மத்திய மண்டலத்தை இழந்துவிட்ட திமுக...?

  பாரதி பித்தன்   | Last Modified : 18 Mar, 2019 03:38 pm
is-dmk-lost-central-region

அதிமுகவிற்கு கடந்த சில தேர்தல்கள் வெற்றி வாய்பை தந்தது கொங்கு மண்டலம்.  எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும், அந்த குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் தொடர்வதும் கொங்குமண்டலத்தின் ஆதரவு தான் முக்கிய காரணம். எம்ஜிஆர் காலத்தில் திமுக ஆதரவு கோட்டையாக இருந்த கொங்குமண்டலம், ஜெயலலிதா ஆட்சியில் அவர்கள் கோட்டையாக மாறியது. 

தற்போது திமுக, அதிமுக கைகளில் கொங்கு மண்டலம் இல்லை என்று சொல்லும் நிலையில் கள நிலவரம் இருந்தாலும், கடந்த சட்டசபைத் தேர்தல் இப்பகுதியில் பெற்ற வெற்றியால் தான் அதிமுக ஆட்சி இன்றும் தொடர்கிறது. இந்த இடங்களி்ல தன் ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்த வேண்டிய திமுக இந்த லோக்சபா தேர்தலில் நேரடியாக களம் இறங்காமல் பெரும்பாலான தொகுதிகளை கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்துள்ளது. கொங்கு மண்டலத்தின் தலைமை இடமாகவும், துணை தலைநகர் போல இருக்கும் கோவை, ஈரோட்டில் கம்யூனிஸ்ட், மதிமுக போட்டியிடுகிறது. 

மற்ற திண்டுக்கல், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கரூர், கொங்கு நாடுமக்கள் தேசியக் கட்சி நாமக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி திருப்பூரில் போட்டியிடுகின்றன. இப்படி திண்டுக்கல், பொள்ளாட்சியில் மட்டும் திமுக போட்டியிடுகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுக போட்டியிடுவதே 2 தொகுதிகளில் மட்டும் தான். அதனால் இவர்கள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட நேரடியாக திமுகவிற்கு கிடைக்கும் பலன் என்னவோ 2 தொகுதிகள் தான். இது தான் கொங்கு மண்டலத்தின் நிலை.

கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து இந்த முறை மத்திய மண்டலத்தையும் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. மத்திய மண்டலம் என்று அழைக்கப்படும் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் திருச்சி,கரூர், காங்கிரஸ் கையிலும், சிதம்பரம் விசிக கையிலும்( இதில் தான் அரியலுார், ஜெயங்கொண்டம் தொகுதிகள் வருகின்றன) பெரம்பலுார் ஐஜேகேவிற்கும்,நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தொகுதியில்லாத புதுக்கோட்டை மாவட்டம் 4 லோக்சபா தொகுதிகளுடன் சேல.இணைக்கப்பட்டுள்ளது. திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மத்திய மண்டலத்தையும் கை கழுவிவிட திமுக தயாராகிவிட்டது என்பதையே காட்டுகிறது. 

அதற்கு பதிலாக இதுவரையி்ல் போட்டியிடாத சேலம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, தென்காசி  ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக எடுத்துள்ள இந்த நிலைப்பாடு அந்த கட்சிக்கு எந்தளவுக்கு பலன் தரும் என்பதை ஓட்டு எண்ணிக்கை தான் வெளிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் கொங்கு மண்டலம், மத்திய மண்டலம் ஆகிய இரண்டையும் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்த சோகத்தில் இருக்கும் திமுகவை களம் இறங்க வேட்பாளர்கள் படாத பாடு பட வேண்டி இருக்கும் என்பதே தற்போதைய நிலவரம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close