உங்களுக்குப் புரிகிறதா ஸ்டாலின்...?

  பாரதி பித்தன்   | Last Modified : 10 Mar, 2019 02:24 pm
current-political-situation-special-story

தமிழகத்தில் திமுகவை விட அதிமுக ஒரு சில சதவீதங்கள் ஓட்டு அதிகம் கொண்ட கட்சி. ஆனாலும் அதிமுக மீது மக்களுக்கு மக்களுக்கு கோபம் கொப்பளிக்கும் போது திமுக வெற்றி அடைகிறது. எம்ஜிஆர் மீது மக்களுக்கு கோபம் ஏற்படாத காரணத்தால் தான் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வரமுடியவில்லை. இதனால் தான் திமுக தேர்தலில் கூட்டணியை நம்புகிறது. 

தற்போது லோக்சபா தேர்தலில் இது வரையில் மிகப் பெரிய அளவில் எந்த அலையும் வீச வில்லை. மோடி எதிர்ப்பு அலை உள்ளது என்று சொன்னால் கூட கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக வீசிய அலைக்கு இணையாக இப்போது இல்லை. தமிழகத்தில் மோடி எதிர்ப்பு என்று கூச்சல் போட்டாலும் கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற பாஜகவிற்கு இந்த முறை கட்டாயம் ஏற்றம் தான். 

இப்படிப்பட்ட காரணங்களால் இந்த தேர்தலில் கூட்டணி முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டணி முதல் தேர்வில் திமுக தேர்ச்சி பெற்றது. அடுத்த கட்ட தேர்வு மிகுந்த சிக்கலாகவே இருக்கும். அதிலும் ஒன்று, அல்லது 2 சீட்டு பெற்றவர்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று கருதுவதால் இடங்களை ஒதுக்குவது அவ்வளவு எளிது அல்ல. 

அதே நேரத்தில் அதிமுக அணியில் முதல் தேர்வே முடியவில்லை. தேமுதிகவை கட்டிக் கொண்டு அழுவதால் கூட்டணிக்கான வலு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது. இவர்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டதும் இருக்கும் மொத்த கவுரவமும் காற்றில் பறந்து விடும்.

திமுக காங்கிரஸ் கட்சிக்கு காக்கா பிடிக்கிறது. அதிமுக தேமுதிகவின் அரையடி பள்ளம் தோண்டி காலில் விழுந்து கிடக்கிறது. வேறு கட்சிகளுடன் இந்த அளவிற்கு இறங்கி சென்று கூட்டணி அமைக்கும் இவர்கள் கட்டுச்சோற்றுகள் பெருச்சாளியை வைத்து கட்டிய கதையாக அழகிரி, தினகரன் ஆகியோரைக் கொண்டுள்ளனர்.

கருணாநிதி இருந்த போது திமுக திருமங்கலத்தில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் அதை முடித்துக் காட்டியவர் அழகிரி. தொண்டர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். இன்னமும் கூட தொண்டர்கள் ஸ்டாலினுக்கு கட்டுப்படுகிறார்கள் என்றால் அதற்கு அவர் வகிக்கும் பதவியும், அவர்தான் தனக்கு பதவி கொடுப்பார் என்பது தான் காரணம். விரல்விட்டு எண்ணும் அளவிற்கு அழகிரியின் ஆதரவாளர்கள் குறைந்து விட்டாலும் கூட அவர்கள் பதவிக்காக அவருடன் ஒட்டிக் கொண்டு இருக்கவில்லை என்பது உள்ளங்ககை நெல்லிக்கனி. 

மாறன் சகோதர்களுடன் மிகப் பெரிய சண்டை போட்டு, அறிவாலயத்தில் இருந்து சன் டிவியை வெளியே விரட்டிவிட்டு, கலைஞர் டிவி, சிரிப்பொலி என்று தனி சேனல்கள் கண்ட ஸ்டாலின் குடும்பத்தார். இன்று அவர்களை ஏற்றுக் கொண்டு விட்டனர். ஆனால் அவர்கள் எத்தனை தொகுதியில் திமுகவிற்கு சாதகமாக இருப்பார்கள் என தெரியவில்லை. அதே நேரத்தில் தென்மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட திமுகவை வெற்றிபெற செய்யவிடமாட்டேன் என்று அழகிரி சபதமே எடுக்கும் வகையில் வைத்துள்ளனர். இந்த சூழ்நிலை கட்டாயம் திமுகவிற்கு பலத்த பின்னடைவுதான்.  எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

அதிமுக அணியிலும் இது தான் நிலை ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் சின்னம்மா கடைக்கண் பார்வைக்காக காத்திருந்தவர்கள் இன்று அவருக்கு எதிராக மாறிவிட்டனர். இதற்கு காரணம் சசிகலாவின் பதவி ஆசையும், அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையும்தான். சசிகலாவிற்கு இணையானவர்களே பழனிசாமி அண்கோவினரும், தத்துவஞானிகள் போல அன்றாடம் நடக்கும் அரசியலை நம்பி சசிகலா குடும்பத்தாருடன் இணைந்து இருந்த போது அவ்வளவு ஆட்டம் ஆடி இருக்கிறார்கள். தினகரன் அணியிடம் இவர்கள் பற்றிய சிடி எத்தனை அகப்பட்டு இருக்கிறது என்றே தெரியவில்லை. அமைச்சர் ஜெயக்குமாரின் தோழி என்று கூட ஒருவர் பேச்சு பரவவிடுகிறது. கூவத்துாரில் நடந்தது என்ன என்று சீரியல் போடும் அளவிற்கு நம்மவர்கள் நடந்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இதுவே அதிமுகவிற்கு மிகப் பெரிய வீழ்ச்சியை கொடுக்கும். 

அடுத்தது கருணாநிதி மகன் அழகிரியாவது தனி மனிதராகத் தான் போராடுகிறார். ஆனால் தினகரன் ஒரு கட்சியே தொடங்கி போர் தொடுக்கிறார். அதிமுகவிற்கு ஆதரவாக களம் இறக்கப்பட்ட திவாகரன் இது வரை பிரபலமாகவே இல்லை. தினகரனை நம்பிக் கூட சிலர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில் அவரை வெளியில் விட்டால் அதிமுகவின் கணிசமான ஓட்டுக்களை கட்டாயம் பிரிப்பார். ஆர்கே நகரின் ஒற்றை இடைத்தேர்தலில் தினகரனை சமாளிக்க முடியாமல் திணறியவர்கள் அதிமுகவினர் என்பது கடந்த கால வரலாறு. மாநிலம் முழுவதும் பதவி கிடைத்தவன், பதவிகிடைக்காதவன் என்று 2 கோஷ்டி எல்லா கட்சிகளிலும் உண்டு. இதில் பதவி கிடைக்காதவர்கள் தான் சீலப்பர் செல்கள். அவர்களை தினகரன் அணி தொடர்பு கொண்டு  முடக்கினாலே போதும் அதிமுகவின் வெற்றி கை மாறிவிடும்.

திமுக, அதிமுகவின் ஒரே நம்பிக்கை அழகிரி, தினகரன் முயற்சியால் வெற்றி கைமாறினால் அது அழகிரி, தினகரன் ஆகியோருக்கு நல்லது இல்லை என்பதுதான்.  அதை அவர்கள் எவ்வளவு புரிந்து கொண்டு இருப்பார்கள் என்பது தெரியவில்லை.  இதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு வால்பிடிக்கும் திமுகவும், பிரேமலதாவின் கடைக்கண் பார்வைக்காக அதிமுகவும், அதற்கு காரணமான பாஜகவும் அவர்களை விடுத்து அழகிரி, தினகரனை சமாளித்து தங்கள் கூட்டணிக்குள் இழுத்து போட்டால் போதும் வெற்றி இலகுவாக இருக்கும்.

"உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையன் மாணத் தொறும்" என்கிறார்  திருவள்ளுவர்

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவி போல உட்பகை அழித்து விடும் என்று அந்த குரளின் பொருள் சொல்கிறார் கருணாநிதி. இது பழனிசாமி, பன்னீர் அணியினருக்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு ஸ்டாலின்..?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close