கமல் ஓர் ஹிந்துத்தவத் தீவிரவாதி? - பாகம் 12

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 20 Mar, 2019 02:42 pm
kamalhassan-is-a-hindutwa-terrorist-part-12

முன்னாள் ஹிந்துத்துவராகிப் போனார் கமல். காரணம்? நாம சினிமாவில் எல்லாம் பார்த்திருக்கிறோமே… வில்லன் வந்து ஒரு பெண்மணியை மிரட்டுவார்…

 “ஏய்ய்… வாங்குன காசை வட்டியோட உடனே கொடு… இல்ல ஒரு ராத்திரி என்னோடு படு “  அந்த பெண் கேரக்டர் மான ரோஷம், கற்பு கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைத்திருந்தால், அடுத்த சீன்ல தற்கொலை பண்ணிக்குவா. வேறேதாவது நிர்பந்தத்தில் வாழ வேண்டிய அவசியம் இருந்தால் அவர்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பாள். 

இரண்டாவது ஆப்ஷனை எடுத்துக் கொண்டார் ஆண்டவர். ஆம்! முற்றிலும் விலை போய் விட்டார். ஏனெனில் ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு திரைத்துறையில் இன்னொரு நற்பெயரான, வாங்கின கடனை சொன்ன தேதியில் தவறாமல் கொடுத்து விடுவார் என்பதை இழக்க விரும்பவில்லை கடன் கழுத்தை நெறிக்கும் நேரத்தில், என்ன கமல் சார் உதவி வேண்டுமா? 

சும்மா உதவி பெற வேண்டாம், கைமாறாக கட்சி ஆரம்பிச்சு நடத்துங்க போதும் என்றொரு வாய்ப்பு கதவைத் தட்டியது.  உங்கள் முகமுடி தான் உங்கள் கட்சி. அதாவது முற்போக்கு சிந்தனை என்று சில தத்துவங்கள் உதிர்ப்பீர்களே! அதையே தொடர்ச்சியாகச் செய்யுங்கள். 

அவ்வப்போது நாங்கள் கொடுக்கும் டாஸ்க்கையும் செய்யுங்கள். மீண்டும் உறுதி கூறுகிறோம், உங்கள் கௌரவத்திற்கும், உங்கள் பெயருக்கும் ஒரு போதும் பங்கம் ஏற்பட விடமாட்டோம்.  சுயமரியாதையை பாதிக்காத, நாட்டிற்குத் தீங்கு செய்யாத வகையில்... என்ற உறுதி மொழியில் ஈர்க்கப்பட்டார். 

ஏற்கனவே சமூகக் கருத்தினை இலவசமாக அள்ளி வீசும் ஆண்டவருக்கு, இப்பொழுது மேடை வேறு கிடைத்தாகி விட்டது. அவ்வளவு அவசரம் ஏன்? ஏனென்றால், அந்த காலகட்டத்தில் தான் ஆன்மிக அரசியல் என்று ரஜினி அரசியல் அறிவிப்பினை கிட்டத்தட்ட செய்து விட்டார். 

ரஜினி ஆரம்பித்த பின், கமல் கட்சி ஆரம்பித்தால் சலிப்பாகி விடும். ஆகவே, கமலை வைத்து கட்சியை உடனே ஆரம்பித்தனர். கவனிக்கவும்…. கமலை வைத்து கட்சி ஆரம்பித்தனர். அது ஓரளவு அவர்கள் நினைத்ததை நடத்தியது. 

ஆம்! கட்சி ஆரம்பிக்கும் முடிவை தற்காலிகமாகத் தள்ளி வைத்தார் ரஜினி. சந்தேகம் இருப்பவர்கள், ஒரு விசயத்தை கவனித்துப் பாருங்கள். கமல் கட்சி ஆரம்பித்த பின்னர், கமல் தான் ரஜினியைப் பற்றி பேசுகிறாரே ஒழிய, ரஜினி ஆரம்பத்தில் வாழ்த்து சொன்னதுடன் நிறுத்திக் கொண்டார். 

கமல் விட்ட தூதுகளுக்குக் கூட பதில் சொல்லவில்லை. வழக்கமாக, கமல் ரஜினியை ஒரு தடவை புகழ்ந்தால் ரஜினி கமலை நூறு தடவை புகழ்வார். அப்படியான ரஜினி, கமலை விட்டு நிறைய தள்ளிப் போனதன் காரணம், ரஜினியை அடிக்க கமலைப் பயன்படுத்தியது தான். 

