கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி... பகுதி-10

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 16 May, 2019 01:47 pm
is-kamalhaasan-hindu-terrorist-part-10

யார் பயங்கரவாதி ஆகிறார்கள்? அப்பன் பேரு தெரியாதவனுக தான் பொறுப்பில்லாம வளர்க்கப்பட்டு சமூகத்தின் மீது பிடிப்பில்லாமல் எதையும் செய்யத் துணிகிறார்கள். 

அட அப்படித்தாங்க நம்ம விஸாம் அஹ்மது காஷ்மிரி சொல்வார் விஸ்வரூபம் படத்தில். ஓமர் பாய் அப்பன் பேரு தெரியாதவன்னு சொன்னதை மறந்துட்டீங்களா?

முஸ்லிம்களை மூளைச் சலவை செய்ய ரொம்பவெல்லாம் மெனக்கெட வேண்டாம். நானும் முஸ்லிம் என்றோ அல்லா ஹு அக்பர் என்று சொன்னாலோ போதும். வேலை முடிந்துடும்.

உமர்பாயின் உத்தரவுப்படி நிருபமா கணவன் முட்டி ரெண்டையும் சுடணும். அவனிடம் பேச்சுக் கொடுக்கக் கூடாது. அதையும் மீறி கைக்கட்டை அவிழ்த்து விட விஸ் என்ற தௌஃபிக் என்ற நாசர் செய்யும் உத்தி, “முசல்மானுக்கு முசல்மான் கேட்கிறேன். சாகுறதுக்கு முன்னாடி ப்ரே பண்ணவிடுங்க ப்ளீஸ்” நான் ஒரு முஸ்லீம், தொழுகணும்.

இது ரெண்டும் எந்த முஸ்லீமையும் மடங்கச் செய்யும் கீவேர்ட். அந்த கீ வேர்டைச் சொன்னால், குண்டை உடலில் கட்டியும் வெடித்துச் சாவார்கள்  உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொல்லும் அணுக் கதிர்வீசும் சிசிஎம் ஐ வெறும் கையில் கூட சுரண்டி எடுப்பார்கள். அத்தனை மத வெறி என்று காட்சி வைக்கிறார் கமல். மதத்தின் பெயரால் மூளைச் சலவை செய்யப்பட்டால் அணுவணுவாகவும் சாகத் தயார்.

அடுத்ததாக, விபரம் தெரியாத ஒரு பையனை ஜிஹாதி என்று மூளைச் சலவை செய்து, சுற்றியிருப்பவர்களிடமெல்லாம் அவனை தூக்கி வைத்து அங்கீகரித்து, குழந்தைத்தனம் மாறாத அவனை மனித வெடிகுண்டாக மாற்றுவார்கள். அதே வயதுடைய உமரின் மகனை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விட்டு விளையாடச் செய்தால், ஐம் நாட் சைல்ட் என்று புறக்கணித்து விலகிச் செல்வான். ஆனால், அவனை  ஜிகாதியாக மாற்ற முடியாது. அவனுக்கு அறிவிருக்கு டாக்டராகணும்னு ஆசைப்படுகிறான். மம்மு போன்ற கல்வியறிவு இல்லாதவர்களை ஜிகாதியாக்குகிறார்கள். ஆகவே, உலகக் கல்விகளைக் கற்க விடாமல் மதறாசாவுக்குள்ளேயே அமுக்கி வைத்து விடுகிறார்கள். அந்தக் காட்சியில் கவனிக்க வேண்டிய இன்னொன்று, அந்த அப்பிராணி சிறுவன் ஆடும் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கும் கயிறு தூக்கு தண்டனைக் கயிறினைப் போல கட்டப்பட்டிருக்கும்.

