யானைக்கு அரம், குதிரைக்கு குரம்!

  பாரதி பித்தன்   | Last Modified : 01 Jul, 2019 03:16 pm
special-article-about-dmk-congress-alliance

லோக்சபா தேர்தலுக்கு முன்பே இணைந்து வாழ்ந்த திமுக, காங்கிரஸ், பின்னர் கூட்டணியாக திருமணம் செய்து கொண்டு, தற்போது தேன் நிலவு முடிந்துள்ளது. அப்புறம் அடி தடிதான். திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றாலும், மத்தியில் தனக்கு தேவையான விஷயங்களை முடிக்க, தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் உதவி கட்டாயம் தேவை. தமிழகத்திலும், அதிமுகவை ஆட்டுவிக்க வேண்டுமானாலும் ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பது போல காங்கிரஸ் தயவு தேவை.

இதை நன்கு புரிந்து கொண்ட காங்கிரஸ் பிரமுகர்கள், கோஷ்டி பூசலில் தாங்கள் தனியே தெரிய வேண்டும் என்று தோள் தட்ட தொடங்கி உள்ளனர்.

அதற்கு பதிலடியாக திமுகவினரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். திமுகவின் அடிமட்டத் தொண்டர் உதயநிதி, ஸ்டாலினை வைத்துக் கொண்டே, நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும். உள்ளாட்சி, சட்டசபைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கைவிடுகிறார். அதற்கு ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லை.

அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சியில் நடந்த போராட்டத்தில் அதே கருத்தை முன்வைக்கிறார். தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். அது முடியாத பட்சத்தில் திருச்சியில் மட்டுமாவது திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். ஆனால் இது கழக கருத்தோ, கலக கருத்தோ அல்ல, கூட்டணி கட்சிக்கு இடம் கொடுத்து விட்டு ரோட்டில் திமுக காரன் குச்சி ஐஸ் தின்னுவானா என சைகையுடன் அனல் கக்கினார். 

அவர் காட்டிய சைகையை விஜயகாந்த் காட்டியிருந்தால், ஊடகங்கள் மீண்டும் மீண்டும் திருப்பி காட்டி, அவரை ஆபாசமாக பேசியதாக தமிழர்கள் மனதில் கட்டாயம் பதிய வைத்திருக்கும். ஆனால் பேசியது நேரு என்பதால் ஊடகங்கள் அதனை கண்டு கொள்ளலாமல் விட்டுவிட்டன.

இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சிதம்பரம் கோஷ்டியை சேர்ந்த கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் கட்சியில் தனித்து போட்டியிட வேண்டும் என்று கருத்து கூறனார். ஈரோடு தொகுதியை பெறவிடாமல் சதி செய்தது யார் என்று ஈவிகேஎஸ் இளங்கோவனும் கேள்வி எழுபினார். இவ்வாறு பலர் ஆங்காங்கே கேள்விகள் எழுப்பி வந்தனர். 

இந்நிலையில் உதயநிதியை கண்டிக்க வேண்டும், நேருவை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்காத காங்கிரஸ், கராத்தே தியாகராஜனை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கு திமுகவின் வலியுறுத்தல் தான் காரணம் என்று தகவல் பரவி இருக்கிறது. திமுக வலியுறுத்துவது, அதே கட்சியில் இதே போல பேசுகிறவர்களை கண்டித்து விட்டு செய்தால் நியாயமாக இருக்கும்.

அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. அதே நேரத்தில் தியாகராஜன் பேசியதற்காகத்தான் கட்சியில்இருந்து நீக்கப்பட்டாரா? அல்லது கார்த்திக் சிதம்பரத்திற்கு சிவகங்கையில் இடம் வாங்குவதில் காங்கிரஸ் தேசிய தலைமையை எதிர்த்து வற்புறுத்தி சாதித்த சிதம்பரத்தின் மீது உள்ள கோபாத்தின் வெளிப்பாடா என்பது அக்கட்சியினருக்கு மட்டுமே வெளிச்சம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close