மனிதர்கள் என்ன நாய்களா?

  பாரதி பித்தன்   | Last Modified : 12 Jul, 2019 07:10 pm
special-article-about-piyush-manush-and-mugilan

பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ளத்தான் செய்யும் என்பது நம்மவர்கள் சொன்ன  உண்மை. அதற்கு  விஸ்வாமித்திரர் தொடங்கி, வீதி ஓரத்தில் உள்ள வீணானவர் வரை விதிவிலக்கு கிடையாது. கடந்த ஆண்டு பிரபலங்கள் என்னோடு நெருங்கி உடலுறவு கொண்டார்கள் என்று கொளுத்திப் போட , வைரமுத்து, ராதாரவி என்று பலரின் பெயர்கள் சந்தி சிரித்தது. அதன் பின்னர் எதுவும் நடக்காமல், சுபமாக முடிவு பெற்றது. முகிலன் உபயத்தால் அதன் 2ம் பாகம் தொடங்கி இருக்கிறது.

சமூக செயற்பாட்டாளர் முகிலன், 22 ஆண்டுகளாக களத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மனைவி  பூங்கொடி... சமூக செயற்பாட்டாளரான முகிலனின் போராட்டப் பாதையில், குளித்தலையை சேர்ந்த இசை என்கிற ராஜேஸ்வரி, அவர் போராட்டகளத்தில்  ஸ்ரெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு நாகர்கோயிலில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, அவருக்கு உதவிகளை  செய்கிறார். நெருக்கம் அதிகரிக்கிறது. முகிலன்  இசை ராஜேஸ்வரியை மகள், மகள் என்று அழைத்து மனைவி ஆக்கி கொள்கிறார். 

தமிழ் பண்பாடு காக்க வந்த போராளியான ராஜேஸ்வரி, தமிழக கலாச்சாரப்படி அவரை திருமணம் செய்து கொள்ள கேட்கிறார். இதற்காக அவர் கெளசல்யா, சக்தி திருணத்தை வலுவூட்ட நடந்த பஞ்சாயத்தைப் போலவே, ஒரு பஞ்சாயத்தை கூட்டுகிறார்.  அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கும் போது, ஸ்ரெட்லைட் துப்பாக்கி சூடு பற்றிய நிருபர்கள் சந்திப்பு சென்னையில் நடக்கிறது. 

அதில் முகிலன் ஒரு வார்த்தை கூட கூறாமல், அதைத் தொடர்ந்து மாயமாகிறார்.  முகிலன் மயமானதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் உள்ளன. ஒன்று அவர் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராடியது. இரண்டாவது இசை என்கிற ராஜேஸ்வரியுடன் நெருக்கம் காட்டியது. முதல் காரணங்களுக்காக தமிழக காவல்துறை பாய்ந்து புடுங்குமா என்றால் இவரை போல ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்தில் வெவ்வேறு பெயர்களில் உலா வந்து கொண்டு இருக்கிறார்கள். 

அவர்களை எல்லாம் தமிழக அரசு பேசாமல் வேடிக்கை தானே பார்த்துக் கொண்டு இருக்கிறது. அடுத்தது இந்த போராளிகள் யாரும் ஓட்டுக்களை பிரிக்கும் வேலையை செய்யப்போவது இல்லை.அப்படியே அதிமுகவிற்கு எதிராக திசை திருப்பினாலும், அது திமுகவிற்கு சாதகமாகத்தான் முடியும். திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் எப்படியேனும் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி விடும் என்பது தான் யதார்த்தம். 

உதாரணமாக பா.ஜ.க., 6 ஆண்டுகள் ஆட்சி செய்த போது அயோத்தி ராமர் கோயில் பற்றிய குரல் எழவே இல்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் தான் சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்ய அனுமதித்தது, நரசிம்மராவ் தான் ராமர்கோயிலை கரசேவகர்கள் இடிப்படை வேடிக்கை பார்த்தது. அதற்கு இணையாத்தான் திமுக ஆட்சியில் நடக்கும். அதிமுக, முகிலன் போன்றவர்களை பேச விட்டு வேடிக்கை பார்ப்பதை போல அல்லாமல், திமுக ஆட்சியில் இவர்கள் பேசவே மாட்டார்கள். அதன் பின்னால் இருக்கும் மாயம் என்னவென்றே தெரியவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது அவரை காண நாள்தோறும் போயஸ்கார்டன் வாசலில் மக்கள் காத்திருப்பார்கள்(தொண்டர்கள், அமைச்சர்கள் வாடிக்கை) அவர்களில் சிலர் அவர் கவனத்தை திசை திருப்ப தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள். உடனே ஜெயலலிதா அது தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுப்பார். 

இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்த போது, நண்பர் ஒருவர் ஜெயலலிதா முன்னிலையில் இந்த சம்பவங்கள் நடக்கிறதே, கருணாநிதி கவனத்தை திருப்ப ஏன் யாரும் தற்கொலை செய்வது இல்லை என கேட்டார். அதற்கு திமுகவை பற்றி நன்கு அறிந்த நபர் ஒருவர், இப்படி ஒரு சம்பவம் நடந்தால் ஜெயலலிதா பதறிக் கொண்டு ஏதாவது நடவடிக்கை எடுப்பார். கருணாநிதியே சரி சாகட்டும் என்று விட்டு விடுவார்,  பிரச்னையும், தீராது, உயிரும் போய்விடும் அதனால் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டார்கள் என்றார். 

அதற்கு இணையாகத்தான் நமது போராளிகள் நடவடிக்கையும் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க ஸ்டாலின் கையெழுத்து போட்ட போது, துாத்துக்குடி திமுக மாவட்ட செயலாளர் அந்த நிறுனவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் லாரிகள் அனுப்பிய போது போராட்டம் நடத்தியது, பாஜவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தான். அவருக்கும், அவரின் கைத்தடிகள் என்று கூறும் எண்ணிக்கையில் தான் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை இருந்தது. ஆனால், திமுக ஆட்சியை விட்டு வெளியேறியதும், ஸ்டெர்லைட் பிசாசு திட்டமிட்ட ரீதியில் கிளம்புகிறது. இந்த சூழ்நிலையில் தன் பெயரை கெடுத்துக் கொள்ள நினைக்காத அதிமுக கையை பிசைந்து கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை.

இது ஒருபுறம் இருந்தாலும் மாயமான முகிலன் மொழி தெரியாத ஆந்திர போலீசாருக்கு பயந்து மன்னார்குடி ரயிலை மறித்து போராடி தன்னை வெளிப்படுத்திக் கொண்டபின்னர், சமூக ஊடங்களில் மிக அதிகமான விவாதப் பொருளாகி இருகிறார். அதிலும், போலீசார் நிலுவையில் உள்ள பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் விவாதத்தின் மையமே அதுவாகத்தான் மாறிவிட்டது.

முகிலனை இழிவுபடுத்த தமிழக அரசு அவரை கற்பழிப்பு வழக்கில் கைது செய்துவிட்டது, அவர்கள் உல்லாசமாகத்தான் இருந்தார்கள், அப்புறம் எப்படி அது கற்பழிப்பாக, பாலியல் வல்லுறவாக இன்ன பிற சமாச்சாரங்களாகும். முகிலன் திருமணம் ஆனவர், அவருக்கு திருமண வயதில் ஒரு மகன் இருப்பது இவருக்கு தெரியாதா? 

பின்னர் எப்படி நெருக்கம் காட்டினார் என்றெல்லாம் அந்த பெண்ணை நோக்கியே அம்புகள் வீசப்படுகின்றன. இவர்களில் ஒருவர் கூட முகிலனுக்கு மனைவி இருப்பதும், மகன் இருப்பதும் தெரியாதா, அப்படி இருக்கும் போது ராஜேஸ்வரியுடன் ஏன் நெருக்கம் காட்டினார் என்று கேள்வி எழுப்பவில்லை.

இந்த விவாதத்தின் ஊடாக, மீ டூ என்பது போல தாழ்த்தப்பட்ட பெண், உச்சநீதிமன்ற வக்கீல், பல தடைகளைத்தாண்டி தற்போதுள்ள இடத்தை அடைந்த கிருபா முனுசாமி தான் படித்துக் கொண்டு மூங்கில் வியாபாரம் செய்த படி இயற்கையை பாதுகாக்க போராடும் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் அலுவலகத்தில் வேலை செய்த போது, தன்னை பாலியல் உறவுக்கு அழைத்தார் என்று குண்டு வீசினார். 