பாகிஸ்தானி மிலிட்டரி ஆட்களை ஆராய்ந்து திரட்டியத் தகவலை, ஒசாமா பின்லேடன் இருக்கும் காட்சியில், 
 “ இந்தாளு யாரு? – விஸம்
 பாகிஸ்தானி மிலிட்டரி ஆளு. ஐ எஸ் ஐயிடம் இருந்து தகவல் கொண்டு வந்திருப்பான். - சலீம்
ஓ ஐஎஸ்ஐ க்காகவும் வேலை செய்யுறாரா? – விஸம்
இல்லை காசுக்காக வேலை செய்கிறான். யார் காசுக்காகவும் – சலீம்.

இஸ்லாமியர்களின் வரலாறு முழுவதுமாகப் படித்திருக்காவிடினும் பரவாயில்லை. குறைந்த பட்சம் வந்தார்கள் வென்றார்கள் என்ற விகடன் தொடர் படித்திருந்தால் கூட போதும். இஸ்லாமிய ஆட்சியாளர்களின் துரோகங்களும், ரத்த உறவுகளின் மீதான வன்முறைகளையும் நன்கு புரிந்து கொள்ளலாம். கமல்ஹாசன் விஸ்வரூபத்தில் பல இடங்களில் பல கோணங்களில் இந்தக் காட்சியை வைத்திருப்பார். ஒசாமா சீன் ஓர் உதாரணம். ஒஸாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்பு, அவன் மனைவி அமால் கொடுத்த பேட்டி இன்னொரு நிஜ ஆதாரம். பாகிஸ்தானிலிருந்து எங்களிடம் வாங்கி சாப்பிட்ட ஏதோ ஒரு துரோகி தான் தகவல் கொடுத்திருக்க முடியும். இல்லாவிட்டால், இந்த இடத்தை யாராலும் கண்டு பிடித்திருக்கவே முடியாது.

ஒரு காட்சியில், உமரின் கண் போனதுக்கு வருத்தம் தெரிவித்து நிருபமா,  “ அவரைக் கடவுள் தான் காப்பாத்தணும் என்றவுடன், “எந்தக் கடவுள் ? “ என்று பதில் கேள்வி கேட்டு  கமல் செய்யும் நக்கலுக்கு எழுபத்திரெண்டாயிரம் கன்னிகள் கிடைத்திருக்கணும். தப்பிச்சுட்டார்.

அடுத்த கிண்டல், நிருபமா கேட்பாள் நீங்க நல்லவரா கெட்டவரா? நாமெல்லாம் நாயகன் பீஜியம் பின்னணியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், “இந்தக் கேள்வியை நீங்க ஏன் இந்த ஆளிடம் கேட்காம விட்டீங்க? என்பார் விஸ்வா என்ற கமல்.

அவர் தான் செத்துப் போயிட்டாரே…?

செத்துட்டா? செஞ்சதை எல்லா பாவத்தையும் மன்னிச்சுடலாமா? அப்ப ஹிட்லரையும் மன்னிச்சுடலாம்… 

இங்கே கமல் குறிப்பிட்ட நபர் ஒஸாமா பின் லேடனை என்பது கமலை புரிந்து ரசிக்கும் ரசிகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.  

விஸ்வரூபத்தில் மிச்சத்தைப் பார்க்கும் முன், முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றி கமல்ஹாசன் ஆணித்தரமாகச் சொன்ன ஒன்றை கவனிப்போம்.  “இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அமைதிப் பேச்சுவார்த்தையை மட்டும் நம்பவே நம்பக் கூடாது. அமைதியை முன்னாடி காட்டி விட்டு பின்னாடியே குண்டு வைப்பார்கள் என்பது தான் விஸ்வரூபம் என்ற படத்தின் மிக மய்யமான…. சாரி., மையமான கரு. புரியவில்லையா?

படத்தின் போஸ்டர், டீஸர், டைட்டில் எங்கும் காட்டப்படும் புறா அமைதிக்கான அடையாளம். அதன் கால்களில் சிசிஎம் / புளுட்டோனியம் உருண்டையைக் கட்டி அனுப்பி வைக்கும் அளவிற்கு நம்பிக்கை துரோகிகள். இதை விட எப்படிங்க தோலை உறிச்சுக் காட்ட முடியும்? 

காத்திருங்கள் இன்னும் பார்க்கலாம்…

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close