கணவன் துணையோடு தானே காமத்தை வென்றாக வேண்டும்!

  பாரதி பித்தன்   | Last Modified : 29 Aug, 2019 05:02 pm
special-article-about-actor-sivakumar-speech

மருத்துவத்தில் சர்வரோக நிவாரணி என்று சில மருந்துகளை குறிப்பிடுவார்கள். என்ன வியாதி என்றாலும் அது தான் தீர்க்கும். அதைப் போலவே, சமுதாயப் பிரச்னைகளுக்கு சர்வரோக நிவாரணி நடிகர்கள். ஒரு காலகட்டத்தில், நடிகனுக்கு வீடு இல்லை என்று கூறிய தமிழ் சமுதாயம், நாட்டையே கொடுத்த பின்னர், அவர்களுக்கு உண்மையிலேயே அறிவு இருக்கிறது போல என்று நம்பத்தொடங்கி விட்டார்கள். விளைவு சமுதாயப் பிரச்னைகளுக்கு இவர்கள் சர்வரோக நிவாரணியாக மாறிவிட்டார்கள்.

ரஜினி, கமல்,விஜயகாந்த், விஜய், பாக்கியராஜ்,மன்சூர் அலிகான்   என்று மிகப் பெரிய தனிநபர் பட்டியல் வாசிக்கலாம். இன்னொரு புறம், குடும்ப பட்டியல் என்றால் சிவக்குமார் குடும்பத்தார்களை கூறலாம். இதில் ரஜினி, கமல், மன்சூர் அலிகான் போன்றவர்கள் களத்தில் இறங்கி அல்லது கரையில் நின்று பார்த்துவிட்டு கருத்து சொல்வார்கள். ஆனால் சிவக்குமார் குடும்பத்தார் கருத்து மட்டும் சொல்வார்கள்.

நடிகர் சிவக்குமார் சமீபத்திய உரையில் 'கல்லை எடுத்து காலில் மிதித்து, உளியில் செதுக்கி, அந்த கல்லை  கடவுளாக உருவாக்கும் சிற்பி, அதே சிலையை கோயிலில் வைத்து கும்பாபிஷேகம் செய்து விட்டால், அவருக்கும் அந்த சிலைக்கும் உறவோ, உரிமையோ இல்லை என்பது அயோக்கியத்தனம் என்று பேசி உள்ளார். சிறந்த நடிகர் என்பதால், இவர் கூறும் கருத்துக்கள் எல்லாம் சிறப்பாக அமைந்து விட வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது.

மிகக் கடினமான விஷயங்களை, காமம் எளிதாக விளக்கி விடும். அதனால், சிவக்குமார் கூறிய சிற்பியின் கருத்தை காமத்துடன் ஒப்பிட்டு பார்ப்போம்.

ஒரு குழந்தை பெற்று வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பது, அல்லது ஓடிப் போனாலோ, இழுத்துக் கொண்டு வந்தாலோ, அவர்களை பாராட்டி ஆதரிப்பது பெற்றோர் கடமை. மகன், அல்லது மகள் ஒவ்வொரு நாள் வளர்ச்சியிலும் தாய், தந்தை படும் கஷ்டம் எடுத்து சொல்ல முடியாது. 

சிவக்குமார் வார்த்தைக்களில் சொல்ல வேண்டும் என்றால், உயிருள்ள சிலை வடிக்கும் சிற்பி பெற்றோர். இத்தனை உரிமை கொண்ட தந்தை, அல்லது தாய், தான் உருவாக்கிய மகள், மகனுக்கு கணவன், மனைவியாக முடியாது. எவ்வளவு அதிகம் என்றாலும், கடன்பட்டாவது தன் மகன், மகள் காமனை வெல்ல வரதட்சணை கொடுத்து யாரோ ஒருவனைத்தான் பிடிக்க வேண்டும். 

மூன்று முடிச்சு போட்டாலும், மோதிரம் மாற்றினாலும் அதன் பின்னர் அவளக்கு தான் அந்த பெண் உடமையாவாள். பெற்றோரின் கஷ்டத்தை பார்க்கும் போது, தாலி கட்டியவன் எதுவுமே செய்யவில்லை. இத்தனைக்கும், அவன் விலை கொடுத்து வாங்கப்பட்ட பொலிகாலைதான். இந்த பொலி காளைக்கு பதிலாக தந்தையே மகளை , தாயே மகனை திருமணம் செய்து கொள்ளலாமே என்று கேட்கிறார். நியாயம் தானே.

