அலட்சியத்தின் விலை 5 உயிர்களா?

  பாரதி பித்தன்   | Last Modified : 10 May, 2019 11:32 am
madurai-hospital-power-cut-5-dead-special-story

காவல்துறையிலும், மருத்துவத்துறையிலும் சிபாரிசு இருந்தால் சிறப்பான சேவையை பெற முடியும். மருத்துவத்துறையில் அந்த அளவிற்கு தேவையான ஹைடெக் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவர்கள், நவீன மருத்துக் கருவிகள் என்று அரசு மருத்துவமனையில்இல்லாத வசதிகளே இல்லை. 

ஆனால் இவை அனைத்தும் பயன் இல்லாமல் போவதற்கு அதிகாரிகள் அலட்சியம் தான் காரணமாக இருக்கிறது. இதற்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த அவலமே உதாரணம்.

திமுக ஆட்சியில் தமிழகம் இருளகமாக மாறிய போது, ஜெனரேட்டர் உள்ளிட்ட கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அவை நாள்தோறும் பயன்பாட்டில் இருந்ததால் தொடர்ந்து பாராமரிப்பில் இருந்தன. அதன் பின்னர் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்ததால் ஜெனரேட்டரின் தேவை இல்லாத நிலையில் அதனை பராமரிப்பது அனாவசிய செலவு பட்டியலில் சேர்ந்து கொண்டது. 

இதன் காரணமாக கடந்த 7ம் தேதி 2 மணி நேரம் பெய்த கனமழையால் மின்தடை ஏற்பட்டது. அப்போது ஓடிச் சென்று ஜெனரேட்டரை இயக்கும் போது பாராமிரப்பு இல்லாததால் அது பல் இளிக்வே, செயற்கை சுவாசம் கொடுக்க வழியில்லாமல் மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா, ஸ்ரீவில்லிபுத்துரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் ஆகியோர் இறந்தனர். நேற்று காலை மதுரை செல்லத்தாய், பல்லடம் ஆறுமுகம் ஆகியோர் இறந்தனர்.

இவர்கள் இறப்பிற்கு நோயின் தீவிரம் தான் காரணம் என்று மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறியுள்ளார். அது உண்மையா இல்லையா என்பது அந்த அம்மையாருக்கு தான் தெரியும். அவர் மன சுத்தத்துடன் பிரச்னையை ஆய்வு செய்து பராமரிப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதுதான் இது போன்ற உயிர் இழப்புகளை தடுக்க உதவும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close