கமல் தெரிந்து செய்தாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், கமல் எனும் அம்பு , ரஜினியையும் டார்கெட் பண்ணி தான் எய்யப்பட்டது என்பது, மேல்மட்ட அரசியல்வாதிகளுக்கும் உளவுத்துறைக்கும் தெரியும்.

ஏன் கமல் சொந்தமாக முடிவெடுத்து கட்சி ஆரம்பித்திருக்கக் கூடாதா என்று கேட்பீர்களாயின், அதற்கு விடை காண என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

1. விஸ்வரூபம்-1ல் வாங்கிய அடியிலிருந்து மீள முடியாமல் தவித்த கமல்ஹாசன் அவர்களுக்கு, உத்தமவில்லன், தூங்காவனம் போன்ற படங்களால், மேலும் இடி விழுந்தது. அதிலிருந்து அண்ணாச்சி எப்படி மேலெழுந்தார்? அதையும் தாண்டி விஸ்வரூபம் - 2 எப்படி எடுத்தார்?

2. அவரது உயிர் மூச்சான சினிமாவில் அடிபட்டு, சொந்த வாழ்க்கையிலும் சில கசப்பான தருணங்களைக் கடந்து கொண்டிருந்த சூழலில், ஒரு கட்சி ஆரம்பிக்கும் அவசியமும் மனோதிடமும் எங்கிருந்து வந்தது?

3. மையம் என்று பத்திரிக்கை நடத்திய கமல்ஹாசனுக்கு, மய்யம் என்று பிரிவினைவாதக் கூட்ட சிந்தனைபடி கட்சி பெயரை மாற்ற வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?

4. உருகி, உருகி பெருமாளைத் துதித்து காட்சிகள் வைத்த கமல்ஹாசனுக்கு, உத்தம வில்லன் படத்தில் நரசிம்ம அவதாரத்தை பின்புறம் எத்தி நகையாடும் காட்சி வைக்க யார் நிர்பந்தித்தது?

5. கமல்ஹாசனின் தரத்திற்கும், புகழின் உயரத்திற்கும், பிக் பாஸ் மாதிரியான சல்லித்தனமான நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இயங்க அவர் ஒப்புக்கொண்டது ஏன்? அதுவும் இரண்டு முறை! ( ஒரு நிகழ்ச்சிக்கு சம்பளமாக, 100 கோடி ரூபார் என்றொரு பேச்சு ஓடியது. உண்மைத் தன்மை தெரியாது)

6. விளம்பரப் படத்திலேயே நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை, திடீரென்று காற்றில் பறக்க விட்டுவிட்டு, போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தது ஏன்? என்னய்யா கொடுமையா இருக்கு... ஒரு மனுசன் தன் முடிவை மாற்றிக் கொள்வது பெரிய குற்றமா என்று கேட்பவர்கள், அவர் ஏன் போத்தீஸ் தவிர அதன் பிறகு வேறு எந்த விளம்பரத்திலும் நடிக்கவில்லை என்று சொல்லுங்களேன்?

7. மக்களிடமிருந்து, கட்சிக்கான நிதி திரட்டுகிறேன் என்று கிளம்பியவர், ஒரே வாரத்தில் முப்பது கோடி ரூபாய்கள் வசூலானது என்று அறிவித்தாரே? அதைக் கேட்டு ஊரே சிரித்ததே? உடனே அவ்வாறு திரட்டியது சரியல்ல என்றும் அந்தப் பணத்தை எல்லாம் மீண்டும் அவர்களிடமே திருப்பி அனுப்பி விட்டேன் என்று, ஒரு மூன்றாம் பிறை கேரக்டர் மாதிரி குட்டிக்கரணம் அடித்தாரே… நினைவிருக்கிறதா?

யோக்கிய சிகாமணி கமல்ஹாசனை, அப்படி மக்களிடம் திரட்டிய பணம் மற்றும் திருப்பி அனுப்பிய விதம் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்கச் சொல்லுங்களேன்? அல்லது அந்தக் கணக்கை வருமான வரித்துறையினரிடம் சமர்ப்பித்தாரா என்று நிரூபிக்கச் சொல்லுங்களேன்?

யோசித்து வைங்க… மிச்சத்தை அடுத்த பகுதியில் அலசுவோம்…

newstm.in

இந்த கட்டுரையில் இடம்பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close