கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வ தீவிரவாதி: அன்றே சொன்னது Newstm

  Newstm Desk   | Last Modified : 15 May, 2019 07:58 pm
kamal-is-a-hindu-terrorit-repeat

சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அன்னிய சக்திகளால் இயக்கப்படுவதாகவும், அவரைப் போன்ற திரைத்துறையில் வாய்ப்பிழந்த, கடன் தொல்லையில் சிக்கிய நடிகர்கள் பலரும், இந்த கூட்டத்திடம் அகப்பட்டு, தேச விரோத சக்திகளுக்கு துணை போவதாகவும், பிப்ரவரி மாதம் முதல், தொடர்ந்து, 20 பகுதிகளாக, நம் நிறுவனம் சிறப்பு கட்டுரை வெளியிட்டது. 

கட்டுரையாளர் ஆனந்தன் அமிர்தனின் சிந்தனையில் உதித்த கருத்துக்கள், தற்போது கமல் பேசியிருப்பதுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், அந்த கட்டுரையில் இடம் பெற்ற கருத்துக்கள் எவ்வளவு உண்மையானவை என்பது புலப்படும். கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், கரு.பழனிப்பன் போன்றோர், அன்னிய சக்திகளால் இயக்கப்படுவது குறித்து, உளவுத்துறை விசாரிக்க வேண்டும் எனவும், நம் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என பேசிய கமலின் பேச்சுக்கு, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கமல் போன்றோர், அன்னிய சக்திகளால் இயக்கப்படுவதாகவும், அது குறித்து உளவுத்துறை விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இன்று, கமல் இவ்வாறு பேசிய பிறகே, அவரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் எப்படிப்பட்டவர். அவர் நடித்த, எடுத்த திரைப்படங்களில், ஹிந்துக் கடவுள்களையும், ஹிந்துக்களையும் எவ்வளவு கொச்சைபடுத்தியிருப்பார் என்பது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும், நாம் வெளியிட்ட கட்டுரைகளில் விரிவாக விளக்கப்பட்டிருக்கும்.

வாசகர்களுக்கு நினைவுபடுத்தவும், இதற்கு முன் இதை கவனிக்கத் தவறியோர் படிக்கும் வகையிலும், அந்த தொகுப்புகள் மீண்டும் வெளியிடப்படுகின்றன. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வ தீவிரவாதி பகுதி - 1

 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வ தீவிரவாதி பகுதி - 2

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close