ஊடகங்களை  தோல்வி அடைய செய்த தேர்தல் முடிவுகள்...!

  பாரதி பித்தன்   | Last Modified : 25 May, 2019 12:06 pm
election-results-beat-news-media

அகில இந்திய அளவில் ஊகடங்களி்ன் ஒரே எதிரி யார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு குழந்தை கூட சொல்லிவிடும் மோடி என்று. அதனால் தான் பணமதிப்பு இழப்பு,ஜிஎஸ்டி, நீட் தேர்வு, புல்வாமா தாக்குதல் என்று மத்திய அரசின் எல்லா நடவடிக்கைகளுக்கும் எதிரான கருத்துக்களையே நாடு முழுவதும் பரப்பினர்.

நாடு முழுவதும் ஏடிஎம் மையம் அறிமுகம் செய்த பிறகு மக்கள் கைகளில் அதிகம் ரூ. 500 ஆயிரம் புழங்கியது. ஆனால் இந்த நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் கள்ளப்பணமாக பதுக்கி வைத்திருந்தவர்கள் பலர். இவர்கள் பணத்தை வெறும் காகிதமாக்கும் நடவடிக்கை தான் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை. அப்பாவிகள் பலர் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படார்கள். மருத்துவம், திருமணம் போன்ற பல விஷயங்களில் பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் பலர். ஒரு சிலர் சரியான நேரத்தில் பணம் இல்லாமல் இறந்தவர்கள் கூட இருக்கிறார்கள் ஆனால் இதையெல்லாம் மீறி பல திருடர்களின் பணம் அரசு கஜாவிற்கு வந்தது. வங்கியில் பணியாற்றிய .நேர்மையில்லாத அதிகாரிகள், கூலிக்கு பணம் மாற்றிக் கொடுத்தவர்கள், ஊழியர்களின் வங்கி கணக்கில் பணத்தை போட்டு பின்னர் தங்களுக்கு தேவையானதை எடுத்தவர்கள் என்று பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை தோல்வி அடைய செய்தவர்கள் பலர். அவர்களை வெளிப்படுத்த வேண்டிய ஊடகங்கள் சாதாரண பாதிப்பை திரும்ப திரும்ப சொல்லி மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழக்க செய்தன.

சார் அந்த கடையில 300 ரூபாய், நீங்க ஏன் 320 ரூபாய் சொல்கிறீர்கள் என்றால் நாங்க பில் தரோம் என்று வியாபாரிகள் பில் தருவதையே மதிப்பு கூட்டப்பட்ட நடவடிக்கையாக மாற்றிவிட்ட நாடு இது . பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாங்கும் நகைகளுக்கு கூட பில் கிடையாது. கள்ள வியாபாரமே நல்ல வியாபாரமாக மாறிவிட்ட பி்ன்னால், ஒரு பொருள் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து விற்பனையாகும் இடம் வரை வரி போடும் நடவடிக்கைகளை ஏறகட்டும் நடவடிக்கையாக ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. பிரபல கடையில் ஜிஎஸ்டியால் எந்த வகையில் பாதிப்பு என்று கேட்ட போது சார் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. முன்னே பொருளின் விலை 10 ரூபாய் என்று சொல்லுவோம், இப்போது விலை 8 ரூபாய் மாநில ஜிஎஸ்டி 1,மத்திய ஜிஎஸ்டி 1 என்று பிரித்து காட்டுகிறோம், இதைப் பார்க்கும் மக்கள் 8 ரூபாய் பொருளுக்கு 2 ரூபாய் வரியா என்று ஆத்திரப்படுகிறார்கள் அவ்வளவு தான் விலையில் எதுவும் மாறவில்லை என்றார்.

