விதைக்கிற காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்!

  பாரதி பித்தன்   | Last Modified : 06 Jul, 2019 01:58 pm
special-article-about-public-sector-units

‛மைக்கேல் மதனகாமராஜன்’ திரைப்படத்தில், திருபுரசுந்திரியின் பாட்டி பல் செட்டை கூட திருடிவிடுவார் என்று காமேஷ்வரனிடம் கூறுவது போல, சுதந்திரம் வாங்கிய காலத்தில், இந்தியாவிற்கு குண்டு ஊசி கூட இறக்குமதி செய்யப்பட்டது. இன்று தங்கம் கடத்தல் செய்தி வருவது போல, அந்த காலத்தில் ஜிப் கடத்தல் பற்றிய கடத்தல் செய்திகள் அடிக்கடி வரும். 

இந்த அளவிற்கு தான், நம் தொழில்துறை இருந்தது. செட்டிநாடு அரசர் உட்பட தமிழகதில் பல பகுதிகளில் இருந்த பணக்கார்கள் வீடுகளுக்கு தேடிச் சென்ற முன்னாள் முதல்வர் காமராஜர்,  அவர்களை தொழிற்சாலைகள் தொடங்க வற்புறுத்தினார். இதனால், இந்தியாவில் தொழில்துறை விதைத்து வெளியே வர தொடங்கியது.

இன்னொறுபுறம் அரசே சில தொழில்களை தொடங்கியது. அது பொதுத்துறை நிறுவனங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்தியாவில், பல துறைகளை சேர்ந்த 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பாக செயல்படுகின்றவை நவரத்தினா நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்ற. அதில் 3 பிரிவுகள் உள்ளன.

அரசு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்பதால், பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு சலுகைகள் அள்ளி வழங்கப்படுகின்றன. இதை மறுப்பவர்கள் அதே தொழிலில் இருக்கும் தனியார் நிறுவன தொழிலாளர்களை ஒப்பிட்டால், யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் அவற்றில் பணியாற்றுவர்கள் அது அடிப்படை ஊழியன் முதல் அதன் நிர்வாக இயக்குனர் வரை மற்றவர்களுக்கு வேலை செய்யாமல், திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எப்படி தொழில் நடத்துவது என்று கற்றுக் கொடுப்பதாக உள்ளது.

உதாரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இது தபால் துறையுடன் இணைந்து இருந்த காலத்தில், டிரங்கால் புக் செய்து தான் பேச வேண்டும். அதற்கு முன் பணம் வேறு தர வேண்டும். போட்டி நிறுவனங்கள் இல்லாத காரணத்தால், விதியே என்று அவர்களிடம் தான் நிற்க வேண்டும். 

இந்த சூழ்நிலையை முறையாக பயன்படுத்தி வளர்ந்து இருந்தால், இந்தியாவின் நெ.1 நிறுவனமாக இருந்திருக்கம். ஆனால் இன்று நஷ்டத்தில் இயங்குகிறது. அவர்கள், இதற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். தொழிலாளர்கள், அதிகாரிகளையும், அவர்கள் அமைச்சர்களையும், அவர்கள் அரசையே கூட குறை கூறலாம். ஆனால், முடிவு நஷ்டம் தானே.  

தமிழகத்தில் செல்போன் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் ஏர் செல், பிபிஎல் ஆகிய 2 நிறுவனங்கள் தான். தமிழனிடம் மாதம் 10 செல்போன் விற்று விட்டால் அவன் மிகச் சிறந்த விற்பனையாளனாக போற்றப்பட்ட காலம். இந்த நிறுவனங்கள் முதலீடு அதிகம் செய்து, வருமானம் குறைவாக பார்ததன. 

இதனால் பிபிஎல் பல்வேறு கைகள் மாறி மாறி புதுப்புது வடிவங்கள் எடுத்தது. ஏர் செல் இழுத்து மூடப்பட்டது. ஆனால் நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை, அப்படி இழுத்து மூடிவிட முடியாது. காரணம் இவர்கள் தேசத்தை காப்பாற்ற வந்தவர்கள். இந்த நிறுவனத்தை நம்பி லட்சக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள். மற்ற தொலைத் தொடர்பு துறை நிறுவனங்களை நம்பி கால்நடைகள் தான் உள்ளன. நஷ்டப்பட்டாலும் எவனோ ஒருவன் பணம் தான் நஷ்மாகப் போகிறது. அதைப் பற்றியாரும் கவலைப்பட போவதில்லை.

பொதுத்துறை நிறுவனத்திற்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தான் முதலீடு செய்ய வேண்டும் என்றால், தற்போதைய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இணையாக, அந்த துறையும் கை மாறிவிடும். தொழிலாளர்களுக்காக உண்மையிலேயே ரத்தக்கண்ணீர் வடிக்கும் இடதுசாரி கட்சிகள், பொதுத்துறை நிறுவனங்களை எடுத்து நடத்த வேண்டும் என்றால், இடதுசாரி சிந்தனையே இல்லாமல் போய்விடும். அரசு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்து, அதில் இந்த நிறுனங்கள் மஞ்சள் குளிக்கும். அதை வேடிக்கை பார்க்க வேண்டியது இந்தியர்களின் தலையெழுத்து. 

இப்படியே தொடர்ந்து கொண்டே செல்லும் போது, ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை கை கழுவ வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அந்த சூழ்நிலையில் மத்திய அரசு அந்த முடிவு எடுக்கும்.

அதுவரை சும்மா இருந்த எதிர்கட்சிகள், இடதுசாரிகள், சமுக ஆர்வலர் பொங்கி எழுந்து போராட்டம் நடத்துவார்கள். வீணாகப் போவது நம் வரிப்பணம் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. இதனால் தான், பொதுத்துறை நிறுவனங்களை நவீனமயமாக்க, அவற்றை கம்பெனிமயமாக்கும் போது, எதிர்ப்பு கிளம்புகிறது. 

இந்த முயற்சிக்கு பிறகு, அடுத்தது தனியார் மயம் தான் என்ற சூழ்நிலை உருவாகும். இவ்வாறு நடைபெறக் கூடாது என்று இப்போதே பலர் மல்லுக்கட்டுகிறார்கள். அவர்கள், அரசுக்கு ஆலோசனை செய்வதைக் காட்டிலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கவனிக்கும் நிர்வாக இயக்குனர் போன்றவர்களை அழைத்துப் பேசி, நிறுவனத்தை வெற்றி கரமாக நடத்த அறிவுருத்தவோ, ஆலோசனை கூறவோ செய்யலாம். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்கள் பற்றி வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். அப்போதுதான் என்னதான் நடக்குது இங்கே என்று தெரியும். அந்த முடிவை எடுக்க அனைவரும் ஒன்றிய வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close