செல்பி மோகம்... உங்களுக்கு சோகம்...!

  இளங்கோ   | Last Modified : 28 Mar, 2019 09:32 am
about-self-portrait-photos

இந்தியாவில் நவீனங்கள் வேகமாக வளரவளர நாமும் அதை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த விஞ்ஞான நவீனம் வருவதற்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம், எதை எல்லாம் பாதுகாத்து வைத்திருந்தோம் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.  முன்பெல்லாம் புகைப்படம் என்றால் பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் மிக குறைவாக இருந்தது. ஆனால் தற்போது புகைப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை நம்மால் மறுப்பதற்கில்லை. அந்த  அளவிற்கு செல்பி பிரியர்களின் எண்ணிக்கை எப்படி பெருகியது என்று பாருங்கள்...

அமெரிக்க புகைப்படக் கலைஞரான ராபர்ட் கொரனலிஸ்  1839ம் ஆண்டு ஒரு நாள் தன் கேமராவை வைத்து அவரே புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது கேமராவின் லென்ஸ் மூடியை கழற்ற முடியாமல் அதனோடு போராடி கொண்டிருந்தார். ஒரு வழியாக லென்ஸ் மூடியை கழற்றியதும் தானாகவே புகைப்படம் எடுத்தது. 

தன்னை தானே புகைப்படம் எடுக்கும் செல்ப் போர்ட்ரைட் என்பதன் சுருக்கமே, செல்பி என அழைக்கப்படுகிறது. இதன் தமிழாக்கம், தாமி என கூறப்படுகிறது. முதன் முதலில் செல்பி புகைப்படத்தை எடுத்த அமெரிக்க புகைப்படக் கலைஞர் ராபர்ட் கொரனலிஸ் அவரை பலரும் போற்றினர்.  தற்போது செல்பி எடுக்க தெரியவில்லை என்றால் நம்மை ஒரு கேவலமாகவும், வேற்றுகிரகவாசியை போலவும் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு செல்பி மோகம், அனைவரையும் கவர்ந்துள்ளது. 

செல்பி எடுக்க வேண்டும் என்ற மோகத்தால் பலர் மோசமான விளைவுகளைச் சந்திக்கவும் நேரிட்டது.  இதனால் பலர் உயிர் இழந்துள்ளனர். தற்போது இளவயதினர் முதல்  முதியோர்கள் வரை செல்பி மோகம் இல்லாதவர்களே பார்க்க முடியாது. செல்ஃபி எடுக்க பல டெக்னிக்குகள் இருக்குகிறது. செல்பி மோகத்தில் மூழ்கியுள்ள இன்றைய இளம் தலைமுறையினர் அதற்கான பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனர். ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ புகைப்படம் எடுக்கும் பழக்கத்தினால், விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு ‘என் வாழ்க்கையை நானே அழித்தல்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 2014-ஆம் ஆண்டு 15 பேரும், 2015-ஆம் ஆண்டு 39 பேரும், 2016 -ஆம் ஆண்டு 73 பேரும் செல்பி எடுக்கும் போது இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் செல்பி எடுக்கும் போது இறந்தவர்கள் மட்டும் 76 பேர் என கூறப்படுகிறது.

 இறந்தவர்களில் பலர் இளம் வயதினர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ரயில் தண்டவாளம், உயரமான மலை நீர் வீழ்ச்சி போன்ற ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து சிலர் இறந்துள்ளனர். அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.  புகைபடம் எடுப்பது ஒரு நினைவாக இருக்க வேண்டுமே தவிர அவரின் புகை ஓவியங்களாக அமைந்துவிட கூடாது. 

இது குறித்து மென் பொருள் ஆய்வாளர் ஒருவரிடம் கேட்டப்போது,  செல்வி எடுப்பவர்களின் உயிரை அவர்களே மாய்த்து கொள்ள கூடாது என்றும், செல்பி எடுப்பது பொழுதுபோக்காக இருக்க வேண்டுமே தவிர தனக்கோ, மற்றவர்களுக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்க கூடாது என்றார். மேலும், இதற்கு சமூக  வலைத்தளங்களும் ஒரு காரணம் என்றும் கூறினார். 

செல்பி எடுப்பதினால் என்ன பாதிப்புகள் நமக்கு வரும் என்று தோல் நோய் நிபுணர்களிடம் கேட்ட போது, செல்பி எடுக்கும் போது அதில் வெளியாகும் நீல நிற ஒளி, தோல் நலனையும், வெளியாகும் எலக்ட்ரோ மெக்னடிக் கதிர்கள், மரபணுவை பாதிக்கும். செல்பி பழக்கம் ஒரு வித மனோ வியாதி என ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு, உலகம் முழுவதும், 27 பேர் செல்பி எடுக்கும் போது இறந்ததாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஓரிடத்தில் நான்கு பேர் கூடுகிறார்கள் என்றால், வாங்க ஒரு செல்பி எடுப்போம் என்ற பேச்சு தான் மேலோங்குகிறது என்கின்றனர் தோல் நோய் நிபுணர்கள். 

இந்தியாவில் இனி ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. செல்பி புகைப்படம்  எடுப்பது தனிபட்டவரின் உரிமை என்றாலும் மற்றவர்களுக்கு இடையூராக இருந்தால் குற்றம் குற்றம்  தானே.  

நமக்குள்ளே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்த செல்பி நமக்கு முக்கியமா? என்பதையும், எந்த இடத்தில் எடுக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்வது சிறந்தது. கிடைக்கும் லைக்குக்காக ஆசைப்பட்டு, வாழ்க்கையை தொலைத்து விட வேண்டுமா? 

பாதுகாப்பான இடத்தில், பாதுகாப்பான சூழலில் செல்பி எடுப்பது தவறில்லை. சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போது, அற்ப சந்தோஷத்துக்காக ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன...?  வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் முறை அதிகரித்து விட்டதால், வெற்றியோ.? தோல்வியோ.? நல்லதோ.? கெட்டதோ.? வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செல்பி எடுக்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பெருகி வருகிறது. இவை எல்லாம் வருங்கால தலைமுறையினர் சமமுதாய அக்கறையோடு புரிந்துகொள்வார்கள் என நம்புவோம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close