கேரளாவின் தலைவாசல்.... பாலக்காடு...!

  இளங்கோ   | Last Modified : 10 Apr, 2019 10:51 am
palakkaadu-special-story

கேரளாவில் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களில் மிகவும் புகழ்பெற்றது  பாலக்காடு.  இவை மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டு கணவாயின் அருகே அமைந்துள்ளது.  

கோவையையொட்டி தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள பாலக்காடு, கேரளாவின் தலைவாசல் என்றும் அழைக்கப்படுகிறது. கேரளாவின் அரிசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றி வரும் பாலக்காடு மாவட்டம் கேரளாவின் நெற்களஞ்சியம்  மற்றும் தானியக் களஞ்சியம் என்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறது.  இங்கு பாக்கு மரங்கள் என இயற்கை அழகு பின்னிப் பிணைந்த பச்சைப்பசேல் மாவட்டம் என்றால், அது  கேரளாவின் பாலக்காடு மாவட்டம் தான். இங்கு உயர்ந்து நிற்கும் பனை மரங்களும், அடர்ந்த வெப்ப மண்டல காடுகளும், மலைக் குன்றுகளும் சூழ அமைந்திருக்கும் பேரழகை சுற்றுலா பயணிகளுக்கு உகந்த இடமாக உள்ளது . 

பாலக்காடில் கோட்டைகள், கோவில்கள், அணைகள், வனவிலங்கு சரணாலயங்கள், அருவிகள், பூங்காக்கள் என்று பயணிகளுக்கு எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் காத்துக்கிடக்கின்றன. இவற்றில் பாலக்காடு கோட்டையும், ஜெயின் கோயிலும் வரலாற்றுப் பிரியர்களை அதிகமாக ஈர்க்கும் இடமாக உள்ளது.

கேரளாவின் மற்ற மாவட்டங்களை போல் அல்லாமல் பாலக்காடில் அதிக அளவில் தமிழ் பேசும் மக்கள் வசித்து வருவதால் தனித்துவமான கலாச்சாரத்தினை இந்த நகரம் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் பாலக்காடிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கலவையில் மாறுபட்ட உணவு வகைகளை சுவைத்து செல்கின்றனர். 

மலம்புழா அணை மற்றும் தோட்டத்துடன் கூடிய கேளிக்கை பூங்கா புகழ்பெற்ற பிக்னிக் தலமாக விளங்கி வருகிறது. நெல்லியம்பதி மலைவாசஸ்தலம், சைலன்ட் வேலி தேசிய பூங்கா, பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்டவை, இயற்கை ரசிகர்களுக்கும், காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடங்களாக இருக்கிறது. மேலும், காஞ்சிரப்புழா, தோணி அருவி, ஒட்டப்பாலம், கொல்லேன்கோடு அரண்மனை, தென்குருசி போன்ற இடங்களும் நீங்கள் பாலக்காடு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாக உள்ளது.  இந்த மாவட்டத்தின் பாரம்பரியமும், இயற்கை காட்சிகளும், வண்ணமயமான திருவிழாக்களும் பாலக்காடு மாவட்டத்தை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கின்றன. 

பாலக்காட்டை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்:

அட்டபாடி வனப்பகுதி : இவை அடர்ந்த காடுகள், சலசலத்து ஓடும் ஆறுகள், மலைக்க வைக்கும் மலைக்குன்றுகள் என இயற்கை விரும்பிகளை சொக்க வைக்கும் வனப்பகுதியாகும்.

மன்னார்குடி : பாலக்காடு அருகே மன்னார்காட்டில் ஏராளமான ஆதிவாசி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ள மல்லேஸ்வரன் மலையை சிவலிங்கமாக கருதி இந்த மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இயற்கையுடன் இணைந்திருக்க விரும்புவோரும், ஆதிவாசி மக்களை பார்க்கவும், கலந்துரையாடவும், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது.

கோட்டாயி கிராமம் : பாலக்காடு அருகேயுள்ள கோட்டாயி கிராமம், மிகவும் புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் வாழ்ந்த அழகிய கிராமம் ஆகும்.  

பாலக்காட்டில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் சிறுவாணி அணைக்கட்டும், பாலக்காட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் மலம்புழா அணையும், அணையையொட்டி உள்ள தோட்டமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. பரந்து விரிந்து கிடக்கும் புல்வெளிகள், மனதைக் கொள்ளை கொள்ளும் மலர்பூங்காக்கள், ரோஜா பூங்கா, செயற்கை நீர் அருவிகள் என இயற்கை காட்டும் ஜாலங்கள், மலம்புழா தோட்டத்தில் நம்மை மலைக்க வைக்கின்றன. இவை ஒரு பிக்னிக் தலமாக இருக்கிறது. இவை தவிர ஒற்றப்பாலம், கல்பாத்தி சிவன் கோவில், கொல்லங்கோடு, திப்பு கோட்டை, மீன்கரா அணைக்கட்டு என பாலக்காடு பகுதியில் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன. பாலக்காடு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்க்கவேண்டிய ஒரு இடமாக உள்ளது.

எப்படி செல்வது ?

ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை, தென்னக ரயில்வேயில் பாலக்காடு தனி டிவிஷனாக இருந்து வருவதால் பிற பகுதிகளில் இருந்து பாலக்காட்டுக்கு ரயில்வசதி தாராளமாகவே உள்ளது.

- பாலக்காட்டுக்கு அருகில் சுமார் 100 கி.மீ. தொலைவில் கேரளாவின் கொச்சின் விமான நிலையம் உள்ளது. 
- கோயம்புத்தூர் விமானநிலையம் பாலக்காட்டில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது.
- சுமார் ஒரு மணிநேர கார் பயணத்தின் மூலம் பாலக்காட்டை அடையலாம். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close