டிக்-டாக்கால் வாழ்க்கையே போச்சு... கண்ணீருடன் கதறும் திருச்சிப் பெண்..!

  டேவிட்   | Last Modified : 10 Mar, 2019 03:47 pm
tik-tok-destroyed-my-famiy-said-trichy-woman

டிக்-டாக் செயலியால், தனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டது என கண்ணீருடன் தனது வீடியோவை வெளியிட்டுள்ளார் திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர். 

பல்வேறு புதிய புதிய செயலிகள் வந்து கொண்டிருந்தாலும் டிக்-டாக் செயலியே தற்போது முன்னிலை வகித்து வருகிறது.  ‘டிக் டாக்’ எனப்படும் செயலியில் இசை, பாடல்கள், வசனங்களுக்கு ஏற்ப முகபாவனைகளை செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த செயலியை முப்பது வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆன பெண்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதாகத் தெரிகிறது. 

டிக் டாக் அபிராமியின் கதை அனைவரும் அறிந்ததே. இதனால் குழந்தைகளின் உயிர் பறிபோனது. அபிராமியும் கம்பிகளுக்குப் பின்னால்.  ஒரு அபிராமி போனாள் என்று பார்த்தால், அது தான் இல்லை. பல ஆயிரம் அபிராமிக்கள் தற்போது உருவாகி வருகின்றனர். 

இதில் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்த போதிலும், சிலர் அரைகுறை ஆடை வீடியோக்களையும், அபாயகரமான வீடியோக்களையும் வெளியிட்டு வந்தனர். இதுபோன்ற வீடியோக்கள் வலம் வந்ததால், டிக்-டாக் தடை செய்யப்படும் என தமிழக அரசு டிக் டாக் நிறுவனத்தை எச்சரித்தது. இதனையடுத்து டிக்-டாக் நிறுவனம் பல நிபந்தனைகளை வாடிக்கையாளர்களிடம் முன் வைத்தது. மேலும், புகார் செய்யப்படும் வீடியோக்கள் அனைத்தையும் அந்நிறுவனம் உடனடியாக நீக்கி, நடவடிக்கை மேற்கொண்டது. 

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில்  மீட்டிங் போட்டு டிக் டாக் நண்பர்கள் (ஆண்களும், பெண்களும்) ஒன்று சேர்ந்து நடனமாடி, அதனையும் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் கண்டித்து டிக்டாக்கில் பகிர்ந்தனர். அதில் ஒரு பெண் திருச்சியைச் சேர்ந்தவர். அவர் பல ஆண்களோடு நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்தார். இதனை பலரும் கண்டித்ததால், அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி பதில் வீடியோ வெளியிட்டார். இதனையடுத்து பலரும் எதிர்ப்புகளை கொட்டித் தீர்த்து வீடியோக்களை வெளியிட்டனர்.  

இந்நிலையில், அந்த திருச்சிப் பெண் கடைசியாக ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், தான் தகாத வார்த்தைகளால் பேசியதற்காக மன்னிப்பு கேட்பதாகவும்,  டிக்-டாக்கால் எனது வாழ்க்கையே சீரழிந்து விட்டது, தனது கணவருக்கும் எனக்கும் பிரச்சனையாகி விட்டது. இனி மேல் என் வாழ்க்கை அவ்வளவு தான் என கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் தானே...? அளவுக்கு அதிகமான ஆண் நண்பர்களோடு டிக்-டாக்கில் ஈடுபட்டதால், கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை. இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

டிக்-டாக் செய்யும் பெரும்பாலான பெண்கள் தங்களை சுற்றியுள்ள சொந்தம் பந்தங்களை பிளாக் செய்து விட்டு முகம் தெரியாத நண்பர்களுடன் தங்களுடைய வீடியோ பகிரப்படுவதாக தெரிகிறது. ஆனால் திடீரென  அவரது பெற்றோருக்கோ அல்லது கணவருக்கோ தெரியவரும் போது கடும் பிரச்னைகள் உருவாகி குடும்பமே சின்னாபிண்ணமாகிறது. 

டிக்டாக் பயன்படுத்தலாம்... தனது குடும்பத்துடன்... நடிப்பும், நகைச்சுவையும், நல்ல தகவல்களும் இடம் பெறலாம். மணிக்கணக்கில் பயன்படுத்தாமல் ஒரு பொழுதுபோக்கிற்காக சில நிமிடங்கள் பயன்படுத்தலாம்.  ஆபாசங்கள் வெளியிடப்படுகிறதா? நீங்களே அந்த நபரை ரிப்போர்ட் செய்து பிளாக் பண்ணுங்கள். டிக்-டாக் நிறுவனம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். 

இந்தப் பிரச்சனைகளை அறிந்த பின்னராவது பெண்கள் டிக்-டாக்கில் ஈடுபடுவதை நிறுத்துவார்களா? அல்லது எல்லை மீறி போவதால், டிக் டாக் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்யப்படுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close