அடுத்த நாட்டுக்கு அடி பணிவதோ?

  பாரதி பித்தன்   | Last Modified : 28 Jun, 2019 04:23 pm
special-article-about-indian-trade-industry-and-politics

சாமான்கள் தொடங்கி, சாமியார்கள் வரை வெளிநாட்டில் கால் பதித்தால் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் பல பல. சாமியார் பிரேமானந்தா, புதுக்கோட்டை மாவட்டம் பாத்திமா( பெயரை கவனியுங்கள்) நகரில் தன் ஆஸ்ரமத்தை உருவாக்கி அதை நடத்தி வந்த நிலையில், அவர் வளர்த்த பெண்ணையே அவர் கற்பழித்து விட்டதாக குற்றசாட்டு எழுந்து, கடைசி வரை ஜாமினில் வெளியே வராமலேயே சிறையில் இறந்தே போனார். 

செக்ஸ் சாமியார் என்று அழைக்கப்படும் ரஜினீஸ் தொடங்கியிருந்த அமெரிக்க கிளை, பல்வேறு சர்சைகளால் மூடப்பட்டது. இதைப்போலவே, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத இந்து சன்யாசிகள் இல்லை. அதே நேரத்தில் ஓரின சேர்க்கை உட்பட பல புகார்களுக்கு ஆளாகி, போப் ஆண்டவரே பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது அவர்கள் எந்த அளவில் இருக்கிறார்கள் என்தைக் காட்டும். இதற்கு முக்கிய காரணங்கள் வெளிநாட்டில் கிளைகள் தொடங்கி கிறிஸ்தவத்திற்கு எதிராக அவர்கள் தொழில் செய்கிறார்கள் என்பதுதான்.

இதே போல தான் இதர தொழில்களும். உலகில் மிதியடி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடித்தது இந்தியா, இங்கு சிறுவர்கள் தயார் செய்யும் மிதியடி, தரை விரிப்புகள் தரம் மிகச்சிறந்ததாக இருந்தது. அவர்கள் முடிச்சு போடுவது வலிமையாகவும், பெரியவர்கள் செய்வதை விட நெகிழ்வு தன்மையுடன் இந்ததால் ஏற்றுமதியில் ஓகோ ஓகோ என்று இருந்தது. 

இதை முறியடிக்க எண்ணிய சர்வதேச போட்டியாளர்கள் சிறுவர்களை வைத்து தொழில் செய்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்து இந்தியாவின் ஏற்றுமதியை சின்னாபின்னம் ஆக்கினார்கள். இதே நிலைதான் சிவகாசி பட்டாசுகளுக்கும், ஏகப்பட்ட நிபந்ததனை விதித்து, இங்கே உற்பத்தியை முடக்கிவிட்டால், பின்னர் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யலாம்.  

இங்குள்ள நீதிமன்றங்கள் கூட இறக்குமதி தொடர்பாகத்தான் உத்தரவுகள் பிறப்பிக்க முடியுமே தவிர்த்து, தயாரிப்பு குறித்து எதுவும் பேச முடியாது. தோல் தொழிற்சாலைகள், கல்பட்டறைகள் போன்றவறை இல்லாமல் போனதற்கு சீனா போன்ற நாடுகள் தான் காரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தயாரிக்கப்படும் அமெரிக்கன் டைமண்ட் என்று அழைக்கப்படும் செயற்கை வைரக்கற்கள், திருச்சியில் ரூ. 2 என்று விற்றால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதே போன்ற கற்கள், வெறும் 20 பைசாவிற்கு அதே திருச்சியில் விற்பனையாகிறது. 

அந்த நாட்டின் தொழிற்சாலை விதிமுறைகளை இங்கே அமல்படுத்துகிறேன் என்றால், நம்ம ஊர் இடதுசாரிகள் கூட அவற்றை ஏற்க மாட்டார்கள். மற்ற விஷயங்களில் சீனாவை காப்பி அடித்துவிட்டு, கடைசியில் இங்கு வரலாம் என்று கூறி ஜகாவாங்கி விடுவார்கள்.

