இறுக்கம் குறையும் இடஒதுக்கீடு!

  பாரதி பித்தன்   | Last Modified : 09 Jul, 2019 02:49 pm
special-article-about-reservation-policy-in-tamilnadu

ஏழைகள் ஏழைகளாக இருக்கும் போது தான் சமுதாயம் அமைதியாக இருக்கும். அவர்கள் ஏழ்மையை உணர்ந்து போராடத் தொடங்கினால், தேவைற்ற சரச்சரவுகள் தான் ஏற்படும். இதனால் தான், ஆன்மீகம், கர்மா என்ற கொள்கையை வைத்துள்ளது. என் அருகில் உள்ள படுக்கையில் பிறந்தவன் வசதியாக வாழும் நிலையில், நான் ஏன் இன்னும் ஏழையாகவே இருக்கிறேன் என்று எவரேனும் கேள்வி எழுப்பினால், அவருக்கு ஆன்மீகம் சொல்லும் பதில், அது நீ செய்த கர்மா. 

இதே நிலையை தான் சமுக நலத்திட்டங்கள் என்ற பெயரில் அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இலவச அரிசி தொடங்கி, இலவச அமரர் ஊர்தி வரை அனைத்து திட்டங்களும், ஏழைகள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்பதற்காத்தான். இதில், சுமார் 25 சதவீதம் முறையற்ற பயனாளிகள் இந்த திட்டத்தை அனுபவித்தாலும், மற்றவர்கள் ஏழைகள் தானே. 

அவர்களுக்கு தேவையானவை கிடைக்கும் போது, புரட்சிக்கு பூட்டுப் போடப்படும். 25 சதவீதம் தகுதியற்ற பயனாளிகள் தான் நாட்டில் எவ்வளவு கேவலமான மனிதர்கள் வாழ்க்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும். ஆட்டோவில் வந்து இறங்கி, விலையில்லா அரிசி உட்பட ரேஷன் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். காரில் வந்து அரசு கொடுக்கும் ஆயிரம் அல்லது 2 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு செல்கிறார்கள்.

இதைப் போன்றவர்கள், ஒவ்வொரு ஜாதியிலும் இருப்பதால் தான் இடஒதுக்கீட்டின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. நாடு முழுவதும், எஸ்சி - எஸ்டி மற்றும் ஓபிசி என்ற 2 பிரிவுகளில் இட ஒதுக்கீடு இருக்கிறது. 50 சதவீதம் மட்டும் தான் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

தமிழகத்தில் எஸ்சி - எஸ்டி, பிசி, எம்பிசி, என்று 3 பிரிவுளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டிய இடஒதுக்கீடு, ஓட்டு மற்றும் அரசியல் மற்றும் தேவைகளுக்காக நீட்டிக்கப்பட்டு கொண்டே செல்கிறது. பட்டியல் இனத்தவர்களில் அருந்ததியர், பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பலன் பெற வில்லை என்று திமுக ஆட்சியில் அவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

இதனால் சிரமப்படுகிறவர்கள் முற்பட்ட வகுப்பில் பிறந்தவர்கள் தான். அவன் சிலையை கடத்தி விற்க கூட முடியாத கோயிலில், மணி அடித்தாலும் முற்பட்ட வகுப்பு காரன் தான். அவனுக்கு அரசு ஒதுக்கீடு கிடையாது. அதே போல, சைவ வெள்ளார், கோமுட்டி, முதலியார், ரெட்டியார், நாடுயு, பலிஜா நாயுடு உட்பட பல ஜாதிகளுக்கும் அதே நிலைதான்.

தமிழகத்திற்கு என்று ஒரு வியாதி உண்டு. எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், நான் ஏழைகளின்  பங்காளன் என்று தான் கூற முடியும். அதே போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாகத்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். 

என்னிடம் இவ்வளவு வசதி இருக்கிறது என்று பேசினாலோ, முற்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக பேசினாலோ அவர்கள் சமூக விரோதிகளாக அடையாளம் காணப்படுவார்கள். அவ்வாறு இல்லாமலாவிட்டால், ஜெயலலிதா கூட சமூக நீதி காத்த வீராங்கனையாக வளம் வர முடியும். கமல் கூட சமத்துவ சமதர்ம போராளியாக அடையாளம் காண முடியும்.

இந்த சூழ்நிலையில் தான், வரலாற்று சிறப்பு மிக்க பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றாலும் தமிழகத்தில் அறிமுகம் செய்வது மிகவும் கடினம். எங்கே தங்களை சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்று கூறிவிடுவார்களோ என்ற பயத்தில் அனைத்து கட்சிகளும் தாண்டி குதிக்கும்.

இதை நன்கு உணர்ந்த மத்திய அரசு மருத்துவத்துவபடிப்பில், 10 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்தது. இதை ஏற்றால், 25 சதவீதம் இடத்தை அதிகமாக பெறலாம் என்ற சலுகை வேறு. இந்த சலுகை மட்டுமே, தமிழகத்தில் நன்றாக வேலை செய்துள்ளது. 

தகுதியே இல்லாவிட்டாலும், சலுகை அனுபவிப்பவர்கள் தானே இவர்கள். மத்தியில் 1,000 இடம் நன்கு வேலை செய்தது. அதிலும், 5 ஆண்டுகள் எவ்விதான அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியதில்லை என்பது உட்பட பல தளர்ச்சிகள், நன்கு வேலை செய்தன. 

தமிழகத்தில் ஆளும்  அதிமுக மட்டும் இதை ஆதரித்தால் தங்கள் பேரில் எதிர்மறை விமர்சனம் விழும் என்று நினைத்து, அனைத்து கட்சிகளும் இணைந்து தற்போது முடிவு எடுத்துள்ளனர். விரைவில் இதற்கு நல்ல முடிவு எடுக்கப்படும். பின்னர் அதே சலுகையை கோரி, தனியார் மருத்துவக்கல்லுாரிகளும், தங்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை கோருவார்கள். 

அதற்கு மத்திய அரசு அனுமதிக்கும். இன்னும் பத்து ஆண்டுகளில் மருத்துவ துறையில் இருந்து மற்ற துறைகளுக்கும் பரவும். அப்போது இட ஒதுக்கீடு என்பது தேவையில்லாமல் போகும். அப்போது சமூகம் முழுவதுக்கும் சமூக நீதி கிடைக்கும் என்பது கட்டாயம்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close