ஆள்மாறாட்டத்திற்கு யார் பொறுப்பு?

  பாரதி பித்தன்   | Last Modified : 28 Sep, 2019 03:05 pm
special-article-about-neet-fraud

அனைவருக்கும் பள்ளிக் கல்வி, அவர்களில் சிறந்தவர்களுக்கு உயர் கல்வி என்பது தான் ஒரு நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும். அதற்காக தான், உயர் கல்வி குறிப்பாக தொழிற்கல்வியில் இத்தனை வடிகட்டல்கள். மக்கள், எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, மத்திய, மாநில அரசுகள் பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், அதை அமல்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள், அதனை கேளிக்கூத்தாக மாற்றிவிடுகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், எதிர்கட்சிகள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். அதையும் மீறித்தான் தேர்வுகள் நடத்தப்பட்டன.  வெளிமாநிலத்தில் ஹைடெக் சமாச்சாரத்தை பயன்படுத்தி பிட் அடிக்கவே, அதற்கு அடுத்த ஆண்டு நிர்வாணமாக அனுப்பாத குறைதான் தேர்வு எழுத அவ்வளவு கெடுபிடி காட்டினார்கள்.

இந்த முறை ஆள்மாறாட்ட புகார் எழுந்துள்ளது. யாரோ ஒருவர் வயிற்றெச்சலில் புகார் கொடுக்காவிட்டால் நம்ம தம்பி படிச்சு டாக்டராக வெளியே வந்து இருப்பார். யாருக்கும் தெரியவே தெரியாது. அந்த அளவிற்கு தேர்வு நடத்துபவர்கள், மருத்துவபல்கலைக்கழகம், சம்பந்தப்பட்ட கல்லுாரி இடையே ஒற்றுமை உள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வெங்கடேசன். இவர் மகன் உதித்சூர்யா(20). இவர் நீட் தேர்வின் போது ஆள்மாறட்ட முறைகேடு செய்து, தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்துள்ளார். யாரே ஒரு புண்ணியவான் வயித்தெறிச்சலில் இது குறித்து இ–மெயிலில் புகார் தட்டி விட, தேனி அரசு மருத்துவ கல்லுாரி நிர்வாகம் சோம்பல் முறித்து எழுந்து புகார் செய்துள்ளது. 

இல்லாவிட்டால் 3 இடியட்ஸ் (நண்பன்) படத்தில் நடிகர் விஜய் படித்து முடித்து வெளியே வந்து அந்த பெயரில் முட்டாள் ஒருவன் இன்ஜினியராக இருப்பார் அல்லவா அதே போல நடந்து இருக்கும்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரிக்க தொடங்கியதும், ஒரு மாணவி உட்பட 3 பேர் ஆள்மாறாட்டப் புகாரில் சிக்கி உள்ளனர்.  அதாவது வாய்ப்பு வசதி கொண்டவர்கள் தேர்வே எழுதாமல் மருத்துக்கல்லுாரியில் இடம் பிடித்துள்ளனர். மற்றவர்கள் பட்ட சிரமம் அறிந்தால் இந்த ஊழல் பாதிப்பு எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. மத்திய அரசின் நடவடிக்கை தோல்வியடைய அமல்படுத்துபவர்கள் தான் காரணம்.

இதனிடையே பெரிதாக கவனத்தை கவராமல் ஒரு தகவல் கடந்து சென்றது. அது கணிப்பொறி இயக்குனர் தேர்வு, அதன் முடிவுகள், அனைத்தும் ரத்துசெய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு எதற்கு நடத்தப்பட்டது. அதனை ரத்து செய்துவிட்டு தேவையை எப்படி சமாளிக்கப் போகிறார்கள். தேர்வு நடத்திய செலவு,அதற்காக விண்ணப்பதார்கள் செய்த செலவு ஆகியவற்றை யார் தரப் போகிறார்கள் என்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை.

இப்படி அதிகாரிகள் தரப்பில் பொறுப்பு இல்லாமல் இருப்பதால் தான், அரசின் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்துவதில் சிக்கல் எழுகிறது.இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகு சொற்பம் என்பதால் மற்றவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆள்மாறாட்டம், தேர்வு ரத்து போன்ற சம்பவங்களில் அதற்கு காரணமாக அதிகாரிகள் மீது எடுக்கப்படும்  அனைத்து விதமான நடவடிக்கைகளும் மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். அது மற்ற அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்படுத்துவதுடன், மக்கள் மனதில் அரசு மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்.    

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close