கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி - பகுதி 11

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 14 Mar, 2019 05:27 pm
kamal-hassan-is-a-hindutwa-terrorist-special-article

இந்த கட்டுரை ஆரம்பித்த பொழுது, நெருங்கிய நண்பர்கள் முதல், பிரியமான சகோதர, சகோதரிகள் வரை எனக்கு அறிவுறுத்திய வாசகம், “தேவையில்லாத வேலை” இது. இதற்கு பதிலாக, உருப்படியாக எதாவது செய்யலாமே என்பது தான். கட்டுரை எதை நோக்கி நகரப் போகிறது என்று தெரியாததால், என் மீது அக்கறை கொண்டோர் இப்படி அறிவுருத்தினர். இப்பொழுது வரை யாருக்கும் புரியவில்லை, ஏன் கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவர் என்று நிரூபணம் செய்ய வேண்டும் என்று! 

சில கமல் ரசிகர்கள், லேசான மிரட்டல் பாணியில், இது என் சொந்த யூகம் என்று மறுப்பும், கமலைப் பிடிக்காத சிலர், கமல் ஹாசனுக்கு புதுவித சாயம் பூசி, அவரின் நாத்திக பிரசாரத்தினால் ஏற்பட்ட அவப்பெயரை மறைக்க முயற்சிப்பதாகவும், குற்றம் சாட்டினர். 

நம்ம ஊரில் இதெல்லாம் சகஜம் தான். ஏனெனில், தான் இது வரை நம்பி வந்த ஒரு விசயத்தை, அது எதுவாக இருப்பினும், அதற்கு மாற்றுச் சிந்தனை எழும்போது, கடும் எதிர்ப்பு நிகழத்தான் செய்யும். அந்தளவு இந்தக் கட்டுரைத் தொடருக்குப் பெரிய எதிர்ப்பேதும் இல்லாததற்கு, எழுத்தின் தாக்கம் அதிகமாக இல்லாமலோ, கமல் என்னவாக இருந்தால் நமக்கென்ன என்பதாகவோ வாசகர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம். 

கட்டுரையின் நோக்கத்தினை இந்தப் பகுதியிலிருந்து தொடங்குகிறோம். இன்னும் ஒரு சில கட்டுரைகளில் சில உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து நிறைவு செய்வோம்.

 
இப்படியான ஹிந்துத்துவ சிந்தனையுடன் தன் கருத்துகளை, தான் எடுக்கும் சினிமாக்களின் மூலம் அழுத்தமாகப் பதிய வைத்து வந்த கமல்ஹாசன், சமீபத்தில் “ஹிந்துத் தீவிரவாதம்” பற்றி ரொம்ப அங்கலாய்த்துக் கொண்டார். ‛ரசிகர் மன்றம் கூட இருக்கக் கூடாது’ என்றவர்; ‛அரசியல் என்பது கட்சியில் இருந்து மட்டும் செய்வதில்லை’ என்றவர்; ‛நான் ஒரு போதும் கட்சியில் இணைவது, தொடங்குவது போன்றவற்றைச் செய்யப் போவதில்லை’ என்று அழுத்தமாகச் சொன்ன கமல்ஹாசன், திடீரென கட்சி ஆரம்பித்ததன் பின்னணி என்ன? 

கமலுக்கு அவ்வளவு அவசரமாக கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதுவும், தன் உயிர் மூச்சான சினிமாத் துறையில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில், இத்தனை அவசரமாக ஓர் அரசியல் கட்சி தொடங்கியது ஏனோ? 

வாங்க... திரை விலக்குவோம்! இதற்கெல்லாம் ஒரு மய்ய …. ச்சே… மையப் புள்ளி ஒன்று இருந்தது. அங்கே தான் அவரின் யூடர்ன் நிகழ்ந்தது. அதன் பெயர், “ஸ்வச் பாரத்” ஆம்!  பாரதப் பிரதமர், தூய்மை இந்தியா திட்டத்திற்காக சல்மான்கான், சச்சின், சசி தரூர், கமல்ஹாசன் உள்ளிட்ட சில விழிப்புணர்வுத் தூதர்களை அறிவித்தார். 

அதில், மக்களிடையே தூய்மைக்கான விழிப்புணர்வினைக் கொடுப்பது மட்டுமல்லாது, தன்னைப் போன்ற மேலும் ஒன்பது நபர்களை இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் இணைக்க வேண்டும் என்பது, அன்பான கட்டளை. மற்றவர்கள் இந்த பொறுப்பினை எப்படி எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. 

ஆனால், நம்மவர் இதை மிகவும் உவந்து ஏற்றுக் கொண்டதோடு, நான் ஒன்பது பேரை அல்ல ஒன்பது மில்லியன் ஆட்களை இதில் இணைப்பேன் என்று மிகவும் உற்சாகமாகவும் தீவிரமாகவும் உறுதிபூண்டார். 

அவர் பிறந்த நாளன்றைய அறிக்கையில், ‛‛தேசத்தைத் தூய்மைப் படுத்துவது ஒரு கட்சி சார்ந்த பணியல்ல. இதை இனி தான் நான் தொடங்க வேண்டும் என்பதல்ல, ஏற்கனவே கடந்த இருபது வருடங்களாக என் நற்பணி மன்றத்தின் மூலம் செய்து வருகிறேன். ஆகையால், இதை எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கொள்கிறேன். அதற்காக பிரதமருக்கு நன்றி சொல்கிறேன்’’  என்று சொல்லியிருந்தார். 

பொதுவாகவே தேசிய சிந்தனை கொண்ட கமல்ஹாசன், இப்பொழுது தேசப் பற்றாளர்கள் என்று பிற கட்சிகளால் அடையாளம் காட்டப்படும், பா.ஜ.க.,வின் ஒரு கொள்கைக்கு தூதுவரான தருணம் அது. அந்த மையத்திலிருந்து தலைகீழாகத் திரும்பி, ஹிந்துத்துவ எதிர்ப்பு மற்றும் மோடி எதிர்ப்பு என்று எப்படி மய்யம் ஆனது என்பது தான் அடுத்தப் பகுதி…

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close