பழமையான போர்க்கருவிகளை ஆவணப்படுத்தி வரும் இளைஞர்...

  அனிதா   | Last Modified : 05 Jun, 2019 07:30 pm
young-man-who-document-oldest-war-tools

நாணயங்கள், தபால் தலைகள் உள்ளிட்டவற்றை  சேகரிப்பவர்களுக்கு மத்தியில் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் போர்க்கருவிகளை சேகரித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயேஷ்குமார். கட்டுமான பொறியாளரான இவர், சிறுவயது  முதல் நாணயங்கள், தபால் தலைகள் சேகரிக்கும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக போர்க்கருவிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விதவிதமான போர்க்கருவிகளை இவர் சேகரித்து வருகிறார். ஈட்டி, கேடையம், குத்து வால், வேட்டை கருவிகள் என 200 ஆண்டு வரலாற்றை இவர் ஆவணப்படுத்தி வருகிறார்.  

குறிப்பாக தமிழர்களின்  பண்டைய அரிய போர்க்கருவிகளை சேகரித்துள்ளார். அதுமட்டும் இன்றி சேகரிக்கப்பட்டுள்ள போர்க்கருவிகளின் பெயர்கள் மற்றும் பயன்பாட்டினை அறிந்து அதனை விளக்கியும் உள்ளார். 

பெற்றோர் மற்றும் மனைவியின் ஆதரவால் இந்த பணியை செய்து வரும் ஜெயேஷ் குமார் இவற்றை கொண்டு அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close