வேர்க்கடலையில் என்ன இருக்கு...?

  இளங்கோ   | Last Modified : 29 Mar, 2019 09:43 am
what-is-there-in-ground-nut

மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் பொழுதைக் கழிப்பது என்பது மிக சவாலான காரியமாகத் தான் உள்ளது. பொழுதைக் கழிக்க பல விஷியங்கள் செய்கின்றோம். அதில் ஒன்று தான் திண்பண்டங்கள். 

தேவைக்கு ஏற்ப பல்வேறு திண்பண்டங்கள் எடுத்துகொள்கின்றோம். ஆனால், சத்தான ஆரோக்கியமான திண்பண்டங்கள் எடுத்து கொள்கிறோமா என்றால் அது முற்றிலும் கிடையாது. இன்றைய நவீன உலகிற்க்கு ஏற்றார் போல் பல வண்ணமயமான திண்பண்டங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரகூடிய அளவில் பாக்கெட் செய்து விற்கப்படுகின்றன.  இது போன்ற திண்பண்டங்கள் தான் நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுகின்றோம். அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய திண்பண்டங்களா என்று ஒருபோதும் சிந்திப்பதில்லை. 

நம் நாட்டில் இயற்கையான திண்பண்டங்கள் அதிகம் உள்ளது. நம்மில் பெரும்பாலான நபர்கள் தனது வேலையை முடித்து விட்டு வீட்டிற்க்கு செல்லும் போது அதிகம் பயண்படுத்தும் திண்பண்டங்கள் வேர்க்கடலை தான். வேர்க்கடலையில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது என்று பலருக்கு தெரியாது. இருதய நோய்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும், இதில் வைட்டமின் இ, மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாங்கனீஸ், போன்றவை அதிகமாக உள்ளது  என மருத்துவர்கள் கூறுகின்றனர்.   

வெளியூர்களுக்கு பயணம் செல்லும் பொழுது ஜன்னல் ஓரம் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து கொண்டே வாயில் வேர்க்கடலையை போட்டு அசைபோடடும் சுகமே தனி எனக் கூறுகின்றனர் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள்.  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடலை போடவும், குட்டிக்கதைகள் பேசவும், வேர்க்கடலை தேவைப்படுகிறது. 

ஒரு நாள் தாம்பரம் முதல் சென்னை கடற்க்கரை வரை ரயிலில் சென்று பாருங்கள், அப்போது வேர்க்கடலை, வேர்க்கடலை என்ற சத்தம் கேட்க்கும். அப்போது சூடாக ஒரு சிரிய குவலையில் (10 ரூபாய் அளவிற்கு) வேர்க்கடலை ஒரு பேப்பரில் மடித்து கொடுப்பார்கள். அந்த வேர்க்கடலையை சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயிலில்  அமர்ந்து ஒன்று ஒன்றாக சாப்பிட்டு கொண்டே வருவார்கள் சென்னை தாம்பரம் வரை. 

பெரும்பாலான இளைய தலைமுறையினர். நவீன மயமான வண்ணமயமான பாக்கெட்டுகளில் கிடைக்கும் திண்பண்டங்களையே விரும்பி வாங்குகின்றனர். இதனால் வேர்க்கடலை விற்கும் நபர்களின் எண்ணிகையும் குறைந்து விட்டதாக தெரிவிக்கின்றனர் வேர்க்கடலை வியாபாரிகள். வேர்க்கடலை மனிதனுக்கு மிகவும் சத்தான உணவு பொருள். 

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தேவையற்ற பொருட்களை வாங்குவதை விட மலிவான விலையில், சத்தான, வேர்கடலையை வாங்கி சாப்பிடுவது நமக்கு மட்டும் நல்லதல்ல, அத்தொழிலை நம்பி உள்ள மக்களுக்கு உதவுவது போலவும் இருக்கும் !
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close