இதை பியூஸ் மனுஷ் தன் பேட்டியின் போது குறிப்பிட்டார். ஆந்தைதான் இறக்கும் வரை ஒரே இணையோடு இருக்கும். மனிதர்கள் நாய்களைப் போன்றவர்கள் என்று நெறிப்படுத்துகிறார். 

முகிலன்,பியூஸ் மனுஷ், உடுமலை சங்கர் விவகாரத்தில் சிக்கிய கவுசல்யாவின் கணவர் சக்தி. சமூக செயற்பாட்டாளர் தியாகு ஆகியோர் சமுதாயத்திற்கு கூறுவது ஒன்றுதான். சமுதாயத்திற்கு போராட்டம் நடத்த களம் இறங்கும் போது பல இடங்களில் உணவு உண்பதைப் போலவே, யாருடன் வேண்டுமானாலும் அனுமதி பெற்று உறவு கொள்ளலாம். மனிதர்கள் நாய்களுக்கு இணையானவர்கள். குறிப்பிட்ட காலத்தில் ஜாதி வேறுபாடு பார்க்காமல் நாய்கள் இணைந்து கொள்வது போல எல்லா காலத்திலும் இணையலாம் என்பது தான் அவர்கள் கூறுவது. இதை அவர்களின் கொள்கையை வியந்து பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்களை தலைவர்களாக நினைப்பது தான் பாவம், தமிழகத்திலேயே சமுதாயத்திற்காக திருமணம் செய்து கொள்ளாமல், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, பொதுவாழ்க்கை இரண்டையுமே நேர்மையாக வாழ்ந்தவர்கள் உள்ளனர். அவர்களை பின் தொடர்ந்தால் தான், மனிதர்கள் மனிதர்களாக வாழ்வார்கள். 

பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற சமுக தளங்களில் போராட்டம் நடத்தும் இந்த போராளிகளோ, தனிப்பட்ட வாழ்க்கை, பொதுவாழ்க்கை இரண்டையும் பிரித்து பார்க்கிறார்கள். இவர்களின் பொதுவாழ்க்கை மக்களை ஏமாற்றுவதாகவும், தனிப்பட்ட வாழ்க்கை வாழவே தகுதியற்றதாவும் இருக்கிறது. 

இதை அறியாமல் கடந்த காலத்தில் தியேட்டர்களில் முதல்வர்களை தேடிய சமுதாயம், இன்று சமூக ஊடகங்களில் தலைவர்களை தேடுகிறது. இவர்கள் குடும்பத்தை சிதைத்து, மேற்கத்திய தோல்வியடைந்த கலாச்சாரத்தின் மிச்ச சொச்சங்களாக தமிழகத்தில் மிளிர்கிறார்கள். 

இதன் பின் விளைவுதான், இசை ராஜேஸ்வரி, கிருபா முனுசாமி உட்பட பல பெண்கள். இது போன்ற தலைவர்களை தொடக்கத்திலேயே தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு வீட்டிலும் கற்பு காற்றில் பறக்காமல் இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு எல்லாம், ராமாயண காலத்தையது என சிலர் கூறலாம். இது போல் சிந்திப்பது, ஹிந்துத்துவா வெறியர்களின் வேலை எனவும் சிலர் கூறலாம். 

ஆனாலும், கற்புக்கரசி என கண்ணகியை அழைக்கும் தமிழ் சமுதாயம், கண்ணகிக்கு கோவில் கட்டி வணங்கும் தமிழ் சமுதாயம், அவள் கதையை கூறும் சிலப்பதிகாரத்தை, தமிழன்னையின் ஆபரணமாக பாவிக்கும் தமிழ் சமுதாயம், பியூஷ் மனுஷின் கூற்றை ஏற்கிறதா? மனிதர்களும், நாய்களும் ஒன்றா? யார், யாருடனும் உறவு கொள்ளலாம் என்பது தான், நம் தமிழ் கலாச்சாரமும், பண்டை இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளனவா என்ற பல கேள்விகளுக்கு, அவர்களின் ஆதரவாளர்கள் பதில் கூற வேண்டிய நேரம் இது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close