சேர்ந்த பின்னர் தான் அது குறித்த அறிவிப்பு வெளியாகும். 

தற்போது கூட தேமுதிக தவிர மற்ற கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவில் ரகசியமாகவே நடந்தது. 
ஆனால், கடந்த 6ம் தேதி, தேமுதிக நடத்தியது கூட்டணி பேச்சுவார்த்தை அல்ல, வியாபாரம். 

அன்று காலையில், தேமுதிகவினர் மத்தியில் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுதீஷ், மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை சந்திக்கிறார். அதே நேரத்தில், அனகை முருகேசன் உட்பட சிலர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் உள்ள மேடையில், விஜயகாந்த் படம் வைத்தது, பின்னர் அகற்றப்பட்டது. அவர் கட்டவுட்டிற்கு பதிலாக, எம்ஜிஆர், தமிழிசை சவுந்தர்ராஜன் உருவங்களை வைத்து மறைந்தது போன்ற அசிங்கங்கள் இது வரை தமிழகம் அறியாதது. 

திமுக கதவை அடைத்த பின்னராவது யதார்த்தத்தை உணர்ந்து, அதிமுகவுடன், தேமுதிக கூட்டணியை இறுதி செய்யலாம். ஆனால், கடந்த 6ம் தேதி இரவு, 12 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தியும், கூட்டணி முடிவுக்கு வரவில்லை. 
இன்றைய சூழ்நிலையில், தேமுதிகவிற்கு 2.5 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுகளே உள்ளன. அந்த ஓட்டே வேண்டாம் என்று திமுக தேமுதிகவை விரட்டிஅடித்து விட்டது. 

 ஆனால் இந்த தைரியம் ஏன் அதிமுகவிற்கு, பாஜகவிற்கு வரவில்லை என்பது தான் மிகப் பெரிய கேள்வி. இன்னமும் பேசிக் கொண்டு இருக்கிறோம். 2 நாட்களில் கூட்டணி பற்றி கூறப்படும் என்றும் பேசுகிறார்கள்.

ஆனால் மக்கள், நாங்கள் முட்டாள்கள் இல்லை. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல், இதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, திமுக கழற்றிவிட்டது போல், அதிமுகவும், விஜயகாந்த்தின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத தேமுதிகவை கழற்றி விட வேண்டும். 

இன்னமும் அவர்களிடம் பேரம் பேசுவதில் பலனில்லை. அப்படி அவர்களை கூட்டணியில் கொண்டு வந்தால், நிச்சயம், தமிழக வாக்காளர்கள் புறக்கணிப்பர். அதன் பாதிப்பு, அதிமுக மற்றும் பாஜவுக்கும் ஏற்படும். எனவே, மக்கள் விரும்பாத கூட்டணியை அமைக்காமல், தேமுதிகவை நட்றாற்றில் விட்டால் தான், அடுத்த தேர்தலில், இவர்களை போல் வேறு யாரும் முயற்சிக்காமல் இருப்பர். இதை செய்யுமா அதிமுக - பா.ஜ., கூட்டணி?

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close