கோடை வெயிலை சமாளிக்க குளிர்ச்சி தரும் தலம்...!

  இளங்கோ   | Last Modified : 02 Apr, 2019 05:56 pm
beema-falls-special-story

திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அண்ணாமலையார் ஆலயம் தான். ஆனால் அங்கு இயற்கை மிகுந்த சுற்றுலாத்தலங்கள் இருப்பது பலருக்கும் தெரியாது. 

இங்கு இருக்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்று தான்   பீமன் நீர்வீழ்ச்சி. இவை திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ளது. இந்த அழகான நீர்வீழ்ச்சிக்கு நீங்கள் சென்றதுண்டா…. 

வாருங்கள், இந்த நீர் வீழ்ச்சி சுமார் 80 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இங்கு கொட்டும்  நீரில் குளிக்கும் போது கிடைக்கும்  சுகமே தனி.  மற்ற நீர் வீழ்சியில் குளிக்க வனத்துறையோ, காவல்துறையோ பல கட்டுபாடுகளை விதித்திருக்கும். ஆனால் இந்த நீர் வீழ்ச்சியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இங்கு குடும்பத்தோடு பல சுற்றுல்லா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பரமனந்தல் செல்லும் வழியில் மேல்பட்டு என்ற மலை கிராமம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 3050 அடி உயரம் கொண்ட பகுதியில் உள்ளது. எந்த காலத்திலும் இங்கு  மட்டும் குளிச்சியான காற்றோற்றத்துடன்  இருக்கும். கோடைகாலத்திலும் ஜில் என்ற காற்றை அனுபவிக்கலாம். காட்டுக்கு நடுவில் உள்ள கண்ணாடி மாளிகையை காண்பதற்காக இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு உள்ள கண்ணாடி மாளிகை என்ற பெயர் கொண்ட பயணியர் விடுதி 1890 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கண்ணாடி மாளிகைக்கு செல்ல போதிய பாதைகள் இல்லாத்தால் இங்கு யாரும் செல்வதில்லை. ஒரு வேளை செல்ல வேண்டும் என்றால் அங்கு உள்ள மலை வாழ்மக்கள் துணையுடன் தான் செல்ல வேண்டும்.  தங்க விரும்புபவர்கள் திருவண்ணாமலையில் உள்ள வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று செல்லலாம்.

இந்த மலை பகுதியில் நீர் மத்தி மரங்கள் உள்ளன. பல மரங்கள் இருந்தும் தேனீகள் மட்டும் இந்த மரத்தை குறிவைத்து தேன் கூடுகள் கட்டுகின்றன. மலையின் சில இடங்களில் மட்டுமே நீர் மத்தி மரங்கள் உள்ளன. இந்த மரங்களை 15 பேர் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்டி பிடிக்க முடியும். அந்தளவுக்கு அதன் விட்டம் பெரியது. மலைக்கு செல்லும் போது  இருபது கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு மரம் மட்டும் சுலபமாக சென்று பார்க்கும் வகையில் உள்ளது. 

தமிழ்நாடு காவல்துறைக்கான கண்ட்ரோல் டவர் ஒன்று இங்கு உள்ளது. இந்த டவர் மட்டும் பழுதானால் காவல்துறையின் ஒயர்லெஸ் செயல்பாடுகள் அத்தனையும் முடங்கிவிடும் என்கின்றனர் அதிகாரிகள்.   இந்த மலையை ஒட்டி தெற்கு பகுதியில் உள்ளது பர்வதமலை. இங்கு உள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு அதிகபடியான மக்கள் வந்து செல்கின்ரனர். பூஜை செய்யும் முறையும் சற்று வித்தியாசமாக உள்ளது. அம்மனை வணங்கி விட்டு சூரிய உதயத்தின் போது மலையை விட்டு இறங்கிவிடுகின்றனர். இங்கு விவசாயம் நடக்கிறது என்றால் நம்பமுடிகிறதா...? ஆம் இங்கு இருக்கும் மலை வாழ் மக்களில் தொழிலாகவும் விளங்குகிறது எள் விவசாயம். மலையில் எள் அதிகம் விளைகிறது. இதிலிருந்து கொழுப்பு சத்து இல்லாத எண்ணெய் எடுக்க முடியும்  என்கின்றனர் மலை வாழ் மக்கள். இந்த எள் மழைக்காலத்திற்கு பின் விளையும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அப்போது இந்த மலைப்பகுதியை வலம் வந்தால் சூரிய வெளிச்சத்தில் தங்கமாக இந்த மஞ்சள் பூக்கள் பிரதிபலிக்கும். 

அதேபோல், மலைப்பிரதேசத்தில் மட்டுமே விளையும் சாமை என்ற தானியம் இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.  இது உணவு பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. பிரபல பிஸ்கட் கம்பெனியான மேரிக்கோல்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிஸ்கட்கள் சாமையை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதேபோல் நாசிக்கில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் இந்த சாமை பயன்படுத்தப்படுகின்றது. 

சுற்றுலா பயணிகளுக்கு ஒன்று சொல்ல வேண்டும், மழை காலம் முடிந்தபின் தான் இங்கு செல்ல வேண்டும்.  ஏனெனில், அப்போது தான் அந்த அருவியில் தண்ணீர் கொட்டும். அப்போது வந்தால் தான் ஆனந்தமாக ரசிக்கவோ, குளிக்கவோ முடியும்  என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close