அரைமணி நேர அசத்தலில் புத்தாண்டு பலகாரம்….!

  தனலக்ஷ்மி   | Last Modified : 13 Apr, 2019 01:13 pm
how-to-make-ladu-in-30-minutes

சித்திரை முதல் நாள்  புத்தாண்டு தினத்தில்  ஒவ்வொரு மாநிலத்தவரும் விதவிதமான பலகாரங்களை செய்வார்கள். ஆந்திராவில் செய்யப்படும் பைத்தலாடு மிகவும் பிரசித்தம். செய்வதற்கு எளிமையான இந்த லாடு  அதிக இனிப்புகளையும் சத்துக்களையும் கொண்டிருக்கும்.   குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடும் இந்த லாடை எப்படிச் செய்வது பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:

 பைத்தம்பருப்பு- 1 கப், சர்க்கரை - ஒன்றரை  கப், ஏலத்தூள் - 1 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை:

பைத்தம்பருப்பைச் சுத்தம் செய்து வெறும் வாணலியில் வாசனை போக வறுக்கவும்..  பிறகு மிக்ஸியில் மிக நைஸாக பொடித்து எடுக்கவும்.. சர்க்கரை யையும் மிக்ஸியில் பொடிக்கவும். வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு நன்மை தரக் கூடியதல்ல அதனால் நாட்டுச்சர்க்கரை சேர்க்கலாம். வாயகன்ற பாத்திரத்தில்  நைஸாக பொடித்த பைத்தம் மாவையும், சர்க்கரையையும் சேர்த்து ஏலத்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும். நெய்யை இலேசாக சூடுபடுத்தி நெய் விட்டு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். நெய் அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள் சர்க்கரையும் மாவையும் சேர்த்த கலவையை இலேசாக சூடுபடுத்தினால் சர்க்கரை இளகி உருண்டைப் பிடிக்க எளிதாக இருக்கும். 
அரைமணி நேரத்தில் செய்யக்கூடிய அசத்தல் ரெஸிபி  இது.. சுவையும் சத்தும் முற்றிலும் உடலுக்குச் சேரும் என்பதால் அவ்வப்போது செய்து குழந்தைகளை இனிக்க வைக்கலாம்..    

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close