நேசமணி டிரெண்டிங்: கண்டிக்க வேண்டியதை கை தட்டி பாராட்டுவதோ?

  பாரதி பித்தன்   | Last Modified : 01 Jun, 2019 11:50 am
special-article-about-nesamani-twitter-trending

உண்மை புறப்படுவதற்கு முன்பு, வதந்தி உலகை சுற்றி வந்துவிடும் என்பார்கள். கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் நடந்தது அது தான். ஓவர் நைட்டில், காண்ட்ராக்டர் நேசமணி ஒபாமா ஆகிவிட்டார். இல்லாத நேசமணிக்கு தான் எத்தனை மனிதநேயம் மிக்க பதிவுகள். 

சமூகத்தில் நாங்கள் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்துவோம் என்பதன் உச்சபட்ச எடுத்துக்காட்டு தான் இந்த பகிர்வு. நேசமணி யார் என்றே தெரியாமல், இந்த பகிர்வை பகிர்ந்தவர்கள் தான் அதிகம். அதிலும், இந்த கூத்தை பயன்படுத்தி, காவல்துறையும் களம் இறங்கி இருப்பது வேதனையிலும் வேதனை.

நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான நல்ல பதிவுகள் போடப்பட்டுள்ளன. அதில் தேடி கண்டுபிடித்து நேசமணி டிரெண்டிங் ஆவது பற்றிதான் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. கடந்த சில நாட்களாக, தொலைக்காட்சிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில், தொடர்ந்து 4 மாணவ,மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். 

அதே நாளில், பிரதமர் பதவிஏற்பு விழா நடக்கிறது. இந்த 2 சம்பவங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காக, திட்டமிட்ட ரீதியில் டிரெண்டிங் ஆக்கப்பட்டது. இதன் பின்னணியில், பல இலட்சம் ரூபாய் செலவு பிடித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இரண்டு தொலைக்காட்சிகள், இந்த செய்தியை மீண்டும் மீண்டும்  ஒளிபரப்பி தன் கடமையாற்றியது.

இந்த டிரெண்ட்டிங் எவ்விதமான பிரச்னையும் ஏற்படுத்தாமல், வேடிக்கையான தொல்லை ஏற்படுத்தியது. பலர் இதைப்பற்றிக் கவலைப்படாதற்கு இது முக்கிய காரணம். ஆனால், கடந்த மாதம் லோக்சபா தேர்தல் நடத்த போது அரியலுார் மாவட்டத்தில் ஏற்பட்ட ஜாதி மோதல், பொன்னமராவதியில் நடந்த ஜாதி மோதல் ஆகியவற்றிக்கும் இந்த சமூக ஊடகங்கள் தான் காரணம். 

இந்த இரண்டு சம்பவங்களிலும் பலர் சிறையில் உள்ளனர். பல லட்சம் சொத்துக்கள் சேதம் விளைவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எந்த சமூக ஊடகவியாலார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொன்னமராவதி சம்பவத்தில் மட்டும் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுவாக வதந்தி பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அவ்வாறு பரப்புகிறவர்களை கண்டிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தாங்களும், சமூக ஊடகங்களை பார்க்காதவர்கள் கூட அறிந்து கொள்ளும்படி  டிவியில் திருப்பி திருப்பி போட்டு காட்டுவது, எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல தான் இருக்கிறது.

இதன் விளைவை உணர்ந்து கொள்ளும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வார இதழ் ஆசிரியர் ஒருவரின் மனைவி டிரைவருடன் ஓடிப் போய்விட்டதாக தகவல் பரவவிட்டனர்.

கற்பனை உலகில் வாள் சுத்துபவர்கள் புரட்சியாளர்களாக, தமிழ் ஆதரவாளர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். இந்த புகழுக்காத்தான் பலர் சமூக ஊடகங்கள் என்ற விட்டில் பூச்சிகளாக விழுந்து பலியாகின்றனர். அனுமன் வாலில் இட்ட தீயாக சமூக ஊடங்கள் வந்திகளைக் கொண்டு வாள் சுற்றுகிறார்கள். 

இதில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது அப்பாவி தமிழர்கள் தான். இதை அறிந்து கொள்பவர்கள் இது போன்ற நடைமுறைகளை கண்டிக்க முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close