கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி - 16

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 05 Apr, 2019 11:00 pm
kamal-hasan-as-a-hindu-extremist-16

அதென்னங்க பொசுக்குனு கமல்ஹாசனுக்கு சுயபுத்தி இல்லைனு சொல்லிட்டீங்க, அவர் எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா, கலைஞானிங்க அவரு! ஐஐடில எல்லாம் போய் வகுப்பெடுத்திருக்காருங்க! கடந்த கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு அன்பர் இப்படி கேட்டிருந்தார்.

உண்மை தான். அவரின் தொழில்/கலை அறிவை இங்கே நான் ஒருபோதும் குறை சொல்லவில்லை. கமல்ஹாசனின் அரசியல் அறிவு மற்றும் சமகால சமூக அறிவு குறித்துதான் விமர்சனம். பதிலாகச் சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

கமல் கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? அதாவது, இந்த மாநிலத்தில் அவர் திருத்த நினைக்கும் விஷயம் என்ன? அதற்காக அவர் முன்னெடுத்த முயற்சிகள் என்னென்னவென்று கேள்வியை எழுப்பி, அத்துடன் இதுவரை கமல் செயலாற்றிவந்த, பேசிய விஷயங்களுடன் கொஞ்சம் பொருத்திப் பார்த்தீர்கள் என்றால், அவரது அரசியல் மற்றும் சமூக அறிவு என்னவென்று நீங்களே புரிந்து கொள்ளலாம்.

 மற்ற எல்லாரும் கட்டை விரல் கூட நனைக்கத் தயங்கும் ஆட்கள் முன், நீங்கள் மட்டும் அரசியல் ஆற்றில் எப்படி சார் உடனே முடிவெடுத்து உடனே கட்சி ஆரம்பித்தீர்கள் என்று நடிகர் விவேக் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கேட்ட போது கமல் சொன்ன பதில்:
"இது நான் விரும்பிப் போய் ஏற்றுக் கொண்டதல்ல. கணுக்கால் கூட நனைந்து விடக்கூடாது என்று இருந்தவர்கள் தான் நாங்கள். நாங்கள் இருக்கும் இடத்தில் தான் இருந்து வருகிறோம். கழுத்தளவில் எங்களைச் சூழ்ந்து அரசியல் தாக்கிக் கொண்டுள்ளது. அதைச் சீர்செய்துவிட்டு அதிலிருந்து மீண்டு விடுவோம்" என்று பதிலளித்தார்.

அதாவது கரடி கிட்ட மாட்டிக்கிட்டேன். எப்படி வெளியே வர்றதுன்னு தெரியல... சீக்கிரம் வந்துடுவேன்னு கமல் சொன்ன மாதிரி அர்த்தம் வந்தது எனக்கு மட்டும் தானானு தெரியல.

இதுவரை ஃபேஸ்புக் போராளிகளின் ஸ்டேட்டஸ் மாதிரி அவ்வப்பொழுது ஓர் நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு, தெளிவில்லாத ஓர் அறிக்கையை விட்டுக் கொண்டு எதை நோக்கி நகர்கிறோம் என்று கூடப் புரியாமல் அல்லாடி வருகிறார் கமல்.

அவர் மட்டுமா? மொத்த திரை உலகமுமே யாருடைய பிடியில் சிக்கியிருக்கிறோம் என்று தெரியாமல் சிக்கியுள்ளது. ஆரம்பத்தில் திமுக, நடிகர்களை வளைத்து அவர்களின் பிரபலத்தினை பயன்படுத்தி தன் கட்சியின் சித்தாந்தத்தை தமிழ் மக்களிடையே நுழைத்தது.

அதே பாணியில் மெல்ல மெல்ல தமிழகத்தில் பிரிவினைவாத சிந்தனையைப் பரப்பத் திட்டமிட்டு, கிட்டத்தட்ட 20 வருடங்களாக செயல்படுத்தி வருகின்றனர் முகம்காட்டாத சிலர். 2010 வரை இலைமறைக் காய்மறையாக பிரிவினைவாத பிராச்சாரங்களை திரைப்படங்களில் செய்து வந்தனர். 2010க்குப் பிறகு அசாத்திய சுதந்திரம் பெற்று புரட்சி, புதுமை என்ற பெயரில் நிறைய கலாச்சாரச் சீரழிவுகளை ஊக்குவிக்கும் திரைப்படங்கள் வரத் தொடங்கின. 

எங்கிருந்தோ யாரோ மிகப் பெரிய அளவில் தமிழ்த் திரையுலகில் பணத்தைக் கொட்டி வருகின்றனர். முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தனிப் பிரிவாக இருந்து வந்தனர். தயாரிப்பு கம்பெனிகள் / ஸ்டுடியோக்கள் என்று தனியாக இருந்து வந்தன.

ஆனால், இப்படியான பணம் உள்ளே கொட்டத் தொடங்கியதும், நல்லதாக நான்கு படங்கள் டைரக்ட் செய்துவிட்டாலோ, நடித்து விட்டாலோ, அவர்களைக் கூப்பிட்டு, நீங்கள் படம் தயாரிப்பதாக இருந்தால் தயாரியுங்கள். ஃபைனான்ஸ் எல்லாம் நாங்கள் பின்னாடி இருந்து செய்கிறோம் என்று தூது அனுப்புவார்கள். சினிமாத் துறையில் பணமோ புகழோ குறுகிய காலத்தில் ஈட்டி விட வேண்டும் என்பது எழுதப்படாத மந்திரம்.

எனவே  காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள ஒவ்வொரு இளம் டைரக்டர்களும் மற்றும் நடிகர்களும்  அவர்களின் தூண்டுதலால் அதிக லாபம் ஈட்ட போகிறோம் என்ற ஆசையில், துணிந்து கடனை வாங்கி படம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

குறிப்பாக தன் உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பும் பெரிய டைரக்டர்கள், குறைந்த பட்ஜெட்டில் அவர்களை டைரக்ட் செய்ய வைத்து படம் எடுப்பார்கள். இதில் முக்கியமான சூட்சுமம் தங்களின் உதவி இயக்குநர்களை பெரிய தயாரிப்பாளர்கள் கொத்திக் கொண்டு போய்விடாமல் தடுக்க, தானே சிறிய அளவிலான பட்ஜெட் படம் பண்ணி சின்ன டைரக்டர் என்று தள்ளி வைத்துவிடும் உத்தி என்பது தனிக் கதை. 

இப்படியாக, திரைத்துறை "கீதாரி இல்லாத கிடை ஆட்டுக் கூட்டமாக" ஓர் ஒழுங்கற்ற முறையில் ஆளாளுக்கு தயாரிப்பாளராவதும், காசு கொழுத்தக் கூட்டம் ஒன்று, தானே நடித்து, தானே இயக்கி விளையாடுவதுமாக இருந்ததன் விளைவு, திரைத்துறையின் தரம் என்பது அதலபாதாளத்திற்குச் சென்றது. பெரும்பாலான படங்கள் நஷ்டத்தைத் தழுவின. நேற்று முளைத்த காளானிலிருந்து அரை நூற்றாண்டாக விழுது பரப்பியிருந்த கமல்ஹாசன் போன்றவர்கள் வரை கடனில் முழ்கித் தவித்தனர். 

கடனால் மூச்சு முட்டி வேறு கடுமையான முடிவுகளை எடுக்க நினைத்தவர்களுக்கு ஆபத்பாந்தவனாக அவர்கள் கை கொடுத்தார்கள்...யாரென்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் யாவும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close