கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வத் தீவிரவாதி - பகுதி 13

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 22 Mar, 2019 05:28 pm
kamalhassan-is-a-hindutva-terrorist-part-13

கட்சி ஆரம்பித்த போது பொதுவான, மரியாதைக்குரிய வாழ்த்துகள் தவிர, சட்டென ஒட்டி உறவாடிய ஆட்கள் யாரென்று பார்த்தீர்களென்றால் கமல்ஹாசனின் கட்சியின் பின்னணி தெரியும்.

அதுவரை கூத்தாடிகள் ஆண்டது போதும், தமிழனைத் தமிழன் தான் ஆளணும். பார்ப்பனர்கள், ஆரியர்கள் என்று பேசித் திரிந்த சீமான், கமல் தன்னை வந்து பார்ப்பது மரியாதை இல்லை என்பதால் தான், ஐயா அவர்களை நேரில் பார்க்க வந்தேன் என்று வளைந்து நெழிந்து பேசிவிட்டுப் போன காரணமும்,

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, தென்னிந்தியா, கிழக்கேயிருக்கா மேற்கேயிருக்கா என்று தெரியாத நிலையில், கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததற்கு வரிந்து கட்டி வந்து போன காரணமும்.

கமல் மனவோட்டத்திற்குச் சரியான முதல்வர் என்றால், சந்திரபாபு நாயுடு தான். அப்படி இருக்க, விழுந்தடித்துக் கொண்டு பினராயி விஜயனைப் போய் சந்தித்து ஆசி பெறுவதும், பினராயி விஜயன் தான் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் மாதிரி வலிந்து வலிந்து அவரைப் பாராட்டுவதற்குக் காரணமும் ஒன்றே!

மேலே குறிப்பிட்ட மூவரும் அந்நிய சக்திகளால் இயக்கப்படுபவர்கள் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமாயின், தயவுசெய்து அரசியல் பால்வாடிக்குச் சென்று அரிச்சுவடி வாசித்து விட்டு, அரசியல் பேச வாருங்கள். அதாவது, இந்த மூவருக்கும் ஒரே முதலாளி அல்லது இந்த மூவரும் ஒரே கம்பெனியின் ஊழியர்கள். அந்த ஊழியத்தில் அப்பொழுதைக்கு இணைந்தவர் திரு கமல்ஹாசன். 

இத்தனை காலம் காசு வாங்கிட்டு திரையில் நடித்துக் கொண்டிருந்தவரை, அதை விட அதிகம் காசு கொடுத்து நிஜத்திலும் நடிக்கச் செய்கிறார்கள். நடிப்பை எவ்வளவு நேர்த்தியாகச் செய்யவேண்டும் என்று கமலுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை. 

ஆனால், அவர் கேரக்டர் என்ன? அந்தக் கேரக்டரின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அவருக்கு பாடம் எடுத்து தான் அனுப்பியிருக்கிறார்கள் என்றால், கமல்ஹாசன் அனுதாபிகளுக்குக் கோபமோ வருத்தமோ வரலாம். ஆனால், அது தான் உண்மை. 

எடுத்துக்காட்டுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன்.  இந்தப் பிரிவினைவாதக் காளான்கள் எல்லாம் இங்கே களம் ஆடுவதற்கு முன், ஒரு முறை வெளிநாட்டிற்குக் கூட்டிச் சென்று பயிற்றுவிக்கப்படுவார்கள். 

குறிப்பாக அமெரிக்காவுக்கு, அதனிலும் குறிப்பாக ஹார்வேட் பல்கலைக்கழகத்திற்கு. அதில் கவனித்தீர்கள் என்றால், இவர்கள் தங்களின் அனுபவத்தைப் பாடமாக அங்குள்ள மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதாக ஒரு சீன் வைப்பார்கள். 

ஹார்வேட்  யுனிவர்சிடி என்றதும் ஏதோ பெரிதாக நினைத்து விடாதீர்கள். முன்பு இருந்த மாண்பெல்லாம் இப்பொழுது இல்லை. ஹார்வேட் என்பது அமெரிக்காவின் ஜவஹர்லால் நேரு யுனிவர்சிடி. அவ்வளவு தான். பிரிவினைவாதிகள் / இடதுசாரிகளின் மறைமுகக் கூடாரம். 

திருமுருகன் காந்தி, சீமான், கேஜ்ரிவால் எல்லாம் அமெரிக்கா போய் பயிற்சி!!!??? பெற்று வந்தவர்கள் தான். ஐயோ ! எங்கள் கமல்ஹாசன் பிறவிக் கலைஞன், அறிவுக் கொழுந்து என்று குரல் எழுப்பாதீர்கள்.

 

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தது எப்பொழுது? பிப்ரவரி 21ம் தேதி 2018 என்பது சரி தானே? அதே வருடம், அதே மாதம், அதாவது 2018ம் வருடம் பிப்ரவரி 10ம் தேதி கமல்ஹாசன் என்ன செய்து கொண்டிருந்தார்? 

பதில் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்… அண்ணாச்சி ஹார்வேட் பல்கலைக்கழகத்தில்  “கருத்துச் சுதந்திரம்” பற்றி சின்னப்புள்ளைகளைக் கூப்பிட்டு வச்சு உரை நிகழ்த்திட்டு இருந்தார்.

இன்னும் கூட இது பிரிவினைவாதக் கூட்டமா என்று சந்தேகிப்பவர்களுக்கு, இன்னொரு டம்ப்ளர் பாகற்காய் ஜூஸ் தாரேன்… தொண்டையில் சிக்கும் அளவுக்கு கசக்கும். அதே நாளில், அதே ஹாவேர்டில் அதே உலகநாயகன், “தமிழகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் பேட்டி ஒன்றைக் கொடுத்தார். 

பேட்டி எடுத்தது யார் தெரியுமா? பாகிஸ்தானின் பகிரங்க உளவாளி, பயங்கரவாதிகளின் பாதுகாவளி, இடதுசாரிகளைக் காக்கும் பங்கர் என்றெல்லாம் இடதுசாரிகளால் புகழப்படும் “ பர்கா தத்” தான்.  இதற்கு மேல் உங்களுக்கு ஆதாரம் தேவைபடாது என்று நினைக்கிறேன்.

கொசுறாக உள்ளூர் ஆதாரம் ஒன்னு கொடுக்கட்டுமா? கட்சி ஆரம்பித்தவுடன் கமல்ஹாசனையும் அவரது கட்சியையும் மெனக்கெட்டு முக்கி முக்கி ப்ரொமோட் பண்ணின தமிழகச் சானல் எது? ஆங்ங்ங்…. விஜய் டிவியே தான். 
இப்ப புரிஞ்சுருக்குமே?

சூழ்நிலைக் கைதியாகச் செய்கிறாரோ, சுய சிந்தனையுடன் செய்கிறாரோ தெரியாது. ஆனால், கமல்ஹாசனும், அவரது கட்சியும் முழுக்க முழுக்க தேசப் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது.

அப்ப கமல்ஹாசன் நம்மவர் இல்லையா? சதிலீலாவதி ஆளா? அவரை இயக்குபவர்களின் பஞ்சதந்திரம் தான் என்ன? உத்தம வில்லனுக்குக் கொடுத்த டாஸ்குகள் என்னவாக இருக்கும்….? அடுத்த பகுதியில்…

newstm.in
இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close