ஜெ, உடல் நலம் பாதிப்பும், மருத்துவமனை காட்சிகளும்...

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 07:54 pm
special-article-about-j-jayalalitha-death

தமிழகத்தில், 2016 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார், அதிமுக பொது செயலர் ஜெயலலிதா. இதன் மூலம், எம்ஜிஆருக்குப் பின், தமிழக அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒரு புதிய சாதனையை பதிவு செய்தார் ஜெ.,!

ஜெ., தலைமயில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்து நான்கு மாதங்களே ஆன நிலையில், செப்டம்பர் 22 இரவு யாரும் எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. போயஸ் கார்டனில் இருந்து, அப்பல்லோ மருத்துவமனைக்கு போன் பறந்தது. 

முதல்வர் ஜெயலலிதா, மின்னல் வேகத்தில் ஆம்புலன்சில், அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீர்ச் சத்து குறைபாடு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

‛முதல்வர் ஜெ., இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்’ என அடுத்த சில நாட்களில் அறிக்கை வெளியானது. ஆனால், முக்கிய தலைவர்கள் உட்பட யாரையும், ஜெ.,வை பார்க்க அனுமதிக்கவில்லை. 

ஒரு வாரம், இரண்டு வாரம் என சென்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக ஜெ., வெளிநாடு செல்லவிருக்கிறார் என வதந்தி பரவியது. இதை அவசர அவசரமாக மறுத்த மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் எனவும் அப்பல்லோ நிர்வாகம் அடுத்த அறிக்கையை வெளியிட்டது. 

 

இதன் காரணமாக, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் கவர்னர் வரை, அனைவருமே, மருத்துவமனைக்கு சென்று, டாக்டர்களை சந்தித்து ஜெலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து வந்தனரே தவிர, அவர்களில் ஒருவர் கூட, ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. 

நாட்கள் உருண்டோடி, லண்டனில் இருந்து டாக்டர் பீலே வரவழைக்கப்பட்டார். அவரும் தன் பங்குக்கு, ஜெ., நலமுடன் இருப்பதாகவும், அவரின் உடல் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் தன் அறிக்கையில் தெரிவித்தார். 

ஜெ., நல்லபடியாக உடல் நலம் தேறி, தலைமை செயலகத்திலும், சட்டசபையிலும் மீண்டும் கர்ஜிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பலர் இரவு பகலாக மருத்துவமனை வாசலில் காத்துக்கிடந்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைெபற்றன. 

ஜெயலலிதா உடல் நலம் தேறி விட்டார். அவர் காலை உணவாக இட்லி சாப்பிட்டார். பழ ரசம் அருந்தினார் என, அதிமுக செய்தி தொடர்பாளர்கள், பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். இதனால், ஜெ., விசுவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 ‛ஜெ.ஜெயலலிதா எனும் நான்...’ என்று, அவர் பதவிப் பிரமாணத்தின் போது உறுதி மொழியேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ஜெயலலிதா விசுவாசிகளுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது....

தொடரும்...

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close