ஆன்மீக ரீதியில் சிலைக்கும், இறைவன் வடிவத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. கும்பாபிஷேகத்தை பார்க்க சென்றவர்கள் யாகசாலை பூஜையை சென்று பாருங்கள். அங்கு கலசத்தில் இருந்து மூலவர் சிலை வரை தர்ப்பையால் செய்யப்பட்ட கயிறு செல்லும். அதன் வழியாகயாக யாகசாலையில் உச்சரிக்கும் மந்திரங்கள் அனைத்தும் சிலை மீது சென்று சேரும்.

யாகசாலை பூஜையின் நிறைவில், கலசத்தில் உள்ள மந்திரங்கள் உருவேற்றப்பட்ட நீர் கும்பம், சிலை அனைத்திற்கும், அபிஷேகம் செய்யப்படும். அதன் பின்னர் தான், அந்த சிலை இறைவடிவம் பெறும். அதன் கீழ் சம்பந்தப்பட்ட யத்திரங்கள் பதிக்கப்பட்டு இருக்கும். இவை அனைத்தும் ஒலி அதிர்வுகள் தொடர்புடையவை.

இவ்வாறு தயாரான கடவுள் சிலையை பூசிக்க செல்லும் பூசாரி, அல்லது அர்ச்சகர் ஒவ்வொரு முறையும் அந்த கடவுளை, தன் மீது அந்த தெய்வத்தை ஏற்றிக் கொண்டுதான் பூஜை செய்ய முடியும். அவ்வாறு செய்வதற்கும் ஏகப்பட்ட நிபந்தனைகள், பயிற்சி போன்றவை உள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளாக இவை அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு, வழிவழியாக வந்துள்ளது. இடையில் நாம் இது ஏன் அவாள் செய்ய வேண்டும், கடவுளுக்கு சமஸ்கிரதம், அரபி தான் தெரியுமா அடியேன் மொழி தெரியாதா என்று கேள்வி எழுப்பு வது அபத்தம்.

இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது அசதி ஏற்படலாம். பைத்தியகாரத்தனமாக தோன்றலாம். இதே உயிர், மெய், உயிர் மெய் எழுத்துக்களை வைத்து சரோஜாதேவி எழுதினால், அசதிக்கு பதிலாக  ஆண்மை எழுகிறது. கண்கள் சொக்குகிறது காமத்தால். இதே வேறு பாடுதான் மந்திரங்களுக்கும்.

மதம் மாறிய கிறிஸ்தவர்கள் சிறந்த கிறிஸ்தவர்கள் என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. அதாவது பராம்பரிய கிறிஸ்தவர்கள் தங்கள் மதம் மீது நம்பிக்கை இழந்திருப்பார்கள். அதே போல தான் இந்துக்களும், தங்கள் மதம் பற்றி அறியாமல், அறிந்து கொள்ள விரும்பாமல் வாழ்ந்துவிட்டனர். இந்த அறியாமைதான் சிவக்குமார் குடும்பத்தாருக்கு முதலீடு. அவர்களால் புதிய கல்விக் கொள்கையா, ஆன்மீகமா, ஐடி தொழிலா எதைப்பற்றியும் எளிதில் கருத்து சொல்ல முடிகிறது.

ஆனால் சமுதாயம் இப்படியே இருந்து விடாது. கட்டாயம் சிலர் எதிர்விளைவில் ஈடுபடுவார்கள். அந்த சூழ்நிலையில் தற்போது மார்க்கெட் இழந்துவிட்ட சிவக்குமார் குடும்பத்தார் மேடையையும் இழக்க வேண்டி வரலாம்.

பொதுவாக மேடைகளை வியாசர் பீடம் என்று குறிப்பிடுவார்கள். மேடையில் பேசுபவர் வியாசருக்கு இணையானவர். அப்படிப்பட்டவரின் வாய்வார்த்தைகள் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும். அதுதான் அனைவரும் எதிர்பார்ப்பது. எயிட்ஸ் வராமல் தடுக்க பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, நிரோத் அணிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கருத்தடை சாதனங்கள் விற்பனையை உயர்த்தியதைப் போல சிவக்குமார் குடும்பத்தினர் பேச்சு உள்ளது. இதை கேட்க வேண்டும் என்பது விதி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close