ஊருக்கு போக வழி தெரியாதவன் ஏழு பேருக்கு வழி சொன்னானாம்!

  பாரதி பித்தன்   | Last Modified : 08 Aug, 2019 07:38 pm
special-article-about-dmk-tmc-poltical-alliance

திமுக, கருணாநிதி, ஒரு பொருள் தரும் இரு வார்த்தைகள் என்று சொன்னால், கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோர் இருவர் அல்ல ஒருவர் என்றே கூறலாம். கருணாநிதி, தனது  மனசாட்சி முரசொலி மாறன் என்று கூறி உள்ளார்.

பன்முக ஆளுமை கொண்டவராக கருணாநிதி இருந்தாலும், அவர் நேரடியாக மத்திய அரசியலில் இறங்கவில்லை. ஒரு கட்டத்தில், நீங்கள் பிரதமராக வருவீர்களா என்று கேட்ட போது, என் உயரம் எனக்கு தெரியும் என்றவர் அவர்.

மாநில அரசியலை கருணாநிதி கவனித்து கொண்டார். மத்திய அரசியலை, முரசொலி மாறன் பார்த்துக் கொண்டார். இதனால், திமுக மத்தியிலும், மாநிலத்திலும் நிலையாக தடம் பதிக்க முடிந்தது. மாறன் மறைவுக்கு பினனர், கருணாநிதியின் பலத்தில் பாதி குறைந்தது.

மாறன் இடத்திற்கு அவர் மகன் தயாநிதியை அமர்த்தினார் கருணாநிதி. ஆனால், அவர் பெற்ற வளர்ச்சியை கருணாநிதியால் யூகிக்க கூட முடியவில்லை. இதனால், அவர்கள் இடையே ஊடல் ஏற்பட்டது. இதனால், திமுகவிற்கு லாபமோ இல்லையோ, தமிழகத்திற்கு மேலும் சில சேனல்கள் புதிதாக கிடைத்தது. 
அதன் பின்னர்  முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் மத்திய அரசியலில் களம் இறங்கியும், கருணாநிதி எண்ணத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

கருணாநிதிக்காக தான் ஓட்டு என்ற நிலையில் இருந்த அவராலேயே, மத்திய அரசியலுக்கு தகுதியான நபரைத் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் பார்த்தால், ஸ்டாலினை நினைத்து பரிதாப்படத்தான் வேண்டி இருக்கிறது.

ஸ்டாலினை சுற்றி இருப்பவர்கள் தான் அவரை துாக்கி சுமக்கிறார்கள். இன்றைக்கு, ஸ்டாலினை சுற்றி இருப்பவர்களை பார்த்தால், எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியான செல்வாக்கு இருக்கிறது. 

இதனால், மத்திய அரசியலில் ஸ்டாலின் யாரை நம்பி ஈடுபட வைத்தாலும், அவருக்கு ஏமாற்றமே ஏற்படும். இந்த காரணத்தால் அவரே நேரடியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப, மத்திய அரசில் பாஜக. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்தில் திமுக உள்ளது. அதற்கு பிறகு தான் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளது.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு தலைவரே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் உயிரே திமுக கொடுத்தாக இருக்கிறது. மத்தியில் பாஜகவை எதிர்க்க வேண்டிய கட்சியை தேடிக்கொண்டே இருக்க வேண்டிய இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான், நீட் தேர்வாக இருக்கட்டும், அரசியல் சட்ட 370வது பிரிவாக இருக்கட்டும், இந்த நாட்டை பாதிக்கும் எல்லா விவகாரத்தையும், திமுக தாங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த களத்தில்தான் திமுக மத்தியில் ஆதரவு தேடி, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.

அந்த அடிப்படையில், முதல் கூட்டு மம்தா தான். அடுத்த ஆண்டு மேற்கு வங்களத்தில் தேர்தல் வர இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் பலர் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியை விட்டு விலகி பாகஜவில் சேர்ந்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், மம்தாவிற்கு உள்ளூர் ஆட்சியை இழக்க வேண்டி வரும். இந்த வீழ்ச்சியை தடுக்க அவரும் தன்னை தேசிய அரசியல்வாதியாக காட்ட வேண்டிய நிலை உள்ளது.

இப்படிதான் திமுக, மம்தா சேர்ந்துள்ளனர். ஊருக்கு போக வழி தெரியாதவன் ஏழு பேருக்கு வழி சொன்னானாம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

தேசிய அரசியலை வழிநடத்தும் அளவு அனுபவமும் திறமையும் இல்லாத ஸ்டாலினும், சொந்த மாநிலத்திலேயே செல்வாக்கு இளந்துள்ள மம்தாவும் அரசியல்  கூட்டு சேர்த்துள்ளது சிரிப்பை வரவழைக்காமல் வேறு என்ன செய்யும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close