குழந்தையின்  ஊட்டச்சத்து பற்றிய பொதுவான கட்டுக்கதைகள்!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 07:06 pm
general-myths-about-child-nutrition

குழந்தை வளர்ப்பில் அநேக நேர்மறை கருத்துக்களும், எதிர்மறை கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. பெற்றோர்களின் கருத்துக்கள் அல்லது மூட நம்பிக்கைகள் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த கூடும். அத்தகைய கட்டுக்கதைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பது தெரியும்!

குழந்தைகளுக்கு சுவை விருப்பத்தேர்வுகள் உள்ளன, ஆனால் உணவில் குறிப்பிட்ட தேர்வுகள் இல்லை. எனவே, குழந்தைகளின் சுவை விருப்பங்களின் அடிப்படையில், காலப்போக்கில் ஆரோக்யமான உணவுப் பழக்கத்தை வளர்ப்பது எளிது.  நல்ல ஆரோக்யமான உணவுகளை குழந்தைகளோடு பெற்றோர்களும் அமர்ந்து உண்ணும் பொழுது, தானாகவே குழந்தைகள் நல்ல உணவு பழக்கத்தை கற்றுக்கொள்வார்கள். அதோடு மளிகை பொருட்களின் தேர்வில் குழந்தைகளை ஈடுபடுத்தி, ஆரோக்யமான உணவு பொருட்கள் எவை என்பதை அறியவைக்கலாம்.

அடிக்கடி சாப்பிடுவது ஆரோக்யமானதாக இருக்கும்!

குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால், அது அவர்களின் வளர்ச்சியை முன்னேற்றும் என்பது தவறான கருத்து. உண்மை என்னவென்றால், ஆரோக்கியமான உணவுப் பழக்கம்: உணவு உண்ணும் நேரம், பசியின் படி சாப்பிடுவது, ஆரோக்கியமான சிற்றுண்டி மற்றும் சீரான உணவு போன்றவை வளர்ச்சியை  தீர்மானிப்பவை. அடிக்கடி சிற்றுண்டி மற்றும் அதிகப்படியான உணவு உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளை பிற்காலத்தில் ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளுக்கு மூன்று முறை ஆரோக்யமான  உணவும், ஒரு வேளை ஆரோக்கியமான சிற்றுண்டியும் போதுமானதாக இருக்கும்.

பழச்சாறு குழந்தைகளின்  உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்? 

சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவை கலந்த பானங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை.  சர்க்கரை கலந்த  பானங்களுடன் ஒப்பிடும்போது,  இது ஒரு முழு பழத்தை பரிமாறுவது போல் ஆரோக்கியமானதல்ல. ஆரோக்கியமான உடலுக்கு ஃபைபர் மிகவும் முக்கியமானது. இது பழச்சாற்றில் கிடைப்பதில்லை. எனவே பழச்சாறு குடிப்பதை விட பழம் சாப்பிடுவதால் ஆரோக்ய நன்மைகள் அதிகம். 

குழந்தைகளுக்குத் தெரியாமல் ஆரோக்யமான பொருட்களை உண்ணச் செய்யுங்கள்?

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உணவில் காய்கறிகளையும் பிற ஆரோக்யமான பொருட்களையும் ரகசியமாக மறைத்து உண்ண செய்கின்றனர்.  இது குறுகிய காலத்தில் வேலை செய்யக்கூடும் என்றாலும், அவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள இது தடையாகவே அமையக் கூடும். 

அதிக சர்க்கரை என்றால் அதிக ஆற்றல் அளவுகள் என்று பொருள்?

அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது உண்மையில் ஆரோக்யத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது. இது 'சர்க்கரை போதைக்கு' வழிவகுக்கும்.  இது குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும். இந்த போதை எரிச்சல், மனநிலை மாற்றங்கள், செயல்பாட்டு நிலைகளில் மாற்றங்கள் போன்றவற்றை உருவாக்கும். ஆகவே, குழந்தைகளின் சர்க்கரை உட்கொள்ளல் அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும், மேலும் சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதை ஊக்குவிக்கக்கூடாது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close