இப்படி ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஏகப்பட்ட போட்டிகள். இது தொடர்பான விவகாரங்ளை டிரம்ப், மோடி ஆகியோர் ஜி 20 நாடுகளின் கூட்டத்தின் இடையே பேசுவது இதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. அதிலும் இந்தியாவில் இருந்து முருக்கு ஏற்றுமதியாகிறது. அமெரிக்காவில் இருந்து பாதாம் பருப்பு இறக்குமதியாகிறது. நம்ம ஊரில் ஆரோக்கியத்தின் அடிப்படையே பாதம்பருப்பு சாப்பிடுவது தான் என்று ஏன் பிரச்சாரம் நடக்கிறது என்று தெரிகிறதா.

இதே நிலைதான் உள்ளூரில் கிடைப்பது எல்லாவற்கும் கொழுப்பு, வயிற்றுக்கு நல்லது அல்ல என்று பிரச்சாரம் செய்து விட்டு அதற்கு மாற்றாக அவர்கள் நாட்டின் தயாரிப்புகளை இங்கே கொண்டு செலுத்துகிறார்கள்.

இதே நிலைதான்  துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விவகாரத்தில் நடந்துள்ளதாக வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் குற்றம்சாட்டி உள்ளது. இந்தியாவின் நீரி நிறுவனம் ஆய்வு நடத்தி இந்த ஆலையால் பாதிப்பு இல்லை என்று அறிக்கை தந்துள்ளது. 

ஆனால் இதை யாரும் நம்பவில்லை. சர்வதேச போட்டியால் இந்த ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், அதற்கு சீனாதான் காரணம் என்றும் தன் தரப்பு வாதத்தில் அது கூறி உள்ளது. இது உண்மையாகக் கூட இருக்கலாம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் முன்னின்றது கிறிஸ்தவ பாதிரியார்கள் தான். 

இவர்களுக்கு உலகம் முழுவதும் தொடர்பு இருக்கிறது. இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அனைவரும் உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டவர்கள் தவிர நேரடியாக கள ஆய்வு செய்தவர்கள் இல்லை என்றே தெரிகிறது. கட்டாயம் பாதிப்புகள் ஏற்படும் என்றால், நம் கல்வி நிலையங்களில் உள்ள பேராசிரியர்கள் கூட கள ஆய்வு நடத்தி அதை விவாதம் செய்ய வெளியிட்டு இருக்கலாம். 

மேலும் நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்று யோசனைகள் கூறியிருக்கலாம். அதை விடுத்து, நிறுவனத்தை மூடு என்று போராட்டம் நடத்துவது இவர்களின் லட்சியத்தை சந்தேகப்பட வைக்கிறது. வேதாந்தா நிறுவனத்தின் குற்றச்சாட்டு உண்மை என்றால், இந்த போராட்டத்தில் களம் இறங்கியவர்கள் அனைவரும் எட்டப்பர்கள் தான். கடந்த காலங்களி்ல் நேரடியான போரில் எட்டப்பன் போன்ற மன்னர்கள் கட்டபொம்மன் போன்றவர்களை காட்டி கொடுத்தார்கள். 

ஆனால் இப்போது நேரடி போரில் யாரும் ஈடுபடுவதில்லை. வெறும் தொழில்நுட்ப போர்தான் உலக அளவில் நடக்கிறது. இதில் மக்களை துாண்டிவிட்டு நிறுவனத்தை மூட வைப்பவர்கள் தான் எட்டப்பன்கள். இவர்களை கண்டறிந்து களை எடுத்தால் தான் சர்வதேச அளவில் இந்தியா சொந்த காலில் நிற்க முடியும். 

ஒரு காலகட்டத்தில் ஜிப்புகள் கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருந்தோம் என்பதை நினைத்து பார்த்தால், இன்று நாட்டின் தொழிற்நுட்பத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளோம் என்பது தெரியும். அதை ஒழித்துக் கட்ட அடுத்த நாட்டிற்கு அடிமைப்பட்டு உதவுகிறவர்களை கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டியது அனைவரின் கடமை. 

அதே போல நாட்டிற்கு தீமை செய்யும் நிறுவனங்கள் என்றால் தங்களுக்கு கிடைக்கும் லஞ்சத்தொகைக்காக அது போன்ற நிறுவனங்களை தொடங்க, நம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அனுமதிக்க கூடாது. எந்த வித முடிவாக இருந்தாலும் அது நம்முடைய முடிவாக இருக்க வேண்டியது தான் இன்றைய தேவை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close