நோட்டாவுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 18 Mar, 2019 03:41 pm
special-article-about-small-political-parties

இந்தியாவை ஆளப்போவது யார் என்று முடிவு செய்ய நடக்கும் தேர்தல் இது. இப்போது மட்டும் அல்லாமல், எப்போது வேண்டுமானாலும் ஆட்சி செய்ய தகுதியான கட்சிகள், காங்கிரஸ், பாஜக, 3வது அணி. 

இதை தவிர, மற்ற கட்சிகள் அதாவது, தேசிய கட்சிகள் தவிர்த்த மாநில கட்சிகள், காங்கிரஸ், பாஜக கூட்டணியில்லாமல் தங்களுக்குள் ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிடுகின்றன. இவை அதனைத்துமே, தேர்தலுக்கு முன்பாக ஓட்டு போடுகிறவருக்கு, யார் நம்மை ஆட்சி செய்ய வேண்டும் என்று திட்டமாக முடிவு எடுக்க முடியும். 

இவர்களை தவிர்த்து சில கட்சிகள் இருக்கின்றன. சர்க்கஸ் கோமாளிகளுக்கு இணையாகவும், நோட்டாவிற்கு பினாமியாகவும் செயல்படுகின்றன. நோட்டா கூட, நாடுமுழுவதும் போட்டியிடும். ஆனால் இவர்கள், ஒரு மாநிலத்தில் ஒரு சில தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவார்கள். இதில், தனித்து போட்டியிடுகிறோம் என்று மார்தட்டிக் கொள்வார்கள். 

தமிழகத்தில், நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி போன்றவை தான் அந்த கட்சிகள். தமிழகத்தில் இவர்களை தவிர்த்து யாரும் சரியில்லை என்று தனித்து போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார்கள் என்றால், நாடுமுழுவதும் அல்லவா போட்டியிட வேண்டும். 

அவ்வாறு செய்யாமல், தமிழகத்தில், 40 தொகுதிகளில், இன்னும் சில கட்சிகள் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியில் மட்டும் தனி்த்து போட்டியிடப் போகிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்.  
ஒரு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சைகள், 3 இலக்க ஓட்டு வாங்குவார்கள்; ஆனால் பல பிரபலங்கள் கட்சி தொடங்கி இருப்பதால், ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 5 ஆயிரம் ஓட்டு பெருவார்கள். இதன் காரணமாக தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், இவர்கள் அனைவரும் சேர்ந்து பெறும் ஓட்டு, வெற்றி தோல்வியை மாற்றிவிடும். 

இதனால், பெரும்பாலான மக்கள் யார் ஆட்சி வர வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் தோல்வியை தழுவி விடுவார்கள். ஜனநாயகத்தின் பெருமையே இது தான் என்று தோள் தட்டுபவர்களுக்காக இந்த பகுதி. 

கட்சி தொடங்கியதும், அனைத்து வார்டுகளிலும் கமிட்டி அமைக்கும் வரை, தேர்தலில் போட்டியிடாமல் இருக்கலாம். அதன் பினனர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிடத்தகுந்த அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்ற பின்னர், சட்டசபை, லோக்சபா தேர்தல் என்று போட்டியிட்டால், நிச்சயம் இவர்கள் கொள்கைகளை அமல்படுத்த முடியும். அதை விடுத்து, நேராக பிரதமர் பதவிக்கு தான் போட்டி என்றால், இவர்கள் மக்களுக்கு நல்லது செய்யப் போவதில்லை. 

எப்படி நோட்டாவுக்கு விழும் ஓட்டுகள், எந்த பயனும் அற்று வீணாகிறதோ, அதே போல், இது போன்ற துக்கடா கட்சிகளுக்கு விழும் ஓட்டுகளும், நோட்டாவுக்கு சமமானவையே. எனவே, உண்மையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சி நடத்தினால், சீமான், கமல், சரத்குமார் போன்றோர், உள்ளாட்சி தேர்தல்களிலிருந்து தங்கள் தேர்தல் அரசியலை துவங்கினால் நல்லது. 

அப்படி செய்தால், மக்கள் மத்தியில் அவர்கள் நம்பிக்கையை பெற முடியும். அதே போல், இவர்களை நம்பி ஓட்டளிக்கும் மக்களின் ஓட்டுகளும் வீணாகாமல் இருக்கும். புரட்சி நாயகர்கள் சற்று சிந்தித்தால் நலம்!

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close