காதலிக்க மறுத்த 16 வயது சிறுமையை  பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் காதலன் உட்பட 4 பேர் கைது!

  கண்மணி   | Last Modified : 21 Sep, 2019 01:56 pm
four-arrested-for-molesting-a-minor

தூத்துக்குடியில் 16 வயது சிறுமி அவளது முன்னாள் காதலன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில்  உள்ள விலதிகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும், அதே  பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்.   இந்நிலையில் அந்த  இளைஞர்  விலதிகுளத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன்  பழகுவதை அறிந்த அந்த சிறுமி  இளைஞனுடனான உறவை முறித்து கொண்டுள்ளதாக தெரிகிறது. 

 பின்னர் கடந்த வியாழக்கிழமை, சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட  அந்த  இளைஞன் தனிமையில்  சந்தித்து பேச வேண்டும் என அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பி ஊருக்கு  வெளியே வந்த சிறுமியை அவளது முன்னாள் காதலன்  மற்றும் அவனின்  3 நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அறிந்த பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராமலிங்கம், சுரேஷ்குமார், அழகு  ராஜ் மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது  செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close