அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்: ‛ஹக் யுவர் பேரன்ட்ஸ்’

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2019 04:21 pm
hug-your-parents-special-story

உலகில், காதலர் தினம், நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவது போல், தற்போது, அன்னையர் தினம், தந்தையர் தினமும் பிரபலமாகி வருகிறது. பிரபலம் என்றால், வெறும் ஆடம்பரத்திற்காக இல்லாமல், உண்மையிலேயே, அன்றைய தினம், தங்கள் அன்னை, தந்தையை, குழந்தைகள் வெகுவாக பாராட்டி அன்பு மழையில் நனைய வைக்கின்றனர். 

கருவை வயிற்றில் சுமந்து, அதற்கு உயிர் கொடுத்து, தன் உதிரத்தை பாலாக்கி, அதை உணவாக்கி குழந்தையின் உடல் வளர்த்தி அன்னையை, கடவுளுக்கும் மேல் என்றால் நிச்சயம் தகும். தன் மனைவி, குழந்தை, குடும்பம் என எல்லாேரது சந்தோஷத்திற்காக, சந்தோஷம் என்ற வார்த்தையையே தொலைத்துவிட்டு, இரவு பகலாய் உழைக்கும் தந்தைக்கு எத்தனை வணக்கம் வைத்தாலும் போதாது. 

ஆண் பிள்ளையால், அவனுக்கு வீரம் ஊட்டியும், பெண் பிள்ளையானால், அவளுக்கு பாசத்தை ஊட்டியும் வளர்க்கும் தந்தையின் பொறுப்புணர்ச்சி, ராணுவ வீரனின் கடமைக்கு ஒப்பானது. வள்ளுவன் முதல் இக்கால புதுக்கவிஞர் வரை, அன்னை, தந்தையை புகழ்ந்தும், அவர்களின் பெருமையை பாராட்டியும் பாட்டியற்றாமல் இருந்ததில்லை. 

பெற்றோர் பெருமையைக் கூற, இந்துக்கள் முதற்கடவுளாக வணங்கும் விநாயகரின் செயலே சாட்சி. ஞானப் பழத்தை பெற, உலகம் சுற்றி வர வேண்டும் என்ற போது, தாய், தந்தையரே உலகம் எனக் கூறி, அவர்களை வலம் வந்து பழத்தை பெற்றார், விநாயகர். 

சாதாரண குடிமகன் முதல் உலகை காக்கும் கடவுள் வரை, அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம், பெற்றோரை மதித்தலும், அவர்களை பேணுதலும் ஆகும். அப்படிப்பட்ட பெற்றோரை, கட்டி அணைத்து முத்தமிட்டு மகிழ்வோம். ‛ஹக் யுவர் பேரன்ட்ஸ்’

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close