கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 20 (நிறைவு)

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 25 Apr, 2019 02:20 pm
kamalhassan-is-a-hindu-terrorist-part-20-the-end

இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம், சினிமாத் துறையினுள் புகுந்து, இந்த மாநிலத்தில் பிரிவினைவாத சிந்தனைகளை தீவிரமாக விதைத்துக் கொண்டிருக்கும், பிரிவினைவாத சக்திகளைப் பற்றி விளக்குவதே!

சினிமாத் துறையில் பிரிவினைவாதத்தை விதைப்பதற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டினை சிதைப்பதற்கும், என்ன சம்பந்தம் என்று சந்தேகப்படுபவர்களுக்காக ஒரு பத்தி…

தமிழர்களின் மரபணுக்களில், கலை ஓர் தவிர்க்க முடியாத குணம் என்பது ஆதிகாலம் முதலே நிரூபணமான ஒன்று. கூத்தர், விறலி, பாணர், பொருநர் போன்ற கலை சமூகத்தினருக்கு, நம் பண்டைய இலக்கியங்கள் கொடுத்து வந்த முக்கியத்துவமும், அதன் பின் வந்த இலக்கியங்கள் அனைத்தும், சந்தம், பண், ஓசை என கிட்டத்தட்ட இசை வடிவமாகவே அமைந்திருக்கின்றன. 

இது வேறு எந்த மொழிகளையும் விட, நம் மொழியில் அதிக ஆளுமையைக் கொண்டது. சங்க இலக்கியங்கள் மட்டுமன்றி, நம் பக்தி இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களான குறவஞ்சி, பரணி, உழத்திப் பாட்டு, குறத்திப் பாட்டு, சிந்து என்று அனைத்துமே, இசை வடிவமாகவே இருந்து வந்திருக்கின்றன. தமிழர்களின் வாழ்வியலில், கலை என்பதை பிரித்தே பார்க்க முடியாத ஒன்றாக இன்று வரை இருக்கின்றது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக அரசியல் கூட, திரைத் துறையினரின் ஆதிக்கம் மட்டுமே இன்று வரை கோலோச்சுகிறது. அதனை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்ட திராவிடக் கட்சிகள், திரைத்துறையை தங்களது மிக முக்கியமான பிரசாரக் கருவியாக பயன்படுத்துகிறது. 

இன்றைக்கும் தமிழர்கள் தன்னை ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கும் பட்டியலில், முதன்மைப் பெயர்களாக சினிமாத் துறையினரையே வைத்திருக்கிறார்கள். நிச்சியமாக இந்தப் போக்கினை அத்தனை சீக்கிரம் மாற்றி விட முடியாது. அவ்வளவு வலுவான ஒரு துறையில், தங்களது சித்தாந்தத்தைப் புகுத்தி, மக்களிடம் எதிர்மறைச் செய்திகளைக் கொண்டு செல்ல பிரிவினைவாதிகள் திட்டமிட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். ஒவ்வொரு ரசனை மட்டத்திற்கும் தகுந்தவாறு ஒரு சினிமாத்துறையினரை வளைத்துப் போட்டு எதிர்மறை சிந்தனைகளை விதைத்து வருகின்றனர். டீமானிடைசேஷனால், கணக்கில் வராத பணம் புழக்கத்திற்கு வர முடியாததால்  நொடித்துப் போய்க் கொண்டிருக்கும் திரைத்துறையை, கிட்டத்தட்ட முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டனர், பிரிவினைவாதிகள். 

மேட்டுக்குடி மனப்பான்மை கொண்ட மக்களைக் கவர, சரியான ஆள் தேடிக் கொண்டிருக்கும் போது தான், கடனில் தவித்த கமல் சிக்கினார். மேடேத்தியது கரம் என்று நினைத்த கமல்ஹாசனுக்கும், அது வீசப்பட்ட வலை என்று தாமதமாகத் தான் புரிந்திருக்கும். விசயம் கை மீறிப் போய்விட்டது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழ்த் திரையுலகம், இப்பொழுது, சர்வ ரோகமும் பீடித்த நிலையில் இருக்கிறது. திரைத்துறையைக் கூட சிறிது காலத்திற்குப் பிறகு சீர் செய்து கொள்ளலாம். மிக அவசரமான செயல் அல்ல! 

