ஆச்சர்யத்தில் உறையவைக்கும் மியூசியம்., கிராமத்தையே கண்முன் காட்டும் வியப்பு!

  இளங்கோ   | Last Modified : 06 May, 2019 03:57 pm
dakshina-chitra-museum

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் அமைந்திருக்கிறது தக்ஷிண சித்ரா  (அ) தக்ஷிண சித்ரா ஹெரிடேஜ் மியூசியம். தக்ஷிண சித்திரம் என்ற பெயர் வரகாரணம், தக்ஷிணம்  சித்ரம் என்ற இரு வடமொழி வார்த்தைகளின் கூட்டே தக்ஷிண சித்ரா ஆகும்.

தக்ஷிணம் என்றால் தெற்கு என்று பொருள், சித்ரம் என்பதற்கு காட்சி என்பது பொருள், தமிழில் தென்னாட்டு காட்சி என பொருள்படும். தென்னாட்டு மக்களின் கலாச்சாரத்தை விளக்குவதால் இந்த காரணப்பெயர் என கூறப்படுகிறது. இங்கு தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, திராவிடக் கட்டிடக்கலை, பழந்தமிழர் நாகரிகம், தமிழக நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், பிலாக் பிரின்டிங், தென்னிந்தியாவை ஆண்ட மன்னர்கள் வரலாறு ஆகியவை உள்ளன.

நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதை , கிராமத்தின் வாசனையே அறியாத நகர்ப்புற குழந்தைகளுக்கும், வரும் தலைமுறையினருக்கும் சொல்ல வேண்டும் என்று  வடிவமைக்கப்பட்டது தான் தட்சிண சித்ரா மியூசியம் என்கின்றனர். இவை 10 ஏக்கர் பரப்பளவில் தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற 17 நிஜமான வீடுகள் உள்ளே காணப்படுகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், காரைக்குடி பகுதியில் உள்ள செட்டிநாடு வீட்டை அப்படியே தத்ரூபமாக கட்டியுள்ளார்கள். வீட்டிற்குள்ளும் அவர்கள் உபயோகித்த பொருட்களை கண்காட்சியாக வைத்துள்ளார்கள். நெசவாளர் வீடு என்றால் ஓரு நெசவாளர் உட்கார்ந்து நெய்து கொண்டு இருக்கிறார். குயவர் வீடு என்றால் மண்பாண்ட பொருட்கள் செய்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இங்கு அய்யனார் சிலை, கிராமத்து குதிரை சிலை, டெரகோட்டா சிற்பங்கள், தப்பாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம்,ஒயிலாட்டம் உள்ளிட்ட பராம்பரிய நடனங்கள் ஆகியவை தங்களது பெருமையை பறைசாற்றும்படி உள்ளன. சுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு பனை ஒலை பொருட்கள், கண்ணாடியில் சிற்பம் செய்வது, களிமண்ணில் பானைகள் செய்வது எப்படி என்று சொல்வது மட்டுமில்லாமல், விருப்பம் உள்ளவர்களுக்கு சொல்லியும் கொடுக்கிறார்கள்.

இங்கு ஒவிய கண்காட்சி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்படுகிறது. பராம்பரியம் பற்றி சொல்லும் நூலகம் உண்டு. அதே போல தங்களது திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளை வித்தியாசமாக கொண்டாட விரும்புபவர்களுக்கும் இது ஒரு அருமையான இடமாக உள்ளது. வட மாநிலங்களில் உள்ள கிராமிய பொருட்களை அங்குள்ள கலைஞர்களே நேரில் உருவாக்கி காட்டுவதுடன் நியாயமான விலைக்கும் விற்கிறார்கள்.

விருப்பபட்டால் நாட்டுப்புறக் கலைகளை இங்கேயே தங்கியிருந்தும் கற்றுக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஏற்றார் போல் விளையாட்டு திடல், மாட்டுவண்டி சவாரி போன்றவைகளும் உண்டு. வார இறுதி நாட்களில் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதே போல இதர மாநிலத்தின் வீடுகளும் அம்மாநில கலாச்சாரத்தை பிரதிபலித்துக் கொண்டு உள்ளது.

மியூசியத்திற்கு உள்ளே செல்வதற்கு முன் இதன் முழு மேப்பையும் (வரைபடம்) பார்த்துவிட்டு சென்றால் அனைத்து இடங்களையும் ரசித்து பார்க்கலாம். ஒரு சிறிய கிராமத்தையே உள்ளடக்கிய ஓர் இடமாக உள்ளது.

இவற்றையெல்லாம் சென்னையில் காணலாம் என்றால் நம்பமுடியவில்லையா..வாருங்கள், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் தக்ஷிண சித்ரா ஹெரிடேஜ் மியூசியத்துக்கு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்க வேண்டிய ஒரு இடமாகவும் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close