காற்றில் பறக்கிறதா பண்பாடும், நாகரிகமும்? 

  பாரதி பித்தன்   | Last Modified : 08 May, 2019 03:59 pm
special-article-about-culture-of-tamilnadu

கடந்த காலங்களில், தமிழக கிராமங்களில்,  பஸ்சில் இருந்து இறங்கி நடக்கும் போதே, அந்த ஊரே விசாரிக்கும் எங்க போறீங்க தம்பி என்று, மரியாதை பலமாக இருக்கும். அதே சமயத்தில் சந்தேகம் வந்து விட்டால் கட்டிவைத்து உறித்து விடுவார்கள். 

அந்த கிராமத்தில் வி.ஐ.பி.,யின் மகனாக இருந்தால், அவன் சுற்றுவட்டாரத்திலேயே பீடி கூட குடிக்க முடியாது. அவன் வீட்டிற்கு செல்லும் முன்பு தகவல் சென்று சேர்ந்துவிடும். இப்படி சுய பாதுகாப்பு கொண்ட தமிழகம், மேலை நாடுகளைப் போல தனி மனித சுந்திரத்தை போற்றத் தொடங்கியதால், அதனால் ஏற்பட்ட விளைவுகளை கண்கூடாக பார்க்க தொடங்கி உள்ளது. 

பொள்ளாட்சியில் சுமார், 200 பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் பரவியது. அதில் சிக்கிய பெண்கள், அப்பாவிகளாக சித்தரிக்கப்பட்டனர். அந்த சம்பவத்தை பொருத்தளவில் சம்பந்தப்பட்ட பெண்கள் அப்பாவி என்பதை ஒப்புக் கொள்ள முடியும். ஆனால் அந்த வலையில் சிக்குவதற்கு ஒரு நொடி முன்பு வரை, அந்த பெண் செய்த அனைத்துமே, அவரைப் பொருத்தளவில் சரியானது. 

காதலனுடன் தனி இடத்தில் சென்று, தன்னை இழப்பது தப்பில்லை என்ற முடிவுடன் தான், அந்த பெண் அங்கு சென்றுள்ளார். அந்த பெண்ணே எதிரபாராத விதமாக, அங்கு ஒரு கும்பல் அவர் மீது பாய்ந்துவிட்டது.  அந்த பெண்ணை வீட்டில் இருப்பவர்கள் கண்டிக்காததும், தெருவில் இருப்பவர்கள் கண்டு கொள்ளாததும் தான் இப்படி சிக்கி கொள்ள காரணம். 

இந்த பிரச்னையில் சிக்கி, புகார் கொடுக்க கூட முன்வராத பெண்களை எந்த வகையில் சேர்ப்பது. இப்போதும் கூட, இது போன்றவர்கள் சாணத்தில் கால் வைத்துவிட்டால், காலை வெட்டிக் கொள்ளவா முடியும்? என்று கேள்வி எழுப்புகிறாரகள். இந்த பெண்களுக்காக நாம் பொங்குகிறோம். 

ஆனால் வேறு இரண்டு சம்பவங்கள் இதே போன்றது தான்; ஆனால் அதில் யாரும் என்னை ஏமாற்றி கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள் என்று பேட்டி கொடுக்கவில்லை. அது மாதிரியான வீடியோ, சமூக ஊடங்களில் பரவவில்லை. அது, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த வீக் என்ட் பார்ட்டிதான். 

அதிலும், சென்னை சம்பவத்தில் 7 பெண்கள் சிக்கி இருக்கிறார்கள். எவ்விதமான கூச்சமும் இல்லாமல் போலீசார் அணிவகுப்பில் முகத்தை மட்டும் மூடிக் கொண்டு அவர்கள் நடைபோடுகிறார்கள். சரக்கு, கஞ்சா, அபீன் என்று புழங்கும் அந்த இடத்தில், இவர்கள் அதில் எல்லாம் சிக்கி கொள்ளலாமல், தன் ஆண் நண்பருடன் மட்டும் சந்தோஷ்பட்டிருப்பார்கள் என்று நம்ப வேண்டியது நம் விதி.
 
இந்த சம்பவத்தை பார்ப்பதற்கு முன்பு வரை, அந்த பெண்ணின் பெற்றோர், என் பெண்ணை ஆண் பிள்ளை மாதிரி வளர்த்துருக்கேன், அவளுக்கு தெரியாதது எதுவும் இல்லை என்று அகம் மகிழ்ந்து அலைந்து இருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம், ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் வாங்கும் சம்பளம். 

