மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி !

  இளங்கோ   | Last Modified : 26 Mar, 2019 10:07 am
ayya-vaikunda-dharmapathi

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி திருக்கோவில் உள்ளது. அய்யா வைகுண்ட தர்மபதியில் 32 அறங்கள் பொருந்திய சிம்மாசனத்தில் அரசாட்சி செய்து  பக்தர்களுக்கு அருள்புரிகின்றார். 

அய்யா வைகுண்ட தர்மபதியில் பள்ளியறை. சுற்றபிரகார மண்டபம், தியான மண்டபம், அர்த்த மண்டபம், ஏழு நிலையில் 63 அடி உயர ராஜ கோபுரம், ஐந்து துணை கோபுரங்கள், 96 கால் தத்துவ மண்டபம், 64 தூண்கள் பொருந்திய அய்யா வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்க்கு அருள்பாலிக்கின்றார். அய்யாவை உருவம் அற்றவராக வழிபடும் இடத்தில் அவருக்கு பின்னால் கண்ணாடி இருக்கும், அதன் தத்துவம் அய்யாவை வணங்கும்போது நமது உருவம் அதில் தெரியும். 

அய்யா வைகுண்ட பரம்பொருளை நாடிவரும் பக்தர்கள் எல்லோரும் ஜாதி மதத்தை மறந்து உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேறுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சமத்துவத்தை குறிக்கின்றது.  இக்கோவிலில் பத்து நாள் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கும். அப்போது எராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து  பத்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தையொட்டி தினமும் கருடவாகனம், குதிரை வாகனம், யாழி வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் புறப்பாடு நடைபெறுகிறது. 

இக்கோவிலில்  எட்டாம் நாள் திருகல்யாண உற்சவமும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. இந்த திருகல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தங்கள் வீட்டில் இருந்து விதவிதமாக தயாரித்து எடுத்து வரும்  பலகாரங்களை வைத்து   படையல்லிட்டு வழிபாடு செய்வது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும்  இத்திருவிழாவின் முதல் நாளான அய்யா திருநாமம் பொறித்த கொடியினை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து கொடியேற்றப்படுகிறது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிப்பட்டு செல்கின்றனர். அப்போது ஆலயத்தில் கொடியேற்ற விழாவையொட்டி உச்சி படிப்பு மற்றும் உக படிப்பு பூஜைகள் ஆலயத்தில் நடைபெருகிறது.  கடைசி நாளான பத்தாம் நாள் அய்யா தேர்பவனியில் மணலி புதுநகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. 

அய்யா வைகுண்டரை வழிபடுபவர்கள் தலைப்பாகை அணியும் வழக்கம் உள்ளது. இதற்கு காரணம், மன்னர்கள் ஆட்சி காலத்தில் உயர் சாதியினர் எதிரில் வந்தால், மற்ற சாதியை சேர்ந்த ஆண்கள் துண்டை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும் அல்லது கை இடுப்பில் வைத்து குனிந்து நிற்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.  அடிமைத்தனத்தை உடைத்தெறியும் பொருட்டு தனது பக்தர்கள் தலையில் துண்டை தலைப்பாகையாகக் கட்ட வைத்தவர் அய்யா வைகுண்டர் என்று கூறப்படுகிறது. 

அய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டில் உள்ள ஒரு சில அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தால் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ஒரு காலத்தில் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள் என சொல்லப்படுகிறது. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலானோர்  நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் கணிசமாக இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன. 

அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதரித்த தினமான மாசி மாதம் கொண்டாடப்படுகிறது.  இதற்கு  என்று தனியாக தமிழக அரசு  நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு விடுமுறையும் அளிக்கிறது. 

அய்யாவழியின் சமயச்சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கிறது.  அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானையிலும், அருள் நூலிலும் திருநாமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அய்யா கோவில்களில் குறிப்பாக இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அய்யாவை வழிபட்டு செல்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close