மணம் கமழும் ஊதுவத்தி....!

  இளங்கோ   | Last Modified : 29 Mar, 2019 10:24 am
smell-of-fuming

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தயாரிக்கப்படும் ஊதுவத்தி ஒரு சிறு குடிசை தொழிலாக உள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் ஊதுவத்தி தொழிற்சாலை செயல்படுகிறது. இறைவழிபாட்டில் இன்றிமையாதது ஒன்று ஊதுபத்தி. ஊதுபத்தியின் மணம் பக்தியை வரவழைப்பதோடு, தெய்வீகச் சூழலையும் உருவாக்குவது விந்தையே. மன அமைதிக்கும், மன மகிழ்ச்சிக்கும் மருந்தாகும் இந்த ஊதுவத்தித் தொழில், தற்போது குடிசைத் தொழிலாகத் திகழ்கிறது. 

தமிழகத்தில் ஊதுவத்தி தொழிலால் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊதுவத்தி செய்யும் ஒரு நபரை நாம் கண்டோம்.(அவர் பெயர் சொல்ல மறுத்துவிட்டார்.) அவரிடம் ஊது வத்தி பற்றி தெரிந்துகொள்ள ஒரு சில மணி  நேரம் பேசினோம். 

அப்போது அவர், நான் இதற்கு முன்பு ஒருவரிடம் ஊதுவத்தி செய்யும் வேலை செய்துவந்தேன். பிறகு சுயமாக ஒரு ஊதுவத்தி தொழில் செய்ய வேண்டும் என்று ஒரு கனவாக இருந்தேன். தன்னுடைய முயற்சியாலும், தன்னுடைய நம்பிக்கையாலும் இந்த தொழிலை தனியாக செய்யவேண்டும் என்று தொழிலை செய்ய ஆரம்பித்தேன். தங்களது வீட்டில் குடிசைத் தொழிலாக ஊதுபத்தித் தயாரிக்கும் தொழிலை முதலில் ஆரம்பித்தேன். பிறகு சரியான அளவோடு கரித் தூள், மரத் தூள், ஜிகட் பவுடர் ஆகியவற்றைக் குறிப்பிட்ட சதவீதத்தில் முறையாகக் குழைத்து மாவு தயாரித்து, அதனுடன் வாசனைத் திரவியங்களை சேர்த்து இயந்திரத்தின் உதவியுடன் ஊதுபத்திகளை தயாரிக்க ஆரம்பித்தேன். கிரைண்டரை போல் மாவு தயாரிக்கும் இயந்திரத்தையும், ர ஊதுபத்தி தயாரிக்கும் 5 இயந்திரங்களையும் வாங்கி ஆரம்பித்தத் தொழில் தற்போது கமகமவென மணம் பரப்புகிறது. தற்போது நாளொன்றுக்கு 8 பேர் 7 மணி நேரம் பணிபுரிகின்றனர். மாதம் 16 கிலோ என  ஒன்றரை டன் எடையில் ரூபாய் 1.10 லட்சம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கப்பட்டு வருகிறது.  வங்கிக் கடனுதவியும் விரைந்து கிடைத்து விட்டால் ஒரு மாதத்திற்கு ரூ2.90 லட்சம் மதிப்பிலான 5 டன் ஊதுபத்திகளைத் தயாரிக்க முடியும் என்றார்.

மேலும், இத்தொழிலுக்கு அரசு சார்பில் வங்கி கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத் தொழில் மையத்தில் வங்கிக் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தும், அதற்கு தகுதி உடையவர்களாக இருந்தும், இது வரை வங்கி கடன் கிடைத்தபாடில்லை.  இவர்களை போன்று ஊது வத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள இளைய தலைமுறையினருக்கு இந்த கடன் தொகை விரைவாகக் கிடைத்தால், பெரும்பாலான இடங்களில் ஊதுவத்தி தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கி அவர்களையும் வாழ வைக்க முடியும் என்றார். 

இவரை போன்று விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும்,  இதற்கு பெரிய மூலதனம் தேவையில்லை. ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சிறு மூலதனத்துடன் க நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும்.

ஊதுவத்தி செய்யும் முறை :

சந்தனப் பவுடர், சாம்பிராணி, மட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு பெரிய பாத்திரத்தில் போடவும். அதனோடு சாம்பிராணி, மட்டிப்பால் இரண்டையும் அரைத்து பாத்திரத்தில் போடவும் இரண்டையும் சேர்த்து பன்னீர் கலந்து விட்டு கலக்கவும். எல்லாப் பொருட்களும் ஒன்றாக கலந்த பிறகு ஒரு மூடியில் இரவு முழுதும் வைத்துகொள்ளவேண்டும். மறுநாள் கலை எடுத்து ஊதுவத்தி தயாரிக்கலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close