ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் திராவிட கட்சிகள்!

  பாரதி பித்தன்   | Last Modified : 17 Sep, 2019 04:21 pm
article-about-school-education-in-tamilnadu

சுதந்திரம் வாங்கியதில் இருந்து பள்ளிகளில் தேர்வில் தோல்வி பயம் மாணவர்களுக்கு நிரந்தரமாக இருந்தது. படிக்காத பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துவர முன்னாள் முதல்வர் காமராஜர் கூட மதிய உதவு திட்டத்தை தான் அமல்படுத்தினார். 

தேர்வு முறையில் எந்தவிதமான மாற்றமும் அவர் கொண்டு வரவில்லை. கடந்த2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற திட்டம் அமலானது. மாணவர்கள் மனம் வாடி விடும், பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றெல்லாம் அனைவருக்கும் தேர்ச்சி என்ற முறையை அமல்படுத்த காரணம் சொல்லப்பட்டது. 

கல்வித்துறை எப்போதும் அரசு, தனியார், அரசு தனியார் இணைப்பு என்று 3 பிரிவாக செயல்படுகிறது. இதில் அரசு நடத்தும் கல்வி நிலையங்களில் மாணவர்கள் ஏழை எளியவர்களாகவும், ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும் உள்ளனர். தனியார், அரசு இணைந்து நடத்தும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தானே சிறிது அடிப்படை அறிவும், ஆசிரியர்களும் அரசு ஆசிரியர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள். 

தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ பெற்றோருக்கு பணம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் அறிவுடன் இருக்கிறார்களோ, இல்லையோ அடிமையாக தயாராக இருக்கும் மன நிலை வேண்டும்.

கல்வித்துறையின் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால் இந்த 3 அமைப்புகளிலும் அதன் தாக்கத்தை எதிர்நோக்க வேண்டும்.

தனியார் நிறுனவனங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை மட்டும் கொண்டு செயல்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் இது போன்ற எந்த இலக்கும் இல்லாத காரணத்தால் பெரும்பாலான ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

எதுவுமே தெரியாமல் 9ம் வகுப்பு வரை வந்து அமர்கிறார்கள். சாதாரண கணக்கு தெரியாவன், தாய் மொழியை தடுமாறாமல் எழுதத் தெரியாவதவன் 9ம் வகுப்பில் வந்து அடுத்த ஆண்டே பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த சூழ்நிலையில் அரசு மாணவர்கள் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அதில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்று ஆய்வு செய்தால், கல்வி எவ்வளவு தொய்வு பெற்று இருக்கிறது என்று தெரியும்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் உழைப்பு உழைப்பு என்று பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதையும் தாண்டி தகுதியற்று இருந்தால் ஓரே ஆண்டில் கணக்கு முடித்து வெளியே அனுப்பபடுவார்கள்.

ஆனால் அரசு ஆசிரியர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசியர்கள் எந்த அளவிற்கு பணியாற்றுகிறார்கள். அவர்கள் 5ம்  வகுப்பில் வெளியேற்றும் மாணவர்களின் தகுதி எப்படி இருக்கிறது. அதற்கு அந்த ஆசியர்கள் எந்தளவுக்கு பொறுப்பேற்கிறார்கள். நல்லாசிரியர் விருது பெற்றும் ஆசிரியர்கள், எந்தளவிற்கு தங்கள் மனசாட்சிப்படி வேலை செய்கிறார்கள். 

மாணவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை கல்விதான் தேவை. ஆனால் பிளஸ் 2 முடிந்த பின்னர் 2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி முடித்தால் தொடக்க கல்வி ஆசிரியர்களாக மாறிவிடலாம். அதிலும் வீதிகள் தோறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனஎங்கள், அவற்றில் தேர்ச்சி பெறுவதற்கு கூட ஆயிரக்கணக்கான முறைகேடுகள். பிஎட் சேர்க்கையில் வகுப்புக்கு கூட போகத் தேவை இல்லை என்ற சூழ்நிலை, பல லட்சம் லஞ்சம் கொடுத்தால் அரசு ஆசிரியர் வேலை என்று ஒட்டுமொத்த கல்வியை சீரழித்தது திராவிட கட்சிகள்.

அதன் விளைவு, ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்தால் தேர்ச்சி பெறுபவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம். இதற்கு மாற்றாக கல்வி கற்பிப்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு பதிலாக, தேர்வே வேண்டாம் என்ற கூக்குரல்.

5ம் வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் அறிவை சோதிப்பதை விட ஆசிரியர்களை வேலை வாங்க செய்வதற்கு அறிமுகம் செய்வது. பொதுத் தேர்வு வேண்டாம், நீட் தேர்வு வேண்டாம், தேர்வே வேண்டாம் என்று கூச்சல் போடும் கட்சிகள், தரத்தை எப்படி சோதிக்க வேண்டும் என்று கூறுவதே இல்லை.

இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய பெற்றோர் தான். இவர்களால் பிள்ளைகளை சிபிஎஸ்சி பள்ளிகளில் படிக்க வைக்கவும் முடியாது. இலவசமாக படிக்க வைக்க நவோதயா பள்ளிகளை நடத்தவும் விடமாட்டார்கள்.. வேறு வழியில்லாமல் அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும். 

விளைவு வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதற்கு இந்த கட்சிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காது. சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழங்கள் ஒன்று கூட முன்னணி இடத்தில் இல்லை என்கிற சூழ்நிலையில் மத்திய அரசு கல்வியை உயர்த்த சில நடவடிக்கைகளை எடுக்கிறது. 

அதனை எதிர்கிறோம் என்று ஏழைகள் வாழ்க்கையை முன்னேற்றவிடாமல் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close