உண்மை நிலை இப்படி இருக்க ஜிஎஸ்டியால் வர்த்தகமே பாதிக்கப்பட்டு விட்டது என்று பலத்த கூச்சல்  எழுந்தது. இதை வெளிக்கொண்டு வந்து மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது ஊடகங்கள் தான். பில் இல்லாமல் வர்த்தகம் நடத்தியவர்களுக்கு தொழில் நடத்துவதை விட மூடுவது நல்லது என்று நினைத்து மூடினார்கள். இதனால் கனிசமான நபர்கள் வேலை இழந்தனர். ஆனால் தங்கள் முதலாளிகள் செய்த திருட்டை அறிந்தால் கூட அதை வெளியே சொல்ல முடியாமல் அடிமைகளாகத்தான் அவர்கள் இருந்தார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். நேரடியாக களம் இறங்கி திருடுகிறவன் போலீசுக்கு பயந்து தன் தொழிலை விட்டு விட்டால் அவன் பாவம் தொழில் இல்லாமல் கஷ்டப்படுகிறான் என்று யாரும் கவலைப்படுவதில்லை. அதே நேரத்தில் அவனே வரியை ஏமாற்றி சொத்து சேர்த்தால் அவனை திருடன் என்று கூறுவதில்லை.

தேச பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தால் கூட ஐநாவின் வாசல் கதவை தட்டுவது தான் வேலை, இல்லாவிட்டால் அந்த நாட்டு பிதமருக்கு கடிதம் எழுதுவதைத் தவிர வேறு வேலை இல்லை என்று இருந்த அரசுகளை மட்டும் இதுவரை பார்த்தோம். எல்லை தாண்டி அவன் இருக்கும் இடத்திலேயே சென்று தாக்க முடியும் என்பதை கனவில் கூட ஏற்கமுடியாதவர்களாக மாறிவிட்டோம். இந்த சூழ்நிலையில் தான் துல்லிய தாக்குதலுக்கு விடியோ ஆதாரம் இருக்கா?  எதையாவது எடுத்து வந்தீர்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆஸ்தான பேச்சாளர்களை வைத்து விவாதித்து இழிவு படுத்துகிறோம். இது பாரதப்பிரதமரை விட பாகிஸ்தான் பிரதமர் மேல் என்ற அளவிற்கு சென்றது தான் கேவலத்தின் உச்சம்.

இதே போல தான் நீட் தேர்வும், பணம் இருந்தவன் மட்டுமே மருத்துக்கல்லுாரியில் படிக்க முடியும் என்ற நிலை நீட் தேர்வால் முடிவுக்கு வந்தது.

நாட்டின் நன்மைக்கு உதவும் பல விஷயங்கள் தற்காலிக சிரமத்தை கொடுக்கும் போது அவற்றின் உண்மையான பலன்களை விளக்கி மக்களை ஆறுதல் படுத்த வேண்டியவை பத்திரிகைகள், ஊடகங்களின் கடமை. மோடி எதிர்ப்பை மட்டும் தங்கள் இலக்காக கொண்டவர்கள் அதை செய்வதற்கு பதிலாக தற்காலிக சிரமங்களை பெரிது படுத்தி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குகிறார்கள்.

பத்திரிகை, ஊடங்களின் உரிமையாளர்கள், அவற்றில் பணியாற்றுவோரின் அரசியல் நிலைப்பாடுகள் போன்றவை தான் இதற்கு காரணம். ஆனால் இந்த தேர்தலில் மக்கள் ஊடகங்களை எல்லாம் நம்பாமல் வாக்கு அளித்து இருக்கிறார்கள். ஜெயலலிதா சட்டசபையில் பஸ் கட்டண உயர்வுக்கு பின், பால் விலை உயர்வுக்கு பின் தனித்து நின்று வெற்றி பெறுவேன் என்று சவால் விட்டு சாதித்து காட்டியதைப் போலவே தற்போதும் ஊடகங்களின் எதிர்ப்பை மீறி பாஜக இந்த வெற்றியை பெற்றுள்ளது. இதன் காரணத்தை நன்கு உணர்ந்து ஊடங்கள் தங்கள் போக்கினை மாற்றி கொள்ள வேண்டும். மேலும், ஊடகங்களின் உண்மையை அறிந்து மக்கள் அவற்றை புறக்கணித்தால், நாளை அவர்கள் தொழிலை தொடரவே முடியாத நிலை ஏற்படும். இந்த தேர்தல் முடிவுகளில் இருந்து ஊடகங்கள் கற்க வேண்டிய பாடம் இது தான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close