இவ்வளவு ஏமாளிகளா இஸ்லாமியர்கள்?

  பாரதி பித்தன்   | Last Modified : 13 May, 2019 02:55 pm
special-article-about-gold-loan-fraud

மதங்கள் அது தோன்றிய இடத்திற்கு  ஏற்ப தான் சடங்குகளையம், சம்பிரதாயங்களையும் அறிமுகம் செய்யும். வேறு  நாட்டிற்கு அந்த மதம் பரவும் போது, அதற்கு ஏற்ப மாற்றங்களை மதம் ஏற்க வேண்டும் அல்லது அதனை பின்பற்றுவோர், தங்களுக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் ஏமாளியாகி விடுவார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் தான், சென்னை தி. நகரில் உள்ள ரூபி ஜூவல்லரியில் ஏமாந்த இஸ்லாமியர்கள்.

இஸ்லாத்தில் வட்டி கொடுப்பது, வாங்குவது பாவம். இதை மீறி வட்டி வாங்கும் குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு வெளியூர் வாசிகள் பெண் கொடுக்க மாட்டார்கள். 

ராமநாதபுரத்தில், இஸ்லாமிய வக்கீல் ஒருவர் தனது பணத்தை வங்கியில் முதலீடு செய்வார். அதற்கு வட்டி வாங்கினால் பாவம். இதனால் வங்கி தரும் வட்டியை, தன் குமாஸ்தாவிற்கு கொடுத்துவிடுவார். அவருக்கு அது தானம் என்பதால் பாவம் கிடையாது. இப்படி தமிழகத்தில் இஸ்லாமியர்கள் வட்டி வாங்கும் பாவத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

குறிப்பிட்ட சில வெளி நாடுகளில், மார்க்கத்தின் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய வங்கிகள் வட்டி இல்லாமல் பணம் கொடுக்கின்றன. அந்த வங்கிகள் நஷ்டம் இன்றி இயங்க அந்நாட்டு அரசுகளே குறிப்பிட்ட நிதி வழங்கி உதவி செய்கிறது. இதனால், வங்கி நல்ல முறையில் இயங்க முடிந்தது. அதே நேரத்தில் மார்க்க சட்டத்தையம் கடைபிடிக்க முடிந்தது. அதே போலத்தான் ஒவ்வொரு வாழ்வியல் விதிமுறைக்கும் ஏற்ப இஸ்லாமிய நாடுகளில் ஏற்பாடுகள் இருந்தன.

இங்கோ அது போன்ற ஏற்பாடு எதுவும் இல்லை. அதன் காரணமாக, மார்க்க சட்டங்களை கடைபிடிப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. ஆனாலும், தங்களை வருத்திக் கொண்டு மார்க்க சட்டங்களை கடைபிடிப்படவர்கள் இருக்கிறார்கள். அவர்களை குறிவைத்து, சென்னை ரூபி ஜூல்லரஸ் நிறுவன உரிமையாளர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். 

இவர்களும் இஸ்லாமியர்கள் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இஸ்லாமியர்கள் வட்டிக்கு வாங்கவோ, கொடுக்கவோ மாட்டார்கள். அதனால் நாங்கள் வட்டியில்லாமல் நகைக்கு பணம் தருகிறோம் என்று இஸ்லாமியர்களின் நகைளை பெற்றுக்கொண்டு, பாதி பணம் கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்கள். 

பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வீட்டில் பெண்கள் தான் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம். ஆண்கள் வெளிநாட்டில் இருப்பதால், வேறு வழியில்லை. இதனை உணர்ந்து, ஏழை எளிய மக்களை அவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக  சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசும் கூட ஏதாவது நடவடிக்கை எடுக்க முன்வந்தால், இவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்று கத்தி கூச்சல் போட்டு அதை அடக்கி விட வேண்டியது.

மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றப்பட்டதை தட்டிக் கேட்க வேண்டிய மார்க்க அறிஞர்கள், ஏமாந்தவர்களுக்கு யதார்த்தத்தை விளக்குகிறேன் என்று, மறைமுகமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். சுருங்க கூறினால், மார்க்கத்தை கூறி இஸ்லாமிய சமூதாயத்தினரை நடுத்துத் தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

இது ஒரு உதாரணம் தான். இன்னும் எந்த எந்த விதிகளை கூறி இஸ்லாமியர்களின் அரசியல், வாழ்வியல் சிந்தனைகளில் ஏமாற்றுகிறார்கள் என்பது அல்லாவிற்கே வெளிச்சம். இது போன்ற நயவஞ்சகர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு, மார்க்கத்தை தெளிவான சிந்தனையுடன் கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மார்க்கத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து வைத்திருப்பதுடன், ஏமாற்றுக்காரர்களிடம் ஏமாறாமல் இருப்பது காலத்தின் கட்டாயம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close