அனைத்து துறைகளிலும் மகன், மகள் வாங்கும் சம்பளத்தை, ஒரு காலகட்டத்தில் அவரின் தந்தை வாங்கி இருப்பார்கள். உதாரணமாக ஒரு பெண் ரூ. 10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாள் என்றால், அவள் தந்தை அல்லது தாய் ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவாவது அந்த சம்பளத்தை வாங்கி இருப்பார். 

அதன் காரணமாக மகன் அல்லது மகள் பெரிய அறிவு ஜீவியாக சிந்திக்கமாட்டார்கள். ஆனால், தகவல் தொழில் நுட்பத்துறையில் ஒரு சிலர் வாங்கும் சம்பளத்தை, அவர் தந்தை அல்லது தாய் நினைத்து கூட பார்க்க முடியாது. தமிழ் பேசும் ஊரில் பிறந்த நம்ம அம்மணி நுனி நாக்கு ஆங்கிலம் அவரை மிகப் பெரிய அறிவாளியாவே காட்டும்.

இதன் விளைவு, அவள் செய்வது எல்லாம் சரியாகவே  வீட்டிற்கும், ஊருக்கும் சரியானதாக இருக்கும். அவரை யாரும் கண்டிக்க துணியமாட்டார்கள். அதன் காரணமாகத்தான் பெண்கள் இது போன்ற பிரச்னைகளில் சிக்கி கொள்கிறார்கள். 
பண்பாடு, கற்பு என்று எல்லாம் காரணம் கூறி பெண்களை அடக்கி வைப்பது, வாரிசு பற்றிய பயம் தான். 

ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும், எந்த பெண்ணிற்கு பிள்ளை பிறந்தாலும், அது சம்பந்தப்பட்ட ஆணுக்கு பிறந்தது என்று எளிதில் அறிய முடியும். ஆனால், பெண் அவ்வாறு இருந்தால், அவளுக்கே கூட இது யாருடைய மகன், மகள் என்று தெரியாமல் போகும். 

இதன் காரணமாகத்தான், திருமணம் வரை பெண்ணிற்கு செக்ஸ் தடை செய்யப்பட்டிருக்கிறது. கூத்தியா தெரு என்று வாழ்ந்த சமுதாயத்தில், பாலியல் சுந்திரம் பற்றி மற்றவர்கள் பாடம் நடத்த வேண்டியது இல்லை. ஆனால், தனி மனித சுந்திரம் என்ற பெயரில், பாலியல் உறவுக்கு தான் வழி வகுக்கப்படுகிறது. 

அதனால், ஆண் பிள்ளைகள் எத்தனை பெண்களுடனும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பதற்கில்லை. கற்பு என்பது, ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதே. இருவரும், தங்கள் பொறுப்புணர்ந்து, பெற்றோர் மற்றும் சமுதாயம் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை உணர்ந்து செயல்பட வேண்டும். 

மனிதன் ஓர் சமூக விலங்கு என்பதை அறிந்து நடந்தால் மட்டுமே, பிறரைப் பற்றி கவலைப்படாமல், சுய விருப்பு, வெறுப்புகளுக்காக மட்டும் வாழும் வாழ்க்கை முடிவுக்கு வரும். தான் எந்த அளவு நேர்மையாகவும், துாய்மையாகவும், உண்மையாகவும் இருக்கிறோம் என்பதை எண்ணி கர்வப்பட வேண்டும். அந்த கர்வம், தங்கள் பெற்றோருக்கு பெருமையை சேர்த்துத் தரும் என்பதை உணர வேண்டும். 

நுனி நாக்கில் ஆங்கிலம், படித்து முடித்தலும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, எண்ணிப் பார்க்க முடியாத அளவு சம்பளம், கார், தனி பிளாட், இவை மட்டுமே கவுரவத்தின் அடையாளம் ஆகாது என்பதை, பெற்றோரும் உணர வேண்டும். 

சமூகத்தில் தனக்குள்ள பொறுப்புகளை மறந்து, போலி கவுரவம், சொந்த விருப்பு, வெறுப்பு. எல்லை கடந்த, கட்டுப்பாடடற்ற காமம். பாேதை பழக்கம் உள்ளிட்டவை அதிகரித்துக் கொண்டே போனால், அதை  தடுப்பதற்காகவாவது பெற்றோர், வீதியில் வசிப்பவர்கள், ஊர் காரர்கள் சாட்டையை கையில் எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, எதிர்கால சமுதாயத்தை ஒழுங்கானதாக உருவாக்க முடியும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close