நடிகர்கள் நாடாள நினைப்பது இனி பகல் கனவு தான்!

  பாரதி பித்தன்   | Last Modified : 11 Mar, 2019 05:54 pm
political-article-about-cinema-artists-come-politicians

இலங்கை தமிழர் ஒருவர், வெளிநாட்டில் இருந்தார். அவரை, நம்ம ஊர்காரர் சந்தித்து, இலங்கை அரசியல் நிலை குறித்து பேசினார். ‛‛பாவம் சார் நீங்க... சரியான முறையில் அரசியலை அணுகாததால் இவ்வளவு கஷ்டம்...’’ என்று பரிதாபப்பட்டார் நம்ம ஊர்காரர்.  

இலங்கை தமிழரோ, கோபத்தின் உச்சத்தை எட்டினார். ‛‛நாங்க எல்லாம் சரியான முறையில் தான் கடைபிடிக்கிறோம்; நீங்க தான் கடந்த, 50 ஆண்டுக்கும் மேலாக, சினிமா தியேட்டரில் முதல்வரை தேடிக் கொண்டு இருக்கிறீர்கள்; அவர்களிடம் போய் அரசியல் கற்றுக்கொடுங்கள்’’ என்று சாட்டையை சுழற்றினார் அந்த இலங்கை தமிழர்.

அண்ணாதுரை காலத்தில் இருந்தே தமிழகத்தில், முதல்வரை தியேட்டரில் தான் தேடினோம். இதற்காகத் தான் ஸ்டாலின் கூட, ஒரு சில தொடர்களில் நடித்து, தன்னையும் நடிகராக காட்டி, அரிதாரம் பூசிக் கொண்டார். ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின், சினிமா அத்யாயம் முடிவுக்கு வந்து விடும் என்று நினைத்தால், அது முடியாது போல் இருக்கிறது. 

அந்த வெற்றிடத்தை நிரப்ப, ரஜினி, கமல் என்று அடுத்த தலைமுறை நடிகர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆனால் முதற்கட்டமாக இனி நடிகர்கள் அரசியல் அவதாரம் எடுப்பது அவ்வளவு எளிது அல்ல என்று சமீபத்திய இரண்டு சம்பவங்கள் உணர்த்தி உள்ளன. 
சமத்துவமக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், கூட்டணி அமைக்க முயற்சி செய்து, தோல்வி அடைந்ததும், விஜயகாந்தை சென்று பார்த்தார். ஆனால், அவரும் கூட்டணியில், சமத்துவமக்கள் கட்சியை சேர்க்க விரும்பவில்லை. அதன் பின்னர், வேறு வழியில்லாமல் சமத்துவமக்கள் கட்சி, 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். 

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, கட்சி தொண்டர்கள் விருப்ப மனு வாங்க வருவார் என்ற ஆவலில், சரத்குமார், தன் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். ஆனால், விருப்பமனு வாங்க ஒருவர் கூட வரவில்லை என்று  அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சிறிது நேரத்திலேயே அவர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார். இன்றைக்கு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ரஜனியும், கலைத்தாய் பெற்றெடுத்த செல்லப்பிள்ளையாக தன்னை தானே அறிவித்துக் கொண்ட கமல் ஆகியோர், அரசியல் களத்தில் குதித்துவிட்டனர். 

இதில், ரஜினி, என் வழி தனி வழி என்று கூறிவிட்டாலும், கமல் வழக்கமான வழியிலேயே கட்சியை தொடங்கினார். கிராமசபைக் கூட்டத்தில் குரல் கொடுத்தார். புரியாத டுவிட்டர்கள், பேச்சுகள்  மூலம் மக்களுக்கு கருத்து சொன்னார். ‛நம்ம கமல் சொல்கிறார் நமக்கு தான் புரியவில்லை’ என்று  சிலர் அவருக்கு அறிவு ஜீவி சாயம் பூசினர். 

இதானால் அவர், நல்லவருடன் தான் கூட்டணி என்று அறிவித்தார். இந்த நிமிடம் வரை, ஒரு கட்சி கூட கூட்டணிக்கு வரவில்லை. அதாவது, ஒரு நடிகர் நம் கூட்டணியில் இருந்தால், நமக்கு உதவியாக இருக்கும், கூட்டம் கூட்ட செலவு செய்ய வேண்டியதில்லை என்று, பல லாபம் இருந்தாலும், யாரும் கூட்டணியில் சேரவும், சேர்க்கவும் முன்வரவில்லை. 

இந்த இரண்டு சம்பவங்களும், தமிழகத்தில் நாடாளும் கனவில் நடிகர்களுக்கு, புகழ் குறைவதையே காட்டுகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில், அரசியலில் நடிகர்கள் இல்லாமல் போவார்கள் என்பதையே தற்போது  உள்ள இந்த சூழல் தெளிவாக எடுத்து காட்டுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close