ஆனால், இந்தத் துறையைக் கருவியாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதத்தை விதைக்க முயல்பவர்களை வேரோடு பிடுங்கி  எறிய வேண்டியது, மிக மிக அவசரமான ஒன்று! இதுவெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாத ஒன்றல்ல. அவர்களின் இலக்கு, அம்புகளல்ல; எய்தவன்! குருதிப்புனல் படத்தில் தன் உயிரைக் கொடுத்தாவது நக்சலைட்களின் ஆணிவேரினைக் கண்டறிய எடுக்கப்படும் முயற்சி போல, இங்கே இயங்கிக் கொண்டிருப்பவர்களை விட்டு விட்டு இயக்கிக் கொண்டிருப்பவர்களுக்காகக் காத்திருக்கலாம்.

சற்றே விசயம் தெரிந்தவர்களுக்கு, இந்தத் தொடரில் சொல்லப்பட்ட பல விசயங்கள் நன்கு தெரிந்திருக்கலாம். ஆனால், சினிமா கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட இளைஞர்களிடம், இந்த விழிப்புணர்வினைக் கொண்டு செல்லவேண்டியது நம் கடமை. விசயம் தெரியாத விட்டில் பூச்சிகளாக நம் சந்ததி இந்தப் பிரிவினைவாதிகளிடம் சிக்கிச் சீரழிந்து விடக் கூடாது!

இந்தக் கட்டுரைக்கும், ‛கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவா தீவிரவாதி’ என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியைச் சிலர் கேட்டிருந்தனர். அவர்களுக்காகவும்…

 “சினிமாவில், ஒரு ஹீரோவை மிகவும் பலம் / அறிவு மிகுந்தவராகக் காட்ட வேண்டுமானால், வில்லன் கதாபாத்திரத்தை தான் மிகவும் விலாவாரியாக பயங்கர சக்திமிகுந்த கொடூரனாகக் காட்ட வேண்டும். அப்பொழுது தான் வில்லனை வென்ற கதாநாயகனின் பிம்பம் மக்களிடையே சரியாகச் சென்றடையும். 

அதே போல் தான், இங்கே நம்ம ஹீரோ கமலின் உண்மையான முகத்தை உரித்துக் காட்டி, அப்படி தீவிரமான ஹிந்துத்துவ, தேசியவாத சிந்தனை உள்ள ஆளுமையான கமல்ஹாசனை விளக்க வேண்டியிருந்தது. மேலும் தன்னை ஒரு நாத்திகர் என்றும், சமூகக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவன் என்று ஒரு முகமுடி போட்டுத் திரிந்த கமல்ஹாசன் அவர்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டவும், இந்தக் கட்டுரை ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. 

அத்துடன், வாசகர்களுக்கு இத்தகைய முரணான தலைப்பு, அது என்ன என்று வாசிக்கத் தூண்டும் வகையிலும் அமையவேண்டும் என்பதற்காக, இந்தத் தலைப்பினை கொடுக்க வேண்டியிருந்தது!

நிறைவுக் குறிப்பு : 
அன்பான வாசகர்களுக்கு, இதுவரை இந்தக் கட்டுரையில் எழுதிய எதுவுமே, என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளானவை அல்ல! யார் மீதும் எந்த வன்மத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. 
கட்டுரையின் முதல் பாகத்திலேயே சொன்னது போல, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காமல், தேச நலன் கருதி, பொது விசயங்களை மட்டுமே அலசியிருக்கிறேன். கட்டுரையின் உண்மையான நோக்கம், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்க முயலும் சில சக்திகளை அடையாளம் காட்டுவது மட்டுமே! 

தொடரைத் தொடர்ந்து வாசித்து, அடியேனை தட்டிக் கொடுத்தும், உற்சாகப்படுத்தியும் வந்த வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

வாழ்க பாரதம்! வளர்க இந்தியர்களின் ஒருமைப்பாடு!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close