தேர் வடிவில் கோவில்... நம்ம ஊரில்...எங்க இருக்கு தெரியுமா...?

  இளங்கோ   | Last Modified : 07 Jun, 2019 10:01 am
kovil-in-car-shape-special-story

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்களில் ஒன்று திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில். இந்தக் கோவில் அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகர் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்தது ஆகியவை நடந்த தலமாக போற்றப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. 

இக்கோவிலின் தல வரலாற்றில் சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலமாக திருவதிகையை போற்றப்படுகிறது. இத்தலத்தில் அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.  அப்போது தேவர்கள் அசுரர்களின் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி பிரம்மாவை சாரதியாக்கி சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாக்கி புறப்பட்டார்.  

தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து சிவபெருமான் வில், அம்பு என எதையும் பயன்படுத்தாமல் அசுரர்களை பார்த்து சிரித்தார். அசுரர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்களின் உதவி இல்லாமல் ,அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் தலைகுனிந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.  இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது. இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளது குறிப்பிடதக்கது.

இந்த கோவில் அமைப்பு சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும் 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோவிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இறைவன் தேரில் வந்ததால் இந்த திருக்கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்திருக்கோவிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதாக தல புராணங்களில் கூறப்படுகிறது. 

இக்கோவில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கோவிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம் இங்கு உள்ளது. இந்த இறைவனை வழிபடுவோர்க்கு குடும்ப ஐஸ்வர்யம் பெருகும் என்பது மக்கள் நம்பிக்கை.  ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலமாகவும், அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலமாகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோவில் அமைப்பு ஏன் தேர் வடிவில் உள்ளது என்று பார்க்கும் போது, இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் அமைந்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் புத்தமதம் ